Skip to main content
வழிகாட்டுதல்

11 உடல் நிலைமைகள் (20-வார ஆய்வுச் சோதனை) (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026

Applies to England

இந்தச் சுருக்கமான விடியோ கர்ப்ப காலத்திலுள்ள 11 உடல் நிலைமைகளுக்கான ஆய்வுச் சோதனையை விளக்குகின்றது.

11 உடல் நிலைமைகள் (20-வார ஆய்வுச் சோதனை)

ஆய்வுச் சோதனையின் நோக்கம்

இந்த ஆய்வுச் சோதனை கர்ப்பத்தின் 18 வாரங்களுக்கும் 20 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்திலும் மற்றும் கர்ப்பத்தின் 6 நாட்களிலும் நடைபெறுகின்றது. இது பொதுவாக 20-வார ஆய்வுச் சோதனை என அழைக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுச் சோதனை உங்கள் குழந்தையிலுள்ள 11 வேறுபட்ட நிலைமைகளைப் பார்க்கின்றது. தவறாக இருக்கக்கூடிய நிலைமைகள் அனைத்தையும் இந்தச் சோதனையால் கண்டுகொள்ள முடியாது.

இந்த நிலைமைகள் பற்றியது

உங்கள் பிள்ளையின் மூளை, முகம், இருதயம், எலும்புகள், முதுகெலும்பு, அடிவயிறு (வயