Skip to main content
வழிகாட்டுதல்

இரத்தப் புள்ளி (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026

Applies to England

இந்தச் சிறிய காணொளி புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இரத்தத் துளி ஸ்க்ரீனிங் முறையை விளக்குகிறது.

இரத்தப் புள்ளி

இரத்தத் துளி ஸ்க்ரீனிங் NHS மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆய்வுச் சோதனையின் நோக்கம்

இரத்தப் புள்ளி ஆய்வுச் சோதனையின் நோக்கம் அரிதான ஆனால் பாரதூரமான மருத்துவ நிலைமைகள் பலவற்றில் எதுவும் உங்கள் குழந்தைக்கு உள்ளதா எனக் கண்டுகொள்வதாகும்.

ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தல் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அது பாரதூரமான குறைபாட்டை அல்லது மரணத்தைக்கூடத் தடுக்க முடியும். நீங்கள், குழந்தையின் தந்தை, அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் ஏற்கனவே இந்த மருத்துவ நிலைமைகளில் ஒன்றைப் பெற்றிருந்தால், தயவுசெய்து உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருக்கு உடனடியாகச் சொல்லவும்.

இந்த மருத்துவ நிலைமைகள் பற்றியது

அரிவாள் உயிரணு நோய் (Sickle cell disease)

யூகேயில் பிறந்த 2,800 குழந்தைகளில் ஏறத்தாழ 1வருக்கு ஒரு அரிவாள் உயிரணு நோய் (sickle cell disease- SCD) உளள்ளது. இவை பாரதூரமான, பரம்பரையான இரத்த நோய்களாகும். அவை உடம்பு அடங்கலும் உயிர்வாயுவைக் கொண்டுசெல்லும் இரத்தத்தின் ஒரு பகுதியான ஹீமோகுளோபின் என்பதைப் பாதிக்கின்றன. SCD உள்ள குழந்தைகளு்க்கு அவர்களது வாழ்வு காலம் முழுவதிலும் சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும்.

 SCD உள்ள மக்களுக்கு பாரதூரமான வலி தாக்குதல்கள் ஏற்படலாம் மற்றும் பாரதூரமான தொற்று நோய்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். (உயிர்வாயுவைக் கொண்டுசெல்வதில் அவர்களது உடம்புகளுக்குக் கடினம் இருக்கும்போது), மக்களுக்கு இரத்தச் சோகையும் ஏற்படலாம். SCD உள்ள குழந்தைகள் ஆரம்ப சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். பாரதூரமான நேயையும் நோய் தொற்றுதல்களையும் குறைப்பதற்கான  தடுப்பூசிகளையும் அண்டிபயொடிக்ஸ் என்பதையும் இந்தச் சிகிச்சை உள்ளடக்குகின்றது.

தடித்த சளியின் தாக்குதல் (Cystic fibrosis)

யூகேயில் பிறந்த 2,500 குழந்தைகளில் ஏறத்தாழ 1வருக்கு சளி தாக்கும் நோய் (cystic fibrosis- CF) உள்ளது.  பரம்பரையாகப் பெறப்படும் இந்த மருத்துவ நிலைமை செரிமானத்தையும் சுவாசப்பையையும் பாதிக்கின்றது. CF உள்ள குழந்தைகளுக்கு எடையை அதிகரித்தல் கடினமாக இருப்பதுடன் அவர்களுக்கு அடிக்கடி மார்பு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. உயர்ந்த-சக்தி தரும் உணவு, மருந்துகள் மற்றும் உடற் சுகமளிப்பு சிகிச்சை (விசியொதெரபி) என்பன மூலமாக CF உள்ள பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்கப்படலாம்.  CF உள்ள பிள்ளைகளுக்கு இன்னும் மிகவும் கடுமையான நோய் ஏற்படக்கூடும் என்றாலும், ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தல் நீண்ட கால, ஆரோக்கியமான வாழக்கையை வாழ்வதற்கு அவர்களுக்கு உதவலாம்.

