கண்கள், இருதயம், இடுப்புகள் மற்றும் விந்தகங்கள் (உடல்ரீதியான சோதனை) (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026
Applies to England
இந்தச் சுருக்கமான விடியோ புதிய குழந்தைகளில் கண்கள், இருதயம், இடுப்புகள் மற்றும் விந்தகங்கள் தொடர்பான ஆய்வுச் சோதனையை விளக்குகின்றது.
கண்கள், இருதயம், இடுப்புகள் மற்றும் விந்தகங்கள் (உடல்ரீதியான சோதனை)
புதிய குழந்தைக்கான உடல்ரீதியான ஆய்வுச் சோதனையை என்எச்எஸ் பரிந்துரைக்கின்றது.
ஆய்வுச் சோதனையின் நோக்கம்
பிரசவத்தின் பின் 72 மணித்தியாலங்களுக்குள் உங்கள் குழந்தைக்கான உச்சியிலிருந்து- உள்ளங்கால் வரையிலான ஒரு உடல்ரீதியான சோதனை வழங்கப்படும். இது 4 குறிப்பான ஆய்வுச் சோதனைகளை உள்ளடக்கும். உங்கள் குழந்தையின் கண்கள், இருதயம், இடுப்புகள் மற்றும், ஆண் பிள்ளைகளில், அவர்களின் விந்தகங்கள் தொடர்பாக ஒரு சந்தேகிக்கப்படும் பிரச்சினை உங்கள் குழந்தைக்கு உள்ளதா என இந்தச் சோதனைகள் சரிபார்க்கின்றன. ஒரு பிரச்சினை சந்தேகிக்கப்பட்டால், ஆரம்ப விசாரணை மூலமாகவும் சாத்தியமான சிகிச்சை மூலமாகவும் குழந்தைகள் நன்மையடைகிறார்கள்.
உங்கள் குழந்தை 6க்கும் 8க்கும் இடையிலான வாரங்கள் உள்ள வயதுடையவராக இருக்கும்போது, இந்த ஆய்வுச் சோதனைகள், வழமையாக உங்கள் குடும்ப வைத்தியரின் சிகிச்சை இடத்தில், செய்யப்படுகின்றன. இதற்கான காரணம், அது வரையில், சில மருத்துவ நிலைமைகள் ஏற்படுவதில்லை அல்லது கண்டுகொள்ளப்பட முடியாது.
மருத்துவ நிலைமைகள் பற்றியது
உடல்ரீதியான சோதனையின் ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட நிலைமைகளைப் பார்த்துக்கொள்கிறது.
கண்கள்
இங்கிலாந்தில், ஒவ்வொரு 10,000குழந்தைகளில் ஏறத்தாழ 2லிருந்து 3 வரையிலான குழந்தைகள் கண் புரைகளுடன் பிறக்கிறார்கள். கண்ணின் உட்புறத்தில் ஒளி ஊடுருவும் வில்லைகள் மங்கலடையும்போது இது ஏற்படுகின்றது. இந்த நிலைமைகளின் 50%மானவற்றில், இரண்டு கண்களும் பாதிக்கப்படுகின்றன.
ஆய்வுச் சோதனைக்கான முக்கிய காரணம் இந்த நிலைமையைக் கண்டுகொள்வதாகும். உங்கள் குழந்தையின் கண்களின் தோற்றத்தை இந்தச் சோதனை சரிபார்க்கின்றது, ஆனால் எவ்வளவு நன்றாக உங்கள் குழந்தையால் பார்க்க முடியும் என அது சொல்ல முடியாது.
இருதயம்
பிறப்பிலிருந்துள்ள இருதய வியாதி (Congenital heart disease - CHD) என்பது பிறப்பின்போது இருக்கின்ற இருதய மருத்துவ நிலைமைகளைக் குறிப்பதாகும். இந்த நிலைமைகள் இருதயத்தின் அமைப்பை, தொழிற்பாட்டை மற்றும் ஓசையைப் பாதிக்கின்றன.
CHD என்பது யூகேயில் பிறக்கும் குழந்தைகளுக்குள்ள மிகவும் பொதுவான மருத்துவ நிலைமைகளில் ஒன்றாகும். 1,000 குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு ஒரு இருதய அல்லது இரத்த சுற்றோட்ட மருத்துவ நிலைமை இருக்கும்.
ஆய்வுச் சோதனை செய்வதற்கான முக்கிய காரணம் CHD என்பதன் குறிகளையும் நோய்க்குறிகளையும் கண்டறிவதாகும். இதில் இருதயத்தின் முணுமுணுப்பு ஒலி என்பதிலிருந்து ஒரு நிபுணரின் பராமரிப்பை அல்லது சிகிச்சையை வேண்டுகின்ற நிலைமைகள் வரையிலுள்ளவை அடங்கலாம். முணுமுணுப்பு என்பது இருதயத்துக்கூடாக இரத்தம் செல்லும்போது ஏற்படுத்தப்படும் ஓசையாகும். பெரும்பாலும், எல்லா நிலைமைகளிலும், ஒரு முணுமுணுப்பு கேட்கப்படும்போது, இருதயம் சாதாரணமானதாகும். முணுமுணுப்புகள் குழந்தைகளில் பொதுவானவை, ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது என்பதை எப்போதும் குறிப்பதாக அது இருக்காது.
இடுப்புகள்
சரியான முறையில் ஏற்படுத்தப்படாத இடுப்பு மூட்டுகளுடன் குழந்தைகள் பிறக்கலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது ஒரு நொண்டுதலை அல்லது மூட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொரு 1,000லும் ஏறத்தாழ 3லிருந்து 5 வரையிலான புதிய குழந்தைகளுக்கு ஒரு வடக்கட்டு மூலமான சிகிச்சை தேவைப்படக்கூடும்.
ஒவ்வொரு 1,000லும் ஏறத்தாழ 1லிருந்து 2 வரையிலான புதிய குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படக்கூடும்.
விந்தகங்கள்
அவர்களது விந்தகங்கள் சரியான இடத்தில் உள்ளனவா எனப் பார்த்துக்கொள்வதற்கு, ஆண் குழந்தைகள் சரிபார்க்கப்படுகிறார்கள். இதற்கான காரணம், சிலவேளைகளில் ஒரு அல்லது இரண்டு விந்தகங்களும் விதைப் பைக்குள் (விந்தகங்களை வைத்திருக்கும் பை) கீழாக வருவதற்கு (இறங்குவதற்கு) தவறுகின்றன.
கீழிறங்காத விந்தகங்களில் இரண்டு வகைகள் உள்ளன:
- ஒரு அல்லது இரண்டு விந்தகங்களும் உணரப்படலாம், ஆனால் அவை பிழையான இடத்தில் உள்ளன (தொட்டுணரக்கூடியவை)
- ஒரு அல்லது இரண்டு விந்தகங்களும் எந்த விதத்திலும் உணரப்பட முடியாதவை (தொட்டுணர முடியாதவை)
விந்தகங்கள் இறங்குவதற்குப் பல மாதங்கள் எடுக்கலாம்.
100 ஆண் குழந்தைகளில் ஏறத்தாழ 4 ஆண் குழந்தைகள் (4%) இந்த நிலைமையுடன் பிறக்கிறார்கள். உரிய காலத்துக்கு முன்னராகவே பிறத்தல் (கர்ப்பத்தின் 37ஆவது வாரத்துக்கு முன்னராக), ஒரு குறைவான பிறப்பு எடையைக் கொண்டிருத்தல், இறங்காத விந்தகங்கள் உள்ள ஒரு குடும்ப வரலாறு என்பன இந்த நிலைமையுடன் ஒரு பையன் பிறப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடும்.
ஆய்வுச் சோதனை
ஒரு பயிற்சிபெற்ற ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர் உங்கள் குழந்தையின் உடல்ரீதியான சோதனையைச் செய்வார். உங்கள் குழந்தையின் நல்வாழ்வு குறித்து அவர்கள் உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள்.
