உலகச் செய்தி

யுத்த மோதலில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவது தொடர்பான உலக உச்சி மாநாடு மீது பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் அறிக்கை

யுத்த மோதலில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையை ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
The Global Summit to End Sexual Violence in Conflict took place in London from 10-13 June 2014.

The Global Summit to End Sexual Violence in Conflict took place in London from 10-13 June 2014.

ஏனைய நாடுகளைப் போன்றே, இலங்கையிலும் யுத்த மோதல்களில் பாலியல் வன்முறை நடவடிக்கைகளுக்கு தண்டனை விலக்களிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு தேவையுள்ளது.
சிறுவர்கள் அதைப் போன்றே பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட, பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கப்படுவதற்கான ஒரு தேவையும் அங்கேயுள்ளது.
யுத்த மோதலில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான உலக உச்சி மாநாடு லண்டனில், பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் அஞ்சலினா ஜூலி ஆகியோரினால், ஜூன் 10-13 திகதிகளில் நடாத்தப்பட்டது. இந்த மாநாடு 128 நாடுகள், 79 அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் 8 முகவரமைப்புகளின் தலைமைகள், அதே போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயங்கள் என்பவற்றிலிருந்தான தலைவர்கள் மற்றும் வழக்குரைஞர்களால் பங்குபற்றப்பட்டது. இலங்கை உட்பட, யுத்த மோதல்களானால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து 300க்கும் அதிகமான பிரதிநிதிகளும் அங்கு கலந்து கொண்டனர். யுத்தகால பாலியல் வல்லுறவு மற்றும் அதைச் சூழ்ந்துள்ள தண்டனை விலக்களிப்புக் கலாச்சாரம் பற்றிய தடைகளை தகர்த்தெறிவதற்கான தேவை இருந்த காரணத்தினால் இந்த உச்சி மாநாடு நடாத்தப்பட்டது. அத்தகை குற்றங்களுக்கு ஆளான பெண்கள் மற்றும் அனைத்துப் பாதிக்கப் பட்டவர்களுக்குமான நீதியே, அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்தக் குற்றங்கள் நிகழ்கையில் உலகம் எதுவுமே செய்யாதிருப்பது, பாலியல் வன்முறைகள் தண்டனை விலக்களிப்புடன் புரியப்படக்கூடிய ஒரு முன்னுதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்படக் கூடிய உறுதியான மற்றும் நடைமுறை ரீதியான நடவடிக்கைகள், மற்றும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்கு தனியே அரசாங்கள் மட்டுமன்றி பெண்கள் குழுக்கள், சிவில் சமூகம் மற்றும் நம்பிக்கைச் சமூகங்கள் என்பவற்றின் வகிபாகங்கள் என்பவை மீதும் மாநாடு கவனம் செலுத்தியது. இந்த லண்டன் உச்சி மாநாடு இரண்டு பிரதான குறிக்கோள்களைக் கொண்டிருந்தது: யுத்தத்தின் ஒரு ஆயுதமாக பாலியல் வல்லுறவை உபயோகித்தலுக்கான தண்டனை விலக்களித்தலைக் கையாள்வதற்கு நடைமுறை ரீதியான நடவடிக்கைக்கு இணங்கிக் கொள்ளுதல், மற்றும் இந்தக் குற்றங்களுக்கான உலகின் மனோபாவத்தை மாற்றுவதற்கு ஆரம்பித்தல், என்பவை அவையாகும்.
உச்சி மாநாட்டில் https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/ file/319958/Global_Summit_to_End_Sexual_Violence_Statement_of_Action__1_.pdf, எனும் நடவடிக்கைக்கான ஒரு அறிக்கையைக் கைச்சாத்திடுவதற்கு அரசுகளும் மற்றும் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டமையானது, இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒரு உறுதியான நிலையைப் பகிர்வதில் அரசாங்கங்கள், ஐ.நா முகவரமைப்புகள், சிவில் சமூகம், நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களை ஒற்றுமைப்படுத்தியது.
