வழிகாட்டுதல்

குடியேற்ற அகற்றல் மையத்தைக் கண்டறிதல்

குடியேற்ற அகற்றல் மையம் அல்லது குறுகிய கால தங்க வைக்கும் மையத்தில் உள்ள ஒருவரை நீங்கள் சந்திக்கலாம்.

ஒரு கண்ணோட்டம்

குடியேற்ற அகற்றல் மையம் அல்லது குறுகிய கால தங்க வைக்கும் மையத்தில் உள்ள ஒருவரை நீங்கள் சந்திக்கலாம்.

மையத்தில் பின்வருவனவற்றை அறிந்து கொள்ளவும்:

  • வருகை நேரங்கள் என்ன?
  • நீங்கள் ஒரு சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டுமெனில்
  • உங்களுக்கு என்ன அடையாள சான்று (ID) தேவை
  • உங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் பொருட்கள் - உங்களின் வருகையின் போது நீங்கள் பரிசோதிக்கப் படலாம்.

தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது வீடியோ அழைப்பு மூலம் தடுப்பு மையத்தில் உள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து அறிந்து கொள்ள குடியேற்ற அகற்றல் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

புரூக் ஹவுஸ், கேட்விக்

புரூக் ஹவுஸ் குடியேற்ற அகற்றல் மையம்
பெரிமீட்டர் ரோடு சவுத்
லண்டன் கேட்விக் ஏர்போர்ட்
கேட்விக்
RH6 0PQ

புரூக் ஹவுஸின் தொடர்பு விவரம்

மின்னஞ்சல்: gatwickirc.visitsbooking@serco.com(வருகைகளை ஏற்பாடு செய்ய)

மின்னஞ்சல்: practiceplusgrp.brookhouse@nhs.net (மருத்துவ பதிவுகளைக் கோர)

தொலைபேசி: 01293 566 500 (வருகைகளை ஏற்பாடு செய்ய)

தொலைநகலி : 01293 566 580 அல்லது 01293 566 581

அழைப்பு கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்

புரூக் ஹவுஸிற்கு வருகை

வங்கி விடுமுறை நாட்கள் உட்பட,  வாரத்தில் 7 நாட்களும் புரூக் ஹவுஸ் திறந்தே இருக்கும். நீங்கள் காலை 8 மணி தொடங்கி மாலை 7 மணி வரை குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.

பார்வை நேரங்கள்:

  • திங்கள் முதல் வியாழன் வரை, மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை
  • வெள்ளி, மதியம் 2:30 மணி முதல் இரவு 9 மணி வரை
  • சனி மற்றும் ஞாயிறு, மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

இந்த மையம் ஒவ்வொரு நாளும் மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மூடப்படும். கடைசி அனுமதி மாலை 4:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை

நீங்கள் எடுத்து வர வேண்டியவை

நீங்கள் வருகை தரும் போது, ​​உங்களது அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

அடையாளச் சான்று

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

  • ஓட்டுநர் உரிமம்

  • கடவுசீட்டு (பாஸ்போர்ட்)

  • பிறப்புச் சான்றிதழ்

  • அடையாள அட்டை

  • பயண ஆவணங்கள்

முகவரி சான்று

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

  • அத்தியாவசிய வீட்டுசசேவை ரசீது

  • வங்கிகணக்கு விவர அறிக்கை

  • பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய சமீபத்திய கடிதம்

முகவரி சான்றாக ஓட்டுநர் உரிமத்தைப் நீங்கள் பயன்படுத்த முடியாது.

புரூக் ஹவுஸுக்குச் சென்றடைதல்

டின்ஸ்லி ஹவுஸில் ஒரு நிறுத்தத்துடன் அட்லாண்டிக் ஹவுஸிலிருந்து புரூக் ஹவுஸுக்கு இலவச பேருந்து சேவை உள்ளது. பிக்-அப் பாயிண்ட் அட்லாண்டிக் ஹவுஸுக்கு முன்புறமாக காட்விக் தெற்கு முனையத்திற்கு வெளியே உள்ளது. உங்கள் வருகையை முன்பதிவு செய்யும் போது பேருந்து நேரங்கள் பற்றி அல்லது பிக்-அப் ஏற்பாடு செய்வது எப்படி என்பது குறித்து நீங்கள் கேட்கலாம்.

இங்கே தளத்தில் ஒரு இலவச கார் பார்க்கிங் வசதி உள்ளது. நீங்கள் ஒரு சாட்நாவை பயன்படுத்தினால், பெரிமீட்டர் ரோடு சவுத் என்ற தெருப் பெயரைப் பயன்படுத்தவும், அஞ்சல் குறியீட்டை பயன்படுத்த வேண்டாம்.

