சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026
Applies to England
சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை என்எச்எஸ் என்பதால் பரிந்துரைக்கப்படுகின்றது
ஆய்வுச் சோதனையின் நோக்கம்
சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை என்பது சர்க்கரை வியாதி விழித்திரை நோய்க் குறிகளையும் மற்றும் சர்க்கரை வியாதியால் ஏற்படுத்தப்படும் மற்றக் கண் பிரச்சினைகளையும் சரிபார்க்கின்றது, மற்றும் நீங்கள் கர்ப்பமாக இருந்தால், மற்றும் சர்க்கரை வியாதி வகை 1 அல்லது 2 உங்களுக்கு இருந்தால் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை இந்த ஆய்வுச் சோதனை அவதானிக்கின்றது்.
சில பெண்கள் கர்ப்பத்தின் பிற்பகுதியில் (28 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டது) கர்ப்ப கால சர்க்கரை வியாதியைப் பெறுகிறார்கள். கர்ப்ப கால சர்க்கரை வியாதிக்கு உணவு முறையில் மாற்றங்கள் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்படலாம். வழமையாக, குழந்தை பிறந்ததும் அது இல்லாமற் போய்விடுகின்றது. உங்களுக்குக் கர்ப்ப கால சர்க்கரை வியாதி ஏற்பட்டால், உங்களுக்குச் சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை வழங்கப்படமாட்டாது.
இந்த மருத்துவ நிலைமை பற்றியது
கண்ணின் பிற்பக்கத்தில் சிறிய இரத்தக் குழா்ய்களைச் சர்க்கரை வியாதி பாதிக்கும்போது, சர்க்கரை வியாதி விழித்திரை நோய் ஏற்படுத்தப்படுகின்றது. சர்க்கரை வியாதி உள்ள ஒவ்வொருவருக்கும் கண் ஆய்வுச் சோதனை கொடுக்கப்படுகின்றது, ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ஆய்வுச் சோதனை மிகவும் முக்கியமானது, ஏனெனில் பாரதூரமான கண் பிரச்சினைகள் ஏற்படு்ம் ஆபத்து பெரிதானது.
ஆய்வுச் சோதனை
கர்ப்பத்தின்போது, உங்களின் முதலாவது மருத்துவ நியமனத்தில், அதற்குச் சிறிது பின்னராக, மற்றும் உங்களின் 28 வார கர்ப்பத்துக்குப் பின்னராக ஆய்வுச் சோதனை உங்களுக்கு வழங்கப்படும். விழித்திரை நோயின் ஆரம்ப கட்டங்கள் முதலாவது ஆய்வுச் சோதனையின்போது கண்டுகொள்ளப்பட்டால், உங்கள் கர்ப்பத்தின் 16க்கும் 20க்கும் இடைப்பட்ட வாரங்களில் உங்களுக்கு இன்னொரு சோதனை வழங்கப்படும். எந்த ஆய்வுச் சோதனையின்போதும், குறிப்பிடத்தக்க அளவிலான விழித்திரை நோய் கண்டுகொள்ளப்பட்டால், ஒரு கண் நிபுணருக்கு நீங்கள் சிபார்சு செய்யப்படுவீர்கள்.
கர்ப்ப கால ஆய்வுச் சோதனை மற்ற எல்லா நேரங்களிலும் உள்ள வழமையான ஆய்வுச் சோதனை போன்றதாக இருக்கும்.
ஆய்வுச் சோதனை செய்யும் ஊழியர்கள் உங்கள் பார்வையின் விபரங்களையும் அளவையும் பதிவுசெய்வார்கள். விழித்திரை அதிகளவில் தெளிவாகப் பார்க்கப்படுவதற்காக, உங்கள் கண் மணிகளைப் பெரிதாக்குவதற்காக, அவர்கள் துளிகளை உங்கள் கண்களுக்குள் விடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் உங்கள் விழித்திரைகளின் டிஜிட்டல் புகைப்படங்களை எடுக்கிறார்கள்.
உருவங்கள் போதியளவில் தெளிவாக இருக்காவிட்டால், ஒரு வேறுபட்ட சோதனைக்காக ஒரு கண் நிபுணருக்கு நீங்கள் சிபார்சு செய்யப்படுவீர்கள்.