பிறப்பிலிருந்து  தைரொயிட் சுரப்பி குறைபாடு (Congenital hypothyroidism)

யூகேயில் பிறந்த 2,000 குழந்தைகளில் ஏறத்தாழ 1வருக்கு பிறப்பிலிருந்து தைரொயிட் சுரப்பி குறைபாடு (congenital hypothyroidism - CHT ) உள்ளது. CHT உள்ள குழந்தைகளுக்கு போதுமான அளவு ஹோர்மோன் தைரொக்ஜின் இருப்பதில்லை. தைரொக்ஜின் இல்லாமல், குழந்தைகள் சரியான முறையில் வளர்வதில்லை. அவர்களுக்கு நிரந்தரமான பாரதூரமான உடல்ரீதியான பிரச்சினைகளும் கற்றல் குறைபாடுகளும் ஏற்படலாம்.

 CHT உள்ள குழந்தைகளுக்கு தைரொக்ஜின் மாத்திரைகள் மூலமாக ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்கப்படலாம். இது எதிர்பார்க்கப்பட்டவாறு அவர்கள் விருத்தியடைவதற்கு அவர்களுக்கு உதவும்.

பரம்பரையிலான உணவு சக்தியாதல் ஒழுங்கீனம் (Inherited metabolic diseases)

உணவு சக்தியாதல் ஒழுங்கீனம் தொடர்பான ஒரு மருத்துவ நிலைமை உங்கள் குடும்பத்தில் எவருக்கும் இருந்ததா என உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருக்குத் தெரிவித்தல் முக்கியமாகும். பரம்பரையிலான உணவு சக்தியாதல் ஒழுங்கீன மருத்துவ நிலைமைகள் (inherited metabolic diseases- IMDs) தொடர்பாக குழந்தைகளுக்கு ஆய்வுச் சோதனை செய்யப்படுகின்றது.

இவை:

  • வெனில்கெரொனுறிய (PKU)
  • மீடியம்-செயின் அசில்-கோஆ டீஹைட்றொஜெனெசி டெவிசென்சி (MCADD)
  • மேபிள் சிறப் யூறின் டிசீஸ் (MSUD)
  • ஐசொவலெறிக் அசிடெமிய (IVA)
  • குலுரறிக் அசிடுறிய டைப் 1 (GA1)
  • ஹொமொசிஸ்டினுறிய (பிரிடொக்ஜின் அன்றெஸ்போன்சிவ்) (HCU)
  • மரபணு சார்ந்த டைரோசினீமியா வகை 1 (HT1)

யூகேயில் பிறந்த 10,000 குழந்தைகளில் ஏறத்தாழ 1வருக்கு  PKU அல்லது MCADD உள்ளது. மற்ற மருத்துவ நிலைமைகள் அரிதானவை, அவை 100,000 குழந்தைகளில் 1வரிலிருந்து 300,000 குழந்தைகளில் 1 குழந்தைக்கு ஏற்படுகின்றன.

பரம்பரையாகப் பெறப்பட்ட இந்த மருத்துவ நிலைமைகள் உள்ள குழந்தைகளால் அவர்களின் உணவிலுள்ள சில பொருட்களைப் பயன்படுத்த முடியாது.  சிகிச்சை இல்லாமல், இந்த மருத்துவ நிலைமைகளில் சிலவற்றைக் கொண்டுள்ள பிள்ளைகள் திடீரென பாரதூரமான முறையில் சுகவீனமடையலாம்.  இந்த மருத்துவ நிலைமைகளின் குறிகள் வேறுபட்டவை. சில உயிருக்கு ஆபத்தானவை அல்லது பாரதூரமான அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு அவை வழிவகுக்கலாம்.

கவனமான முறையில் நிர்வகிக்கப்பட்ட ஒரு உணவு முறை மூலமாக அவை அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்படலாம். இது ஒவ்வொரு மருத்துவ நிலைமை தொடர்பாகவும் வேறுபட்டது. மேலதிகமான மருந்து இதில் அடங்கலாம்.

ஆய்வுச் சோதனை

உங்கள் பிள்ளை 5 நாட்கள் வயதுடையவராக இருக்கும்போது, ஆராக்கிய பராமரிப்பு தொழிலறிஞர் ஒரு சிறப்பான கருவியைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தையின் குதிக் காலைக் குத்துவார். ஒரு அட்டையில் இரத்த துளிகள் சிலவற்றை அவர்கள் எடுப்பார்கள். சில நேரங்களில் இது 5 நாட்களைக் காட்டிலும் பிந்தியதாக இருக்கலாம். குதிக்கால் குத்துதல் அசௌகரியமக இருக்கக்கூடும். மேலும் உங்கள் குழந்தை அழக்கூடும். உங்கள் குழந்தை சூடாகவும் சௌகரியமாகவும் இருக்கிறார் எனப் பார்த்துக்கொள்வவதன் மூலமாகவும் அவர்களைக் கட்டியணைத்தல் மற்றும் அவர்களுக்கு உணவூட்டுவதன் மூலமாகவும் நீங்கள் உதவ முடியும்.

சிலவேளைகளில், ஒரு இரண்டாவது இரத்தப் புள்ளி மாதிரி தேவைப்படுகின்றது. இது நிகழ்ந்தால், அதற்கான காரணம் விளக்கப்படும். இதனுடைய கருத்து உங்கள் குழந்தைக்கு ஏதோ பிழை உள்ளது என்பதாக இருக்கவேண்டியதில்லை.

உங்கள் குழந்தையின் ஸ்க்ரீனிங் இங்கிலாந்தில் தொடங்கி, இரண்டாவது மாதிரி வேறு நாட்டில் எடுக்கப்பட்டால், அந்த நாட்டில் வழங்கப்படும் நோய்களுக்காக ஸ்க்ரீனிங் செய்யப்படும். இவை இங்கிலாந்தில் வழங்கப்படுபவைகளிலிருந்து மாறுபடலாம்.

சோதனையின் பாதுகாப்பு

இந்தச் சோதனையை வைத்திருப்பது தொடர்பாக ஆபத்துக்கள் எதுவும் இல்லை.

ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்.

பிறந்த குழந்தை தொடர்பான இரத்தப் புள்ளி ஆய்வுச் சோதனை உங்கள் குழந்தைக்குப்  பரித்துரைக்கப்படுகின்றது.

மருத்துவ நிலைமைகள் அனைத்துக்குமாக அல்லது குறிப்பான நிலைமைகளுக்காக மாத்திரம் ஆய்வுச் சோதனையை வைத்திருப்பதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம்.

SCD, CF மற்றும் CHT என்பவற்றுக்குத் தனித்தனியான முறையில் உங்கள் குழந்தையை ஆய்வுச் சோதனை செய்வதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம். IMDs என்பதற்காக உங்கள் குழந்தையை ஆய்வுச் சோதனை செய்ய நீங்கள் விரும்பினால், அவைகள் எல்லாம் சோதிக்கப்படும்.  தனிப்பட்ட IMDs என்பவற்றுக்காக ஆய்வுச் சோதனை வழங்கப்படமாட்டாது.

மருத்துவ நிலைமைகள் எதற்காகவும் உங்கள் குழந்கை்கு ஆய்வுச் சோதனை செய்யப்படுவதை நீங்கள் விரும்பாவிட்டால், அல்லது இந்தச் சோதனை குறித்து உங்களிடம் ஏதாவது கரிசனைகள் இருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவச்சியுடன் உரையாடவும்.

