Skip to main content
வழிகாட்டுதல்

காது கேளாமை (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026

Applies to England

இந்தச் சுருக்கமான விடியோ புதிய குழந்தைகளில் காது கேளாமை தொடர்பான ஆய்வுச் சோதனையை விளக்குகின்றது.

காது கேளாமை

காது கேளாமைக்கான ஆய்வுச் சோதனையை என்எச்எஸ் பரிந்துரைக்கின்றது.

ஆய்வுச் சோதனையின் நோக்கம்

பராமரிப்பு, ஆதரவு மற்றும் அறிவுரை ஆரம்பத்திலிருந்தே கொடுக்கப்படுவதற்காக, ஒரு காது கேளாமை உள்ள குழந்தைகளைக் கண்டுகொள்வதற்கு, நாங்கள் இந்த ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம்.

இந்த நோய் நிலைமை

ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஒன்று- 2 குழந்தைகள் ஒரு அல்லது இரண்டு காதுகளிலும் ஒரு நிரந்தரமான காது கேளாமையுடன் பிறக்கிறார்கள். இந்த எண்ணிக்கை, ஒரு சிறப்பு பராமரிப்பு பகுதியில் ஆகக் குறைந்தது 48 மணித்தியாலங்களைச் செலவிட்ட ஒவ்வொரு 100 குழந்தைகளில் ஏறக்குறைய 1 (1%) என அதிகரிக்கின்றது. இந்தக் குழந்தைகளில் பெரும்பாலோர் காது கேளாமை பற்றிய வரலாறு இல்லாத குடும்பங்களுள் பிறக்கிறார்கள்.

நிரந்தரமான காது கேளாமை ஒரு குழந்தையின் அபிவிருத்தியைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கலாம். காது கேளாமையை ஆரம்பத்தில் கண்டுகொள்ளுதல் மொழி, பேச்சு மற்றும் தொடர்பாடல் திறமைகள் என்பவற்றை விருத்தி செய்வதற்கான பெரும் வாய்ப்பைக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றது. அவர்களுக்குத் தேவையான ஆதரவை அவர்களின் குடும்பங்கள் பெறுகிறார்கள் எனப் பார்த்துக்கொள்வதற்கு இது உதவுகின்றது. அவர்களது ஆரம்ப வயதிலிருந்து அவர்களது குடும்பங்களுடனும் பராமரிப்பாளர்களுடனும் உள்ள உறவுமுறைகளால் பெரிதளவில் பலன் பெறுவதற்கு அது குழந்தைகளுக்கு உதவும்.

ஆய்வுச் சோதனை

புதிய குழந்தைக்கான காது கேட்டல் ஆய்வுச் சோதனை, விடுவிக்கப்படுவதற்கு முன்னர் மருத்துவமனையில், அல்லது நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்கள் குழந்தைக்குக் கொடுக்கப்படுகின்றது. மாறாக, ஒரு மருத்துவ நியமனத்துக்கு வருமாறு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். விரும்பத்தக்கதாக, இந்த ஆய்வுச் சோதனை முதல் 4 வாரங்களில் செய்துகொள்ப்பட வேண்டும், ஆனால் 3 மாதங்கள் வயது வரையிலான எந்த நேரத்திலும் அது செய்துகொள்ளப்படலாம்.

AOAE (automated otoacoustic emission) என அழைக்கப்படும் இந்த ஆய்வுச் சோதனை சில நிமிடங்களை எடுக்கின்றது. ஒரு மென்மையான நுனி உள்ள சிறிய காது ஒலிக் கருவி உங்கள் குழந்தையின் காதுக்குள் வைக்கப்படுகின்றது, மற்றும் மென்மையான தட்டும் ஓசைகள் போடப்படுகின்றன. காது ஓசையைப் பெற்றுக்கொள்ளும்போது, (கொச்லிய என அழைக்கப்படும்) உள் பகுதி பதிலளிக்கின்றது. இது ஆய்வுச் சோதனைக் கருவி மூலமாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

முதலாவது ஆய்வுச் சோதனை மூலமாக ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ளுதல் எப்போதும் சாத்தியமானதல்ல. இதனுடைய கருத்து உங்கள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளது என்பதாக இருக்க வேண்டியதில்லை. இதனுடைய கருத்தாக இருக்கக்கூடியது:

  • சோதனை செய்யப்பட்டபோது உங்கள் குழந்தை அமைதியற்றவராக இருந்தார்
  • பின்னணியில் சத்தம் இருந்தது
  • உங்கள் குழந்தைக்கு அவரது காதுக்குள் திரவம் அல்லது ஒரு தற்காலிக அடைப்பு உள்ளது – இது மிகவும் பொதுவானது மற்றும் காலப்போக்கில் அது இல்லாமல் போய்விடுகிறது.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு காது கேளாமை உள்ளது.

உங்கள் குழந்தை ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு இன்னொரு ஆய்வுச் சோதனை கொடுக்கப்படும். இது முதலாவது ஆய்வுச் சோதனை போன்றதாக இருக்கலாம், அல்லது AABR (automated auditory brainstem response) என அழைக்கப்படும் இன்னொரு வகையான சோதனையாக இருக்கக்கூடும்.