மாநாடானது, யுத்த மோதலில் பாலியல் வன்முறையின் ஆவணப்படுத்துதல் மற்றும் புலன்விசாரணை தொடர்பான https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/ file/3 19054/PSVI_protocol_web.pdf, முதலாவது விருப்புரிமைசார் உடன்பாட்டு வரைவேற்பாட்டையும் வெளியிட்டு வைத்தமையானது, வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் எதிர்காலக் குற்றமிழைப்பவர்களை தடுத்தல் என்பவற்றிலான தடைகளை வெற்றிகொள்ளும் முகமாக சாட்சிகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், மிகவும் வலுவான சாத்தியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்களை எவ்விதம் திரட்டுவது என்பதில் சர்வதேச தர நியமங்களையும் நிர்ணயிக்கிறது.
அவர்களது கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில், பாலியல் வன்முறை விடயங்கள் மீது கவனம் செலுத்துவதை உறுதிசெய்வதற்கு எதிர்பார்த்து, இராணுவத்துக்கு பயனுறுதியான பயிற்சி உட்பட, பாதுகாப்பு மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்களுக்கு பிரதிநிதிகள் இணங்கிக் கொண்டனர். போருக்குப் பிந்திய நிலைமைகள் உட்பட, பாதுகாப்பு மற்றும் நீதித்துறைகள் என்பவற்றில் பெண்களின் முனைப்பான ஈடுபாட்டின் முக்கியத்துமும் கூட அங்கு இனங் காணப்பட்டது.
பாதிக்கப்பட்டுப் பிழைத்த பெண்கள். ஆண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஆகியவர்களுக்கான ஆதரவளித்தலின் தேவை தொடர்பான ஒரு இணக்கப்பாடும் அங்கு காணப்பட்டது. மீள் வலுவளித்தல் மற்றும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுதலைத் தவிர்த்தல் என்பவற்றை உறுதிசெய்வதற்கு யுத்த மோதலில் பாலியல் வன்முறைக்கான பதிலிறுத்தல் நடவடிக்கைளின் மையமாக பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்கள் இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களுக்கு உளச் சமூக உதவி, வாழ்வாதார உதவி மற்றும் இருப்பிடம், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் என்பன கிடைக்கும்படியானவையாகவும் மற்றும் தாமதமற்றவையாகவும் இருப்பதை அரசாங்கங்களும் உறுதிசெய்தல் வேண்டும். பாலியல் வல்லுறவுகளில் சிக்கிப் பிழைத்தவர்களுக்கான உதவிகளுக்கு ஐக்கிய இராச்சியம் £6 புதிய நிதியளித்தலை அறிவித்ததுடன், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பின்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியங்கள், ஜப்பான், பஹரின் மற்றும் ஏனைய நாடுகளும் கூட தாராளமான உதவிகளுக்கு உறுதியளித்தன.
யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான இந்தப் பிரகடனம், உலக நாடுகளான 155 நாடுகளின் முக்காற் பங்கிற்கும் அதிகமான நாடுகளால் தற்போது கைச்சாத்திடப் பட்டுள்ளது, இந்த நாடுகளானவை, மோதல்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்ட பர்மா, நைஜீரியா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளையும் உள்ளடக்குகின்றதுடன், அவற்றின் அரசாங்கங்கள் தற்போது பாலியல் வன்முறை மீது நடவடிக்கை எடுப்பதற்கும் உறுதியாகத் தீர்மானித்துள்ளன. சர்வதேசத் தர நியமங்களுடன் இணங்கியதாக பயனுறுதியான உள்நாட்டு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக, யுத்த மோதல்களில் பாலியல் வன்முறைப் பிரச்சினைகள் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து நாடுகளும் பங்களிப்பதற்கு முடியும். இந்த விடயத்தில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் ஊக்குவிப்பதுடன், யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தற்போது தீர்மானித்துள்ள ஏனைய அனைத்து நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொள்ளுமாயின் அதனை நாங்கள் வரவேற்போம்.

வெளியிடப்பட்ட தேதி 3 July 2014