கோல்ன்புரூக், மிடில்செக்ஸ்

மின்னஞ்சல்: HARVisits@mitie.com (சட்ட ரீதியான வருகைகளை ஏற்பாடு செய்ய - சட்ட வல்லுநர்களுக்கு மட்டும்)
மின்னஞ்சல்: HIRCDomesticVisits@mitie.com (சமூக வருகையை ஏற்பாடு செய்வதற்காக)
மின்னஞ்சல்: practiceplusgrp.healthcareheathrowirc@nhs.net (மருத்துவ பதிவுகளைக் கோருவதற்கு)
தொலைபேசி: 020 8607 5200

கோல்ன்புரூக் குடியேற்ற அகற்றல் மையம்
கோல்ன்புரூக் பைபாஸ்
ஹார்மண்ட்ஸ்வொர்த்
வெஸ்ட் டிரேட்டன்
மிடில்செக்ஸ்
UB7 0FX

வருகை நேரம் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. கடைசி அனுமதி நேரம் இரவு 8.30 மணிக்கு.

உங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று (கடவுச் சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)
  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை  வழங்குநரின் ரசீது.

மையத்திற்கு ரயில் அல்லது பேருந்தில் எப்படி செல்வது என்பதைக் கண்டறிந்து கொள்ளவும்.

டெர்வென்ட்சைடு, டர்ஹாம் கவுண்டி

மின்னஞ்சல்: Derwentside.visits@serco.com (பொது வருகைகளுக்கு)
மின்னஞ்சல்: DerwentsideIRC@practiceplusgroup.com (உடல்நல பராமரிப்புக்காக)
தொலைபேசி: 01207 260221

டெர்வென்ட்சைடு குடியேற்ற அகற்றல் மையம்
கோர்பிரிட்ஜ் ரோடு
கான்செட்
டர்ஹாம் கவுண்டி
DH8 6QY

வருகை நேரம் தினந்தோறும் காலை 9 மணி முதல் நண்பகல் வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை.

உங்களது பார்வையிடல் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு புகைப்பட அடையாள அட்டை (கடவுச் சீட்டு , ஓட்டுநர் உரிமம், ஐரோப்பிய சமூக அடையாள அட்டை) அல்லது பின்வருவனவற்றில் ஏதெனும் இரண்டை கொண்டு வர வேண்டும்:

  • பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்

  • புகைப்படத்துடன் கூடிய ரயில் அல்லது பேருந்து பயணச் சீட்டு

  • வேலையளிப்பர் வழங்கிய அடையாள அட்டை அல்லது மாணவர் அட்டை

  • இளம் நபருக்கான வயதுச் சான்று அட்டை

  • தொழிற்சங்க உறுப்பினர் அட்டை

  • உள்ளூர் அதிகாரசபையால் வழங்கப்பட்ட மூத்த குடிமக்கள் பயணச் சீட்டு

  • நீங்கள் நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதைக் காட்டும் பெனிஃபிட் புத்தகம்

  • உள்துறை அலுவலக விண்ணப்பப் பதிவு அட்டை

டர்ஹாம் பேருந்து அல்லது ரயில் நிலையத்திலிருந்து டெர்வென்ட்சைடுக்கு இலவச ஷட்டில் பேருந்து மற்றும் டாக்ஸி சேவை உள்ளது. உங்கள் வருகையை முன்பதிவு செய்யும் போது இது குறித்து கூடுதல் தகவல்களைக் கேட்கவும்.

டங்கவேல் ஹவுஸ், தெற்கு லானார்க்க்ஷயர்

மின்னஞ்சல்: dungavel.visits@mitiecc.com (சட்டப்பூர்வ வருகைகள் உட்பட அனைத்து வருகைகளையும் ஏற்பாடு செய்ய)

மின்னஞ்சல்: dungavelhc@lanarkshire.scot.nhs.uk (மருத்துவ பதிவுகளைக் கோருவதற்கு)

தொலைபேசி: 01698 395 000

டங்கவேல் ஹவுஸ் குடியேற்ற அகற்றல் மையம்
ஸ்ட்ராதவன்
சவுத் லானார்க்க்ஷயர்
ML10 6RF

சட்டப்பூர்வ வருகை நேரம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் நண்பகல் வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை.

