Skip to main content
வழிகாட்டுதல்

தொற்று நோய்கள் (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026

Applies to England

கர்ப்பத்தின்போது தொற்று நோய்களுக்காக ஆய்வுச் சோதனை செய்தல் எதற்காக முக்கியமானது என இந்தச் சுருக்கமான உயிரோவியம் விளக்குகின்றது.

தொற்று நோய்கள்

தொற்று நோய்களுக்காக ஆய்வுச் சோதனை செய்தல் என்எச்எஸ் என்பதால் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஆய்வுச் சோதனையின் நோக்கம்

உங்களுக்குக் கல்லீரல் வீக்கம், எச்ஐவீ (human immunodeficiency virus – HIV) அல்லது கிரந்தி உள்ளதா எனக் கண்டுகொள்வதற்காக நாங்கள் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம். எச்ஐவீ, கல்லீரல் வீக்கம் மற்றும்/ அல்லது கிரந்தி என்பவற்றுடன் வசிக்கும் பெண்களுக்கு ஆரம்ப சிறப்பு மருத்துவ நியமனங்கள் தேவைப்படுகின்றன. இது கர்ப்பத்தின்போது அவர்களின் பராமரிப்பைத் திட்டமிடுவதற்காகவாகும்.

அவர்கள் எச்ஐவீ என்பதுடன் வசிக்கிறார்கள், அவர்களுக்கு கல்லீரல் வீக்கம் உள்ளது, அல்லது கடந்த காலத்தில் கிரந்திக்காக அவர்கள் சிகிச்சை பெற்றுள்ளார்கள் என ஏற்கனவே அறிந்துள்ள பெண்கள் ஒவ்வொரு கர்ப்பத்தின்போதும் அவர்கள் சோதனை செய்யப்பட வேண்டும் என இன்னும் அவர்களுக்கு அறிவுரை அளிக்கப்படுகின்றது. இந்தத் தொற்று நோய்களில் எதுவும் உங்களுக்கு இருப்பதாகக் கண்டுகொள்ளப்பட்டிருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவச்சிக்கு அல்லது ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருக்கு அறிவிக்கவும்.

இந்த நிலைமைகள் பற்றியது

கல்லீரல் வீக்கம், எச்ஐவீ மற்றும் கிரந்தி என்பன இரத்தத்தால் மற்றும் உடம்பு திரவங்களால் பரப்பப்படுகின்றது. இது பாலியல் தொடர்பு மூலமாக இருக்கலாம் அல்லது நரம்பு மூலமான போதை மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தொற்றுதலுக்குள்ளான ஊசிகள் மற்றும் கருவிகள் என்பவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ஏற்படலாம். இந்தக் கிருமிகள் கர்ப்பத்தின்போது மற்றும் /அல்லது பிறப்பின்போது குழந்தைக்கும் பரப்பப்படலாம்.

கல்லீரல் வீக்கம் B (Hepatitis B)

கல்லீரல் வீக்கம் B நோய்க்கிருமி ஈரலைப் பாதிக்கின்றது. அது கடுமையான (உடனடியான) மற்றும் நீடிக்கும் (நீண்ட கால) நோயை ஏற்படுத்தலாம். பிறப்பின்போது அல்லது வாழ்க்கையின் முதல் வருடத்தின்போது தொற்றுநோய்க்கு ஆளாகும் குழந்தைகள் நீண்ட காலம் நீடிக்கும் கல்லீரல் வீக்கம் தொற்றுதலைப் பெறுவதற்கான 10இல் 9 (90%) வாய்ப்பைக் கொண்டுள்ளார்கள். இது ஈரல் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். குழந்தை ஊசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டால், இந்த ஆபத்து குறிப்பிடத்தக்களவில் 10இல் 1 என்ற அளவில் (10%) குறைக்கப்படுகின்றது.

எச்ஐவீ (HIV)

எச்ஐவீ என்பது நோய் எதிர்ப்பு முறையைப் பலவீனமாக்குகின்றது. அதன் மூலமாக தோற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தைக் கடினமாக்குகின்றது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கர்ப்பத்தின்போது, பிரசவத்தின்போது அல்லது தாய்ப் பால் ஊட்டப்படும்போது குழந்தைக்கு அது கடத்தப்படலாம். கர்ப்பத்தின்போது சிகிச்சை அளித்தல் குழந்தைக்கு எச்ஐவீ பரப்பப்படுவதற்கான வாய்ப்பை 4இல் 1லிருந்து (25%) 1,000இல் 4க்குக் குறைவாக (0.4%) பெருமளவில் குறைக்கின்றது. குழந்தைக்குத் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கு, பிறப்பின்போதும் குழந்தைக்குச் சிகிச்சை கொடுக்கப்படலாம்.

கிரந்தி (Syphilis)

கிரந்தி ஒரு தொற்று நோயாகும். அது பாதுகாக்கப்படாத முறையிலான பாலியல் தொடர்பு மூலமாகப் பரப்பப்படுகின்றது. கர்ப்பத்தின்போதும் அது குழந்தைக்குப் பரப்பப்படலாம். கர்ப்பத்தின்போது அதற்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது குழந்தைக்குப் பாரதூரமான ஆரோக்கியம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அது கருச்சிதைவையும் அல்லது இறந்து பிறத்தலையும் ஏற்படுத்தலாம். கர்ப்பத்தின்போது சிகிச்சை அளிக்கப்படுதல் குழந்தைக்குத் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

ஆய்வுச் சோதனை

உங்கள் நரம்பிலிருந்து, வழமையாக கையிலிருந்து, இரத்தம் எடுக்கப்படுகின்றது.

ஒரு இரத்த மாதிரி எடுக்கப்படுகின்றது.

இந்த இரத்தத்தின் ஒரு சிறிய அளவு ஆய்வு கூடத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. உங்கள் கர்ப்பத்தின்போது வேறு தொற்று நோய்கள் அல்லது சொறிகள் தொடர்பான குறிகளை நீங்கள் காட்டினால், இந்த இரத்த மாதிரி சோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

சோதனையின் பாதுகாப்பு

இந்தச் சோதனையுடன் தொடர்புபட்ட ஆபத்துக்கள் எதுவும் இல்லை.

ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்

இந்தச் சோதனைகள் பலமான முறையில் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை கர்ப்பத்தில் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம் மற்றும் துரிதமான சிகிச்சைக்கும் பராமரிப்புக்கும் உதவலாம். மேலும், உங்கள் குழந்தைக்கு, உங்கள் பங்காளருக்கு அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தொற்று நோய் பரப்பப்படுவதற்கான வாய்ப்பு எதையும் பெருமளவில் அவை குறைக்கின்றன.

சோதனையைப் பெற்றுக்கொள்வதில்லை

சோதிக்கப்படுவதில்லை என நீங்கள் தீர்மானித்தால், கர்ப்பத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு ஆய்வுச் சோதனை திரும்பவும், விரும்பத்தக்கதாக, 20 வாரங்கள் அளவில் வழங்கப்படும். மகப்பேறு ஆய்வுச் சோதனை குழு அல்லது பாலியல் ஆரோக்கிய குழு உறுப்பினர் ஒருவருடன் சோதனை தொடர்பான உங்கள் கரிசனைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள்.

தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுச் சோதனைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என நீங்கள் தீர்மானித்தால், நாங்கள் இதைப் பதிவு செய்வோம். இதற்கான காரணம், எத்தனை மக்கள் சோதிக்கப்படாதிருப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் என்பதைச் சரிபார்த்துக்கொள்வதற்கு, என்எச்எஸ் இங்கிலண்ட் என்பது விரும்புகின்றது. இதைப் புரிந்துகொள்ளுதல் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான கர்ப்பம் தொடர்பான பெறுபேறுகளை மேம்படுத்த உதவும்.

எதிர்மறையான முடிவு

ஒரு எதிர்மறையான முடிவின் கருத்து உங்கள் இரத்த மாதிரி எடுக்கப்பட்டபோது நீங்கள் தொற்று நோய் அற்ற முறையில் இருந்தீர்கள். கர்ப்பத்தின் எந்தச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் இன்னும் நோய் தொற்றுதலுக்கு ஆளாகலாம்.

நோய்க் குறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் அல்லது உங்களுக்குத் திரும்பவும் சோதனை தேவைப்படுகின்றது என நீங்கள் நினைத்தால், முடிந்தளவு விரைவில் உங்கள் மருத்துவச்சியுடன் அல்லது குடும்ப மருத்துவருடன் பேசவும்.

எந்த நேரத்திலும் உங்களுக்கும் உங்கள் பங்காளருக்கும் சிகிச்சை அளிக்கப்படலாம். மற்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நீங்களும் உங்கள் பங்காளரும் உள்ளூர் பாலியல் ஆரோக்கிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். திரும்பவும் சோதனையை நாங்கள் பரிந்துரைக்கிறோம், நீங்கள்:

  • உங்கள் பாலியல் பங்காளரை மாற்றினால்
  • மற்ற மக்களுடன் உங்கள் பங்காளர் அதிகளவிலான பாலியல் தொடர்பில் இருந்தால்
  • ஒரு பாலியல்ரீதியாகப் பரப்பப்பட்ட தொற்றுநோய் (sexually transmitted infection - STI) உள்ளவர் எனக் கண்டுகொள்ளப்பட்ட ஒரு பங்காளரை வைத்திருந்தால்
  • பொழுதுபோக்கு போதை மருந்துகளை உட்செலுத்தினால்
  • ஒரு பாலியல் பணியாளர்.

நேர்மறையான முடிவு

எச்ஐவீ

நீங்கள் எச்ஐவீயுடன் வசித்தால், அது உங்கள் குழந்தைக்குப் பரப்பப்படும் வாய்ப்பைச் சிகிச்சையு்ம் ஆரோக்கிய பராமரிப்பும் பெருமளவில் குறைக்கலாம். தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்குமாறு வழமையாக அறிவுரை அளிக்கப்படுகின்றது. இருந்தாலும், நல்ல எச்ஐவீ சிகிச்சையை நீங்கள் பெறுவதாக இருந்தால், இது ஆதரிக்கப்படலாம். நீங்கள் இது குறித்து உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு குழுவுடன் கலந்துரையாட வேண்டும்.

கல்லீரல் வீக்கம்

நீங்கள் கல்லீரல் வீக்கம் நோயுடன் வசித்தால், பிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் உங்கள் ஆரோக்கியத்தைச் சிறப்புக் குழுக்கள் சரிபார்த்துக்கொள்ளுதல் முக்கியமானது. உங்கள் பங்காளர், வேறு பிள்ளைகள் எவரும் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் என்போரும் சோதனையையும் ஊசி மருந்தையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுரை அளிக்கப்படுகிறார்கள்.

உங்கள் பிள்ளை பிறக்கும்போது, அவர் உங்கள் இரத்தத்துடன் தொடர்புபடுவார். இதன் காரணமாக, நோய்க் கிருமி அவர்களுக்குப் பரப்பப்படலாம்.

ஆகையால், உங்கள் குழந்தை சரியான நேரங்களில் கல்லீரல் வீக்கத்துக்காகச் சிபார்சு செய்யப்பட்ட 6 தடுப்பூசிகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. இது நீண்ட காலம் நீடிக்கும் கல்லீரல் வீக்கம் நோயை உங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆபத்தை ஒரு 10இல் 9 வாய்ப்பிலிருந்து (90%) ஒரு 10இல் 1 வாய்ப்பாக (10%) குறைக்கின்றது. இவற்றில் எதுவும் நிகழாவிட்டால், உங்கள் குடும்ப மருத்துவரை, சிகிச்சை தாதியை அல்லது ஹெல்த் விசிட்டரைக் கேட்கவும். ஊசி மருந்துகள் பெறப்பட வேண்டும்:

  • பிறந்து 24 மணித்தியாலங்களுக்குள்
  • 4 வாரங்கள் வயதுடையவராக இருக்கும்போது
  • 8, 12 மற்றும் 16 வாரங்கள் வயதுடையவராக இருக்கும்போது (பிள்ளைப் பருவ நோய் தடுப்பு மருந்து அட்டவணையின் ஒரு பகுதியாக)
  • 18 மாதங்கள் வயதுடையவராக இருக்கும்போது

அவர்களது முதலாவது தடுப்பூசியுடன், உங்கள் பிள்ளைக்கு ஒரு இரத்த சோதனையும் ஒரு நோய் எதிர்ப்பு ஊசி மருந்தும் (கல்லீரல் வீக்கம் நோய் எதிர்ப்புப் பொருள்) தேவைப்படலாம்.

அவர்களது இறுதியான தடுப்பூசியின்போது, ஒரு இரத்த சோதனையும் உங்கள் குழந்தைக்குத் தேவைப்படும். இது 12 மற்றும் 18 மாதங்கள் வயதுக்கிடையில் இடம்பெறுகின்றது. இது நோய் தொற்றுதல் தவிர்க்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்ப்பதற்காகவாகும்.

கிரந்தி

உங்களுக்குக் கிரந்தி இருந்தால், ஒரு சிறப்பு பாலியல் ஆரோக்கிய குழுவுக்கு ஒரு சிபார்சு தேவைப்படுகின்றது. இதற்கு வழமையாக அண்டிபயோடிக்ஸ் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. நீங்கள் அவற்றை எடுத்தா்ல், அவை உங்கள் குழந்தைக்குப் பாதுகாப்பானவை. உங்கள் பங்காளருக்கும் சிகிச்சை தேவைப்படுகின்றதா எனப் பார்ப்பதற்காக, இந்தக் குழு உங்கள் பங்காளருக்கும் ஒரு சோதனையைக் கொடுப்பார்கள்.

உங்கள் கர்ப்பத்தின்பேது கிரந்திக்காக உங்களுக்குச் சிகிச்சை தேவைப்பட்டால், பிறப்புக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு ஒரு சோதனையும் இரத்த சோதனைகளும் தேவைப்படும். அவர்களுக்கு அண்டிபயோடிக்சும் தேவைப்படலாம். 3 மாதங்கள் வயதுடையவராக இருக்கும்போது தொடர் நியமனம் உங்கள் பிள்ளைக்குத் தேவைப்படும். இது தொற்று நோய் குறிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை எனப் பார்த்துக்கொள்வதற்காகவாகும்.

எனது சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்

உங்கள் சோதனை முடிவு எதிர்மறையானதாக இருந்தால், உங்கள் மருத்துவச்சி அது குறித்து உங்களுடன் கலந்துரையாடுவார். இது ஏறத்தாழ 16 வாரங்களில் உங்களின் அடுத்த கர்ப்ப கால நியமனத்தின்போது அல்லது அதற்கு முன்னராக இடம்பெறும். அது உங்கள் குறிப்புக்களிலும் பதிவு செய்யப்படும்.

உங்களுக்கு எச்ஐவீ, கல்லீரல் வீக்கம் அல்லது கிரந்தி உள்ளது என சோதனை தெரிவித்தால், ஒரு சிறப்பறிவுள்ள மருத்துவச்சி உங்களைத் தொடர்புகொள்வார். சோதனை முடிவு கிடைத்து 5 நாட்களுக்குள் அவர்கள் ஒரு நியமனத்தை ஏற்பாடு செய்வார்கள். சோதனை முடிவு குறித்து அவர்கள் கலந்துரையாடுவார்கள், மேலதிக சோதனைகளைச் செய்வார்கள், மற்றும் உங்களுடன் சேர்ந்து உங்கள் பராமரிப்பைத் திட்டமிடுவார்கள்.