தேவைப்பட்டால், முடிந்தளவு விரைவில் சிகிச்சை ஆரம்பிக்கப்படலாம் என்பதால், ஆரம்பத்தில் செய்யப்படும் ஆய்வுச் சோதனை சிறந்ததாகும். உங்கள் குழந்தைக்கான ஆய்வுச் சோதனை செய்யப்படுவதை நீங்கள் விரும்பாவிட்டால், மற்றும் பிற்பட நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொண்டால், உங்கள் குழந்தை இன்னும் சோதனையைப் பெற்றுக்கொள்ள முடியும். 12 மாதங்கள் வயது வரையிலான குழந்தைகளுக்கு, CF என்பது தவிர்ந்த  எல்லா மருத்துவ நிலைமைகள் தொடர்பாகவும் ஆய்வுச் சோதனை செய்யப்படலாம். CF என்பது 8 வாரங்கள் வயது வரையிலான குழந்தைகளுக்கு மாத்திரம் செய்யப்படலாம்.

சாத்தியமான சோதனை முடிவுகள்

புதிய குழந்தைகளுக்கான இரத்தப் புள்ளி ஆய்வுச் சோதனைகளின் முடிவுகள் ‘நிலைமை சந்தேகிக்கப்படவில்லை’ அல்லது ‘நிலைமை சந்தேகிக்கப்படுகின்றது’ என அறிவிக்கப்படுகின்றது.

ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட மருத்துவ நிலைமைகள் ‘சந்தேகிக்கப்படவில்லை’ என பெரும்பாலான முடிவுகள் காட்டும்.

ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட மருத்துவ நிலைமைகள் ‘சந்தேகிக்கப்படுகின்றன’ எனச் சில முடிவுகள் காட்டும். இதன் கருத்து, உங்கள் பிள்ளைக்கு நிச்சயமாக ஒரு மருத்துவ நிலைமை உள்ளது என்பதல்ல, ஆனால், அது அவர்களுக்கு இருப்பதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளது.

ஒரு மருத்துவ நிலைமை சந்தேகிக்கப்படுகின்றது என ஆய்வுச் சோதனை முடிவுகள் தெரிவித்தால், ஒரு ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர் உங்களைத் தொலைபேசி மூலமாக அல்லது நேரில் தொடர்புகொள்வார். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமாக, இந்த முடிவின் கருத்து என்ன என அவர்கள் விளக்குவார்கள். மேலும், எதையும் நீங்கள் செய்ய வேண்டுமா என அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.

அதிகளவான சோதனைகளுக்காகவும் தேவைப்பட்டால் சிகிச்சையை ஆரம்பிப்பதற்குமாக, உங்கள் குழந்தை சிறப்புப் பயிற்சி பெற்ற  ஒருவருக்குச் சிபார்சு செய்யப்படுவார்.

CF, SCD அல்லது வேறு சிவப்பு  இரத்த அணு மருத்துவ நிலைமையைப் பரம்பரையாகச் சுமக்கக்கூடிய சில குழந்தைகளை இரத்தப் புள்ளி ஆய்வுச் சோதனை கண்டுகொள்கிறது.

இவற்றைக் கொண்டுள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் அவர்களுக்கு மருத்துவ நிலைமை இருப்பதில்லை. இவற்றைக் கொண்டுள்ளவர்கள் ஆரோக்கியப் பிரச்சினைகளை அனுபவிப்பதற்கான ஒரே ஒரு சந்தர்ப்பம் அரிதான நிலைகளிலாகும். அப்போது அவர்களின் உடம்புகள் போதியளவிலான உயிர்வாயுவைப் பெற்றுக்கொள்வதில்லை.  உதாரணமாக, ஒரு மயக்க மருந்தின் கீழ் அறுவைச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்படலாம்.

உங்கள் பிள்ளை ஒரு பரம்பரை மரபணுவைச் சுமப்பவராக இருந்தால், ஒரு ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர் உங்களைத் தொடர்புகொள்வார் அல்லது இதன் கருத்து என்ன என்பதை விளக்குவதற்கு, ஒரு கடிதத்தைத் தபாலில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் குழந்தைக்குச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது, ஆனால் மேற்கொண்டு சோதனைகள் அவருக்குத் தேவைப்படக்கூடும். மரபணுவைச் சுமக்கும் ஒவ்வொருவரையும் ஆய்வுச் சோதனை கண்டுபிடிப்பதில்லை.

