உலகச் செய்தி

இலங்கையில் இராணியின் அஞ்சலோட்டக் கோல்

மாட்சிமை தாங்கிய இராணியின் செய்தி பொதுநலவாயத்தைச் சுற்றி பயணிக்கின்றது

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
The Queen’s Baton Relay unites the two billion citizens of the Commonwealth in a celebration of sport, diversity and peace.

The Queen’s Baton Relay unites the two billion citizens of the Commonwealth in a celebration of sport, diversity and peace.

2014 இல் கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, இராணியின் அஞ்சலோட்டக் கோல் இலங்கைக்கு வந்தடைந்ததை, ஒக்டோபர் 19, 2013, சனிக்கிழமை அன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் கொண்டாடியது. பிரிட்டிஷ் கவுன்சிலின் “இணைக்கும் வகுப்பறைகள்” செயல் திட்டத்திலிருந்து பதினாறு சிறுவர்கள், பொதுநலவாயத்தின் பதினாறு விழுமியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடனும் மற்றும் கிளாஸ்கோவிலிருந்தான அஞ்சலோட்ட அணி கொழும்பின் மையத்திலுள்ள சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி ஓடுவதுடனும் வைபவங்கள் ஆரம்பமாகியது.

இதனைத் தொடர்ந்து, பிரித்தனிய உயர் ஸ்தானிகரது வாசஸ்தலமான, வெஸ்ட் மினிஸ்டரில், தேசிய ஒலிம்பிக் குழு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஓர் ஊடக மாநாடு நடைபெறும் என்பதோடு, அங்கு தபால் மா அதிபர் இந்த நிகழ்வினை நினைவு கூரும் வகையில் ஓர் முதல் நாள் உறையையும் வெளியிட்டு வைத்தார். ஊடக மாநாட்டின் பின்னர் ஓர் வரவேற்பு விழா நடாத்தப்பட்டதுடன், அதில் 2012 பொதுநலவாயக் கட்டுரைப் போட்டியின் இறுதி வெற்றியாளரான ஷெனுக்க கொரேரா, அஞ்சலோட்டப் புத்தகத்தில் கையொப்பமிட்டார், இப்புத்தகம் இராணியின் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றும் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும்.

வைபவத்தில் கலந்து கொண்டவர்களுள் விளையாட்டுத்துறைக்கான அமைச்சர் கௌரவ மகிந்தானந்தா அளுத்கமகே, தபால் சேவைகளுக்கான அமைச்சர் கௌரவ ஜீவன் குமாரதுங்க மற்றும் தபால் சேவைகளுக்கான பிரதி அமைச்சர் கௌரவ. சனத் ஜயசூரிய ஆகியோரும் அடங்குவர்.

இராணியின் அஞ்சலோட்டக் கோல் என்பது பொதுநலநலவாய விளையாட்டின் ஒலிம்பிக் தீபத்திற்கு சமனான ஒரு அம்சமாகும். அது எதிர்வருகின்ற விளையாட்டுப் போட்டிகளைக் கட்டியம் கூறுகின்றதுடன், மாட்சிமை தாங்கிய இராணியிடமிருந்து கையால் எழுதப்பட்ட ஒரு செய்தியையும் கொண்டிருக்கும். இச்செய்தி, பொதுநலவாயப் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் மாட்சிமை தாங்கிய இராணியால் அல்லது அவரது பிரதிநிதியால் உத்தியோகபூர்வமாக உரத்து வாசிக்கப்படும்.

நிகழ்வில் பேசிய, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின் கூறியது: “இராணியின் அஞ்சலோட்டக் கோல் பொதுநலவாயத்தின் இரண்டு பில்லியன் மக்களை விளையாட்டு, பன்மைத்துவம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஒரு கொண்டாட்டத்தில் இணைக்கின்றது. கோல் ஒவ்வொரு தடவையும் கைமாறும் போது, அது பொதுநலவாய நாடுகள் மத்தியில் உறுதியாக இருக்கின்ற நட்புறவினை மீளவலியுறுத்துகின்றது.
அஞ்சலோட்டக் கோல், இங்கே, கொழும்பில் உள்ளதினால், அதனை, இலங்கைக்கு வரவேற்பதில் நாம் குறிப்பாக மகிழ்ச்சி அடைகிறோம். நவெம்பர் 2007 இல் பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தில், கிளாஸ்கோவில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டினூடாக ராஜதந்திரம் மற்றும் வேறுபாட்டின் மூலமாக ஐக்கியம் எனும் செய்தியைத் தாங்கி, பல்தன்மையான பிராந்தியங்களூடாக அதாவது பொதுநலவாயங்களில் பயணிப்பதினால், இராணியின் அஞ்சலோட்டக் கோல் அணிக்கு அனைத்து சிறப்புகளுக்குமாக நாம் வாழ்த்துகிறோம்”. 2014 கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான இராணியின் அஞ்சலோட்டக் கோல், பக்கிங்காம் மாளிகையில் ஒக்டோபர் 9, 2013 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோலை முதலாவதாக ஏந்திச் சென்றவர், 1980 மாஸ்கொ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்கொட்லாந்து வீர்ர் அலன் வெல்ஸ் என்பவராவர். 288 நாட்களுக்கும் மேலான அஞ்சலோட்டத்தில், கோலானது, ஆசியா, ஓசெனியா, ஆபிரிக்கா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் கரிபியன் ஆட்சிப் பகுதிகளினூடாக, 190,000 கி.மீ இற்கும் அதிகமாக பிரயாணித்து, பொதுநலவாயத்தின் போட்டியிடும் அனைத்து 70 நாடுகள் மற்றும் ஆட்சிப் பகுதிகளுக்கும் விஜயம் செய்யும். கோலின் பயணம் ஜூலை 23, 2014 அன்று, விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் முடிவடையும்.

இராணியின் அஞ்சலோட்டக் கோல் ஒக்டோபர் 19 – 21 வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் கண்டி என்பவற்றைச் சுற்றி பயணிக்கும். மேலதிக தகவல்களுக்கு, இராணியின் அஞ்சலோட்டக் கோல் தொடர்பாக பிபிசி இன் பின்வரும் வலைப்பூவைத் தொடரவும்: http://www.bbc.co.uk/news/blogs/queens_baton_relay/

வெளியிடப்பட்ட தேதி 23 October 2013