சோதனையின் பாதுகாப்பு
புகைப்படம் எடுத்தல் வலியற்றதாக இருக்கும், மற்றும் கமரா கண்ணுடன் தொடர்புபடாது. கண் துளிகள் சில விநாடிகளுக்குக் குத்துவதாக இருந்து சோதனைக்குப் பின்னர் 2லிருந்து 6 மணித்தியாலங்களுக்கு மங்கலான பார்வையை ஏற்படுத்தும். உங்கள் வழமையான பார்வைக் கண்ணாடிகள் அனைத்தையும் உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
ஆய்வுச் சோதனையின் பின்னர் அனைத்தும் மிகவும் பிரகாசமாகத் தோன்றும் என்பதால், வீட்டில் அணிவதற்காக சன்கிளாசஸ் என்பவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு, பொதுசன போக்குவரத்தை ஏற்பாடு செய்யவும் அல்லது ஒருவர் உங்களைக் கூட்டிச் செல்ல வாகன உதவி பெற்றுக்கொள்ளவும். கண் துளிகள் பார்வையை மங்கலாக்கலாம் என்பதால், ஆய்வுச் சோதனைக்குப் பின்னர் நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது.
மிகவும் அரிதாக, துளிகள் கண்ணுள் ஒரு சடுதியான, எதிர்பாராத அழுத்த அதிகரிப்பை ஏற்படுத்தலாம். அழுத்த அதிகரிப்பு நோய்க் குறிகளில் அடங்குபவை:
- கண்ணில் வலி அல்லது அசௌகரியம்
- கண் வெள்ளைப் பகுதியில் செந்நிறம்
- தொடர்ந்து மங்கலான பார்வை
ஆய்வுச் சோதனைக்குப் பின்னர், இந்த நோய்க் குறிகளில் எதையும் நீங்கள் அனுபவி்த்தால், கண் பகுதிக்கு நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஒரு விபத்து மற்றும் அவசரகால பகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்
கருத்தரிப்பதற்கு முன்பாக சர்க்கரை வியாதி உங்களுக்கு ஏற்கனவே இருந்திருந்தால், இந்தச் சோதனை பலமான முறையில் பரிந்துரைக்கப்படுகின்றது.
கண் ஆய்வுச் சோதனை உங்கள் சர்க்கரை வியாதியை நிர்வகிப்பதன் ஒரு பகுதியாகும். சர்க்கரை வியாதி விழித்திரை நோய் சிகிச்சை அளிக்கப்படத்தக்கது. குறிப்பாக அது ஆரம்பத்தில் கண்டுகொள்ளப்பட்டால்.
சோதனையைப் பெற்றுக்கொள்ளவில்லை
சர்க்கரை வியாதி உள்ள மக்கள் ஒரு கண் ஆய்வுச் சோதனை நியமனங்களுக்குச் செல்லாமல் இருப்பதற்குத் தீர்மானிக்க முடியும்.
சோதனையைப் பெற்றுக்கொள்வதில்லை என நீங்கள் தீர்மானித்தால், கர்ப்பத்தின்போது உங்கள் சர்க்கரை வியாதி பராமரிப்பைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவருக்கு நீங்கள் அறிவிக்க வேண்டும்.
சாத்தியமான சோதனை முடிவுகள்
நீங்கள் ஒரு ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொண்டால், சாத்தியமான முடிவுகள்:
- விழித்திரை நோய் இல்லை
- விழித்திரை நோயின் ஆரம்ப குறிகள்
- ஒரு நிபுணருக்கான சிபார்சை வேண்டுகின்ற அதிகளவில் பாரதூரமான விழித்திரை நோய்
உங்கள் சோதனை விழித்திரை நோயின் ஆரம்ப குறிகளைக் காட்டினால், உங்களின் ஆரோக்கிய தொழிலறிஞர் கர்ப்பத்தின்போது உங்கள் சர்க்கரை வியாதியைக் கவனித்துக்கொள்ளுதல் குறித்த அறிவுரையை உங்களுக்குத் தருவார். அதன் பின்னர், உங்கள் கர்ப்பத்தின்போது, மேலதிகமான ஆய்வுச் சோதனைகளுக்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் ஒரு புகைப்பவராக இருந்தால், நிறுத்துவதற்கு, அல்லது ஆகக் குறைந்தது குறைப்பதற்கு உதவி தேடிக்கொள்ளவும்.
சிபார்சு செய்யப்படத்தக்க விழித்திரை நோய் உங்களுக்கு உள்ளது என சோதனை காட்டினால், ஒரு கண் நிபுணருடனான நியமனத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
எனது சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
உங்கள் ஆய்வுச் சோதனை நியமனத்தைத் தொடர்ந்து, 6 வாரங்களுக்குள் உங்களுக்கும் உங்கள் குடும்ப வைத்தியருக்கும் ஒரு கடிதம் அனுப்பப்படும்.
ஆதரவுக் குழுக்கள் பற்றிய அதிகளவிலான தகவலையும் விபரங்களையும் NHS.UK என்பதில் காணவும்.