இது உங்கள் குழந்தையின் நெற்றியில், கழுத்தின் பின் பகுதியில் மற்றும் தோளில் 3 சிறிய கண்டறி கருவிகளை வைப்பதை உள்ளடக்கும். மென்மையான செவி பேசிகள் உங்கள் குழந்தையின் காதுகளுக்கு மேலாக வைக்கப்பட்டு, மென்மையான தட்டல் ஓசைகள் போடப்படுகின்றன. உங்கள் குழந்தையின் கேட்டல் நரம்பு என்பது ஓசைகளுக்குப் பதிலளிக்கின்றதா என ஆய்வுச் சோதனைக் கருவி சொல்லக்கூடியதாக இருக்கும். உங்கள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளதா இல்லையா எனக் கண்டுகொள்வதற்கு இது எங்களுக்கு உதவும்.

இந்த ஆய்வுச் சோதனை 15 நிமிடங்கள் வரையிலான நேரத்தை எடுக்கலாம். உங்கள் குழந்தை அமைதியாக இருக்க வேண்டும் அல்லது உறங்க வேண்டும்.

சோதனையின் பாதுகாப்பு

இந்த ஆய்வுச் சோதனையை வைத்திருப்பதுடன் தொடர்புபட்ட ஆபத்துக்கள் எதுவும் இல்லை.

ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்

இந்த ஆய்வுச் சோதனை உங்கள் குழந்தைக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றது. காது கேளாமையை ஆரம்பத்தில் கண்டறிவது உங்கள் குழந்தையின் அபிவிருத்திக்கு முக்கியமானதாகும்.

சோதனையைப் பெற்றுக்கொள்ளவில்லை

புதிய குழந்தைக்கான காது கேட்டல் ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதில்லை என நீங்கள் தீர்மானித்தால், அவர்கள் வயதில் வளரும்போது, உங்கள் குழந்தையின் கேட்டலைச் சரிபார்த்துக்கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக, சரிபார்ப்புப் பட்டியல்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். உங்களிடம் ஏதாவது கரிசனைகள் இருந்தால், உங்கள் ஹெல்த் விசிட்டருடன் அல்லது குடும்ப வைத்தியருடன் நீங்கள் பேச வேண்டும்.

சாத்தியமான சோதனை முடிவுகள்

இரண்டு காதுகளிலும் ஒரு தெளிவான பதில் உங்கள் குழந்தைக்கு இருந்தால், ஒரு நிரந்தரமான காது கேளாமை இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இருந்தாலும், புதிய குழந்தைக்கான கேட்டல் ஆய்வுச் சோதனை காது கேளாமையின் எல்லா வகைகளையும் கண்டறிவதில்லை. மேலும், பிள்ளைகள் அவர்களது பிற்பட்ட காலத்தில் காது கேளாமையைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் வளரும்போது, உங்கள் பிள்ளையின் காது கேட்டலைச் சரிபார்த்துக்கொள்ளுதல் முக்கியமானது. உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட பிள்ளை ஆரோக்கிய பதிவேட்டில் (“சிவப்பு புத்தகம்”) உள்ள சரிபார்ப்புப் பட்டியல் இதை எவ்வாறு செய்வது என உங்களுக்குச் சொல்கிறது. உங்கள் பிள்ளையின் காது கேட்டல் தொடர்பாக உங்களிடம் ஏதாவது கரிசனைகள் இருந்தால், உங்கள் ஹெல்த் விசிட்டருக்கு அல்லது குடும்ப வைத்தியருக்குச் சொல்லவும்.

இந்த ஆய்வுச் சோதனை முடிவுகள் உங்கள் குழந்தையின் ஒரு அல்லது இரண்டு காதுகளிலிருந்தும் ஒரு தெளிவான பதிலைக் காட்டாவிட்டால், ஒரு காது கேட்டல் நிபுணருடன் ஒரு காது கேட்பு நியமனம் செய்துகொள்ளப்படும்.

ஆய்வுச் சோதனை நடைபெற்று 4 வாரங்களுக்குள் ஒரு காது கேட்டல் நிபுணரால் உங்கள் குழந்தை பார்க்கப்பட வேண்டும்.

காது கேட்பு நியமனத்துக்கு உங்கள் குழந்தையை நீங்கள் கொண்டுவருதல் மிகவும் முக்கியமானது. இதற்கான காரணம், அவர்களுக்கு ஒரு காது கேளாமை இருந்தால், ஒரு சாத்தியமான காரணத்தைக் கண்டறிவதற்கு வேறு சோதனைகள் அவர்களுக்குத் தேவைப்படக்கூடும். இந்தச் சோதனைகள் பிறப்பிலிருந்து முதல் சில வாரங்களுக்குள் செய்துகொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு 100 குழந்தைகளில் ஏறத்தாழ 2லிருந்து 3 குழந்தைகள் (2லிருந்து 3%) ஆய்வுச் சோதனைகளில் ஒரு தெளிவான பதிலைக் காட்டுவதில்லை.

காது கேட்பு சிக்ச்சை இடத்தில் சோதிக்கப்பட்ட 15 குழந்தைகளில் ஏறத்தாழ 1வருக்கு (7%) ஒரு அல்லது இரண்டு காதுகளிலும் ஒரு நிரந்தரமான காது கேளாமை உள்ளது. சிலருக்குத் தற்காலிகமான காது கேளாமை இருக்கக்கூடும்.

எனது சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்

காது கேட்டல் ஆய்வுச் சோதனை செய்யப்பட்டு கூடிய விரைவில் உங்கள் குழந்தைக்கான சோதனை முடிவுகள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.