சோதனையின் பகுதிக்கான உடுப்பை உங்கள் குழந்தை அகற்ற வேண்டும். சோதனையின்போது ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர்:
- அவற்றின் தோற்றத்தைச் சரிபார்ப்பதற்காக உங்கள் குழந்தையின் கண்களுள் பார்ப்பார்
- இருதய ஓசைகளைக் கண்டறிவதற்காக உங்கள் குழந்தையின் இருதயத்தைக் காதால் கேட்பார்
- மூட்டுகள் விருத்தியடைந்து அவை சரியாக வேலை செய்கின்றன எனப் பார்த்துக்கொள்வதற்காக, உங்கள் குழந்தையின் இடுப்புக்களைச் சோதிப்பார்
- அவர்களின் விந்தகங்கள் சரியான இடத்தில் உள்ளனவா எனச் சரிபார்ப்பதற்காக, ஆண் குழந்தைகளைச் சோதிப்பார்.
சோதனையின் பாதுகாப்பு
இந்தச் சோதனையை வைத்திருத்தல் தொடர்பாக ஆபத்துக்கள் இல்லை.
ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்
நிலைமைகள் எதற்குமாக அல்லது எல்லாவற்றுக்குமாக உங்கள் குழந்தை சோதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதை நீங்கள் தீர்மானிக்க முடியும். இந்தச் சோதனையின் நோக்கம் நிலைமைகள் எதையும் ஆரம்பத்தில் கண்டறிவதாகும். அப்படியானால், முடிந்தளவில் விரைவாகச் சிகிச்சை ஆரம்பிக்கப்படலாம். உங்கள் குழந்தைக்காக ஆய்வுச் சோதனை பரிந்துரைக்கப்படுகின்றது.
சோதனையைப் பெற்றுக்கொள்ளவில்லை
ஆய்வுச் சோதனையைப் பெறுவதில்லை என நீங்கள் தீர்மானித்தால், அல்லது உங்களிடம் ஏதாவது கரிசனைகள் இருந்தால், உங்கள் மருத்துவச்சியுடனும் சோதனையை வழங்கும் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருடனும் நீங்கள் பேச வேண்டும்.
சாத்தியமான சோதனை முடிவுகள்
ஒரு நிலைமை அல்லது பிரச்சினை சந்தேகிக்கப்பட்டால், மேற்கொண்டு மதிப்பீட்டுக்காகவும், பொருத்தமானால் சோதனைகளுக்காகவும் உங்கள் குழந்தை சிபார்சு செய்யப்படுவார். இதில், ஒரு இடுப்பு அல்ட்றாசவுண்ட் ஆய்வுச் சோதனைக்கான சிபார்சு, அல்லது குழந்தையின் இருதயத்தை, கண்களை அல்லது விந்தகங்களைப் பார்த்துக்கொள்ளும் சிறப்பறிவுள்ள குழுக்களுக்கான சிபார்சு அடங்கும்.
எனது சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
சோதனையைச் செய்யும் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர் உடனடியாகவே ஆய்வுச் சோதனை முடிவுகளை உங்களுக்குக் கொடுப்பார். தேவைப்பட்டால், மேலதிக மதிப்பீடுகளுக்காக ஒரு சிபார்சு செய்யப்பட்டால், சோதனை நேரத்தில் இது குறித்தும் உங்களுடன் கலந்துரையாடப்படும்.
சோதனை முடிவுகள் உங்கள் குழந்தையின் மருத்துவ பதிவேட்டிலும் தனிப்பட்ட பிள்ளை ஆரோக்கிய பதிவேட்டிலும் (‘சிவப்பு புத்தகம்’) பதிவு செய்யப்படும். சிவப்பு புத்தகத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உங்கள் குழந்தை ஒரு ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞரைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் புத்தகம் இருக்கின்றது எனப் பார்த்துக்கொள்ளவும்.
ஆதரவுக் குழுக்கள் பற்றிய அதிகளவிலான தகவலையும் விபரங்களையும் NHS.UK என்பதில் காணவும்.