சமூக வருகை நேரம்:

  • திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணி தொடங்கி இரவு 9 மணி வரை

  • சனி மற்றும் ஞாயிறு அன்று காலை 9 மணி தொடங்கி நண்பகல் வரை மற்றும் பிற்பகல் 1 மணி தொடங்கி இரவு 9 மணி வரை

உங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வரும் புகைப்படதுடன் கூடிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் (கடவுச் சீட்டு , ஓட்டுநர் உரிமம், ஐரோப்பிய சமூக அடையாள அட்டை) அல்லது பின்வருவனவற்றில் ஏதேனும் இரண்டை கொண்டு வர வேண்டும்:

  • பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்

  • புகைப்படத்துடன் கூடிய ரயில் அல்லது பேருந்து பயணச் சீட்டு

  • வேலைக்கு அமர்த்துபவர் வழங்கிய அடையாள அட்டை அல்லது மாணவர் அட்டை

  • இளம் நபரின் வயதுச் சான்று அட்டை

  • தொழிற்சங்க உறுப்பினர் அட்டை

  • உள்ளூர் அதிகாரசபையால் வழங்கப்பட்ட மூத்த குடிமக்கள் பயணச் சீட்டு

  • நீங்கள் நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதைக் காட்டும் பெனிஃபிட் புத்தகம்

  • உள்துறை அலுவலக விண்ணப்பப் பதிவு அட்டை

அருகிலுள்ள பேருந்து அல்லது ரயில் நிலையத்தில் இருந்து டங்கவேல் ஹவுஸுக்கு இலவச டாக்ஸி சேவை உள்ளது. உங்கள் வருகையை முன்பதிவு செய்யும் போது இதை பற்றி கேளுங்கள்.

ஹார்மண்ட்ஸ்வொர்த், மிடில்செக்ஸ்

மின்னஞ்சல்: HARVisits@mitie.com (சட்ட ரீதியிலான வருகைகளை ஏற்பாடு செய்ய - சட்ட வல்லுநர்களுக்கு மட்டும்)

மின்னஞ்சல்: HIRCDomesticVisits@mitie.com (சமூக வருகையை ஏற்பாடு செய்ய)

மின்னஞ்சல்: practiceplusgrp.healthcareheathrowirc@nhs.net (மருத்துவ பதிவுகளைக் கோருவதற்கு)

தொலைபேசி: 020 8607 5200

ஹார்மண்ட்ஸ்வொர்த் குடியேற்ற அகற்றல் மையம்

கோல்ன்புரூக்-பை-பாஸ்

ஹார்மண்ட்ஸ்வொர்த்

வெஸ்ட் டிரேட்டன்

மிடில்செக்ஸ்

UB7 0HB

வருகை நேரம் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. கடைசி  வருகை நேரம் இரவு 8.30 மணிக்கு.

உங்களது வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் எடுத்துக்கொண்டு வர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று  (கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)

  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை ரசீது

இந்த மையத்திற்கு ரயில் அல்லது பேருந்தில் சென்றடைவது எப்படி  என்பதைக் கண்டறிந்து கொள்ளவும்.

லார்ன் ஹவுஸ் குறுகிய கால தங்கவைப்பு மையம், அன்ட்ரிம்

தொலைபேசி: 028 9433 4346

லார்ன் ஹவுஸ் குறுகிய கால தங்கவைப்பு மையம்,
2 ஹோப் ஸ்ட்ரீட்
லார்ன்
அன்ட்ரிம்
BT40 1UR

வருகை நேரம் தினம்தோறும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை - நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டுவர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)
  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை  வழங்குநரின் ரசீத

மான்செஸ்டர் குறுகிய கால தங்கவைப்பு மையம்

தொலைபேசி: 0161 509 2015

மான்செஸ்டர் குறுகிய கால தங்கவைப்பு மையம்
பில்டிங் 302
ஆர்கோசி டிரைவ்
வேர்ல்ட் ஃபிரைட் டெர்மினல்
மான்செஸ்டர் ஏர்போர்ட்
M90 5PZ

வருகை நேரம் நாள்தோறும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)
  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை ரசீது.

உலக சரக்கு முனையத்திற்கு (வேர்ல்ட் ஃபிரைட் டெர்மினல்) சைகை குறியீடுகளை பின்தொடரவும். பில்டிங் 302 சாலையின் வலது புறத்தில் உள்ளது.

ஸ்வின்டெர்பி குறுகிய கால தங்கவைப்பு மையம்

தொலைபேசி: 01522 302665

ஸ்வின்டெர்பி குறுகிய கால தங்கவைப்பு மையம்
பார்க் கிரசண்ட்
ஈகிள்ரோடு
ஸ்வின்டெர்பி
லிங்கன்
LN6 9HU

வருகை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் எடுத்துக்கொண்டு வர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)
  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை ரசீது.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஸ்வின்டெர்பி

நியூவார்க் நார்த்கேட் (9 மைல் தொலைவிலும்) அல்லது லிங்கன் (12 மைல் தொலைவிலும்) அமைந்துள்ளது.