எனது சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்

ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட மருத்துவ நிலைமைகளில் ஒன்று சந்தேகிக்கப்பட்டால், ஒரு சிறப்பறிவு உள்ள மருத்துவ குழு உங்களைத் தொடர்புகொள்வார்கள். இதற்கான காரணம் முடிவுகள் பற்றி விளக்கி, உங்கள் குழந்தைக்கு மேற்கொண்டு சோதித்தல் வழங்குவதற்காகவாகும். மேற்கொண்டு வழங்கப்படும் இந்தச் சோதனைகளில் சில விரைவாகச் செய்துகொள்ளப்பட வேண்டும். உங்களைத் தொடர்புகொள்வதற்கான சிறப்பறிவுக் குழுவின் முயற்சிகள் எதையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.

ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட நிலைமைகள் எதுவும் சந்தேகிக்கப்படவில்லை என்றால், 6 வாரங்களுக்குள் நீங்கள் முடிவுகளைக் கடிதம் மூலமாக அல்லது ஹெல்த் விசிட்டரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் உங்கள் குழந்தையின் தனிப்பட்ட பிள்ளை ஆரோக்கிய பதிவேட்டில் (‘சிவப்பு புத்தகம்’) பதிவு செய்யப்பட வேண்டும். தயவுசெய்து அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து, மேற்கொண்டு நியமனங்கள் எதற்கும் அதைக் கொண்டுவரவும்.

ஆய்வுச் சோதனைக்குப் பின்னர், எனது குழந்தையின் இரத்தப் புள்ளி அட்டை மற்றும் தகவல் 

ஆய்வுச் சோதனைக்குப் பின்னர், இரத்தப் புள்ளி அட்டைகள் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு வைத்திருக்கப்பட்டு, பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடும்:

  • முடிவைச் சரிபார்த்துக்கொள்வதற்காக அல்லது உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வேறு சோதனைகளுக்காக (சோதனை முடிவுகள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றால், நீங்கள் தொடர்புகொள்ளப்படுவீர்கள்)
  • ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டத்தை அல்லது இங்கிலாந்தில் ஆய்வுச் சோதனைக்காக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட  நிலைமைகளுக்கான சோதித்தல் முறைகளை மேம்படுத்த உதவுவதற்காக (சோதனை முடிவுகள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றால், நீங்கள் தொடர்புகொள்ளப்படுவீர்கள்)
  • யூகேயிலுள்ள குழந்தைகளினதும் அவர்களது குடும்பங்களினதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கு (இது உங்கள் குழந்தையை அடையாளம் கண்டுகொள்ளாது, மற்றும் நீங்கள் தொடர்புகொள்ளப்படமாட்டீர்கள்)

இதற்கு மேலாக, புதிய குழந்தையின் இரத்தப் புள்ளி ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய தகவல் சேகரிப்பில் பங்குகொள்வதற்காக உங்களை அல்லது உங்கள் பிள்ளையை ஆராய்ச்சியாளர்கள் அழைக்க விரும்புவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. மேலதிக ஆய்வுகள் எதையும் பொறுப்பேற்கும் ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்யப்படுகின்றது என்பதை விளக்குவார்கள். அதன் பின்னர், அந்த ஆய்வில் பங்குகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா என நீங்கள் கேட்கப்படுவீர்கள். மேலதிகமான தகவல் சேகரித்தல் எதிலும் பங்குகொள்ளுதல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்படுவதை நீங்கள் விரும்பாவிட்டால், தயவுசெய்து உங்கள் மருத்துவச்சிக்குத் தெரிவிக்கவும்.

இரத்தப் புள்ளி அட்டைகளைப் பயன்படுத்தல் அனைத்தும் நடைமுறை விதி  என்பதால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆராய்ச்சி எதுவும் ஒரு சுதந்திரமான ஆராய்ச்சி நெறிமுறைகள் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்.