உலகச் செய்தி

யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான உலக உச்சி மாநாட்டை கொழும்பிலுள்ள, பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அனுஷ்டிக்கிறது

யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான உலக உச்சி மாநாடு லண்டனில் நடைபெறுகையில், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், அந்த உச்சி மாநாட்டை ஜூன், 11, புதன்கிழமையன்று வெஸ்ட் மினிஸ்டர் இல்லத்திலான ஒரு நிகழ்வில் அனுஷ்டித்தது. நிகழ்வானது –காணொலிகள், அரங்க நிகழ்வுகள் மற்றும் ஒரு கலந்துரையாடலை உள்ளடக்கியிருந்ததுடன், அவை உலகம் முழுவதிலுமாகவுள்ள 70க்கும் மேற்பட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்கள் பங்குபற்றிய உலக உச்சி மாநாட்டு அஞ்சலின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
A forum theatre performance by the Abina Academy

A forum theatre performance by the Abina Academy

நிகழ்விலான நிகழ்ச்சிகள் மரிஸ்ஸா ஜோன்ஸ் மற்றும் அசோக் பெர்ரே ஆகியோர்களால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களின் உண்மையான இரண்டு வாக்குமூலங்ளின் வாசித்தல்கள்; கிராஸ்ரூட்டட் டிரஸ்ட் அமைப்பின் ஜனக செல்வராஜ் என்பவரினாலான ஒரு ஓரங்க நாடகம்; மற்றும் அபினா அக்கடமி என்பதினாலான ஒரு அரங்க நாடக நிகழ்வு என்பவற்றை உள்ளடக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மக்கட்தொகை நிதியத்தின் அலெய்ன் சைபிளெனர், கலாநிதி. சேப்பாலி கொட்டேகொட, நிறைவேற்றுப் பணிப்பாளர்,பெண்கள் மற்றும் ஊடக ஒன்றியம் மற்றும் டேவிட் குயின்சென், தூதுக்குழுத் தலைவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோர்களால் தலைமை தாங்கப்பட்ட ஒரு குழுநிலைக் கலங்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வில் பேசும்போது, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின் கூறியது:
“பாலியல் வல்லுறவும் மற்றும் பாலியல் வன்முறையும் யுத்தத்தின் தவிர்க்க முடியாத செயற்பாடுகளல்ல, அவை நிறுத்தப்பட்டு தடுக்கப்பட வேண்டிவையாகும். இங்கு அடிப்டைப் பிரச்சினை நீதி பற்றிய ஒன்றாகும். இந்தக் குற்றங்கள் ஒவ்வொரு முறையும் நடைபெறும் போதும் உலகம் எதனையுமே செய்யவில்லை, பாதிக்கப்படுபவர்கள் நைஜீரியாவின் பாடசாலைச் சிறுமிகளோ அல்லது சிரியாவின் அகதிகளோவாயினும்; பாலியல் வன்முறயை ஒரு குற்றவிலக்களிப்போடு பயன்படுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டு விட்டது.” “… யுத்த மோதல்களின் போதான பாலியல் வன்முறை கட்டுப்படுத்தப்படுவதற்கு மிகவும் பாரிய மற்றும் சிக்கலான ஒரு பிரச்சினை என நாம் ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கிறோம். அடிமை வியாபாரம் அல்லது சட்ட விரோத ஆயுத வர்த்தகம் என்பவற்றுக்கும் இதே கருத்து சொல்லப்பட்டது. மக்கள் அபிப்பிராயங்கள் எழுப்பப்பட்டால் அரசாங்கங்கள் தங்களை விரைந்து செயலாற்றச் செய்யும், மாற்றம் விரைவானதாக இருக்கும். இது இப்பொழுது நடைபெறுகின்றது என்பதற்கு சான்றுகள் உள்ளன. அனைத்து உலக நாடுகளின் முக்காற் பங்கிற்கும் அதிகமான, 150 நாடுகள், யுத்த மோதல்களில் பாலியல் வன்முறைய முடிவுறுத்துவதற்கான ஒரு பற்றுறுதிப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த வாரம், அந்த நாடுகளின் குழுவில் நைஜீரியா மற்றும் பர்மா ஆகிய இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்கள் இணைந்துள்ளதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சிடைகிறேன்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை மீதான தங்களது சட்டங்களை சர்வதேச நியமங்களுடன் இணங்கியதாக கொண்டு வருவதற்கு அனைத்து நாடுகளையும் நாங்கள் கேட்போம். யுத்த வலய பாலியல் வன்முறைகள் என்னவென்பதைப் புரிந்து அவற்றைத் தடுப்பதற்கு அனைத்துப் படைவீர்ர்கள் மற்றும் அமைதி காக்கும் படைவீர்ர்கள் ஆகியோர் பயிற்றுவிக்கப்படுவதற்கு நாங்கள் கோருவோம். அத்தோடு பாலியல் வன்முறைகளுக்கு மன்னிப்பை ஒரு போதும் வழங்க வேண்டாமென நாடுகளை நாங்கள் வலியுறுத்துவோம். ஆனால், அரசாங்க நடவடிக்கைகள் மட்டும் போதுமாவையல்ல. பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையாக முழுமையான சமூகங்களாக, அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகள் மற்றும் சிவில் சமூகம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து பணியாற்றுதல் வேண்டும். மேலும், பாதிக்கபட்டவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்தல் வேண்டும் என்பதோடு நீதி நிலை நாட்டப்படுவதை நாங்கள் உறுதி செய்தல் வேண்டும். இது செயலாற்றுவதற்கான தருணம்.”

பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரின் விசேட தூதுவர் அஞ்சலினா ஜூலி ஆகியோர் லண்டனில் நேற்று யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான உலக உச்சி மாநாட்டை தொடக்கி வைத்தனர். மாநாடு 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தான அரசாங்கங்கள், 900க்கும் மேற்பட்ட நிபுணர்கள், அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், நம்பிக்கைத் தலைவர்கள், மற்றும் உலகம் முழுவதிலுமிருந்தான சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களை வரவேற்றது. இது, இந்த விடயம் மீதான முன்னொரு போதுமில்லாத மிகப் பெரிய சர்வதேச மாநாடாகும். இது, யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கும் மற்றும் இந்தக் குற்றத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கையை எடுப்பதற்குமான உலகத்தின் பற்றுறுதியை வெளிக்காட்டியது. யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள் தங்களது வாழ்க்கைகளையும் மற்றும் சமூகங்களையும் மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பதற்காக வெளியுறவுத்துறைச் செயலர் மேலுமொரு £6 மில்லியன் நிதியை உறுதியளித்தார்.

Introductory speech by the British High Commissioner

Photos of the event can be viewed in our flickr account.

Veteran actress Anoja Weerasinghe speaks about sexual violence in Sri Lanka

A forum theatre performance by the Abina Academy on sexual violence

வெளியிடப்பட்ட தேதி 12 June 2014