டின்ஸ்லி ஹவுஸ், கேட்விக்

டின்ஸ்லி ஹவுஸ் குடியேற்ற அகற்றல் மையம்
பெரிமீட்டர் ரோடு சவுத்
கேட்விக் ஏர்போர்ட்
கேட்விக்
வெஸ்ட் சசெக்ஸ்
RH6 0PQ

கேட்விக் புறப்படுவதற்கு முந்தைய தங்குமிடம் (டின்ஸ்லி ஹவுஸின் ஒரு பகுதி)
பெரிமீட்டர் ரோடு சவுத்
கேட்விக் ஏர்போர்ட்
கேட்விக்
வெஸ்ட் சசெக்ஸ்
RH6 0PQ

டின்ஸ்லி ஹவுஸின் தொடர்பு விவரம்

மின்னஞ்சல்: gatwickirc.visitsbooking@serco.com (வருகைகளை ஏற்பாடு செய்ய)

மின்னஞ்சல்: practiceplusgrp.brookhouse@nhs.net (மருத்துவ பதிவுகளைக் கோருவதற்கு) தொலைபேசி: 01293 434 800

தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

டின்ஸ்லி ஹவுஸிற்கு வருகை

டின்ஸ்லி ஹவுஸ் வங்கி விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும். நீங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வருகை நேரம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை.

இந்த மையம் நாள்தோறும் மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மூடப்படும். இறுதி அனுமதி நேரம் மாலை 4:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை

நீங்கள் எடுத்து வர வேண்டியவை

நீங்கள் வருகை தரும் போது, ​​உங்களது அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

அடையாளச் சான்று

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

  • ஓட்டுநர் உரிமம்
  • கடவுசீட்டு (பாஸ்போர்ட்)
  • பிறப்புச் சான்றிதழ்
  • அடையாள அட்டை
  • பயண ஆவணங்கள்

முகவரி சான்று

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

  • அத்தியாவசிய வீட்டுசசேவை ரசீது
  • வங்கிகணக்கு விவர அறிக்கை
  • பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய சமீபத்திய கடிதம்

முகவரி சான்றாக ஓட்டுநர் உரிமத்தைப் நீங்கள் பயன்படுத்த முடியாது.

டின்ஸ்லி ஹவுஸை சென்றடைதல்

புரூக் ஹவுஸில் ஒரு நிறுத்தத்துடன் அட்லாண்டிக் ஹவுஸிலிருந்து டின்ஸ்லி ஹவுஸுக்கு ஒரு இலவச பேருந்து சேவை உள்ளது. பிக்-அப் பாயிண்ட் அட்லாண்டிக் ஹவுஸுக்கு முன்பாக, கேட்விக் சவுத் டெர்மினலுக்கு வெளியே உள்ளது. உங்கள் வருகையை முன்பதிவு செய்யும் போது பேருந்து நேரங்கள் அல்லது பிக்-அப்பை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது பற்றி நீங்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.

இங்கே தளத்தில் ஒரு இலவச கார் பார்க்கிங் வசதி உள்ளது. நீங்கள் ஒரு சாட்நாவை பயன்படுத்தினால், பெரிமீட்டர் ரோடு சவுத் என்ற தெருப் பெயரைப் பயன்படுத்தவும், அஞ்சல் குறியீட்டை பயன்படுத்த வேண்டாம்.

யார்ல்ஸ் வுட், பெட்ஃபோர்ட்ஷையர்

மின்னஞ்சல்: yarls-wood-visitors-centre@serco.com (வருகைகளை ஏற்பாடு செய்ய)
மின்னஞ்சல்: yarlswoodirc.healthcare@nhs.net (மருத்துவ பதிவுகளைக் கோருவதற்கு)
தொலைபேசி: 01234 821 000

யார்ல்ஸ் வுட் குடியேற்ற அகற்றல் மையம்
ட்வின்வுட்ஸ் பிசினஸ் பார்க்
தர்லீ ரோடு
மில்டன் எர்னஸ்ட்
பெட்ஃபோர்ட்
MK44 2FQ

வருகை நேரம் நாள்தோறும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

நீங்கள் குறைந்தது ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வர வேண்டும்:

  • புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று  (கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம்)
  • உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உள்ள அத்தியாவசிய வீட்டுச்சேவை வழங்குனரின் ரசீது

பெட்ஃபோர்ட் ரயில் நிலையத்திற்கும் யார்ல்ஸ் வுட்டுக்கும் இடையில் பேருந்து சேவை உள்ளது.

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 31 ஜனவரி 2025
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 11 பிப்ரவரி 2026 show all updates
  1. Added a Tamil translation.

  2. Added a Latvian translation.

  3. Added phone number for Larne House in Kurdish Sorani.

  4. Added translations for Kurdish Sorani and Tigrinya.

  5. Added Punjabi translation.

  6. Yarl's Wood, Bedfordshire: updated the email address for requesting medical records.

  7. More translations have been added.

  8. Added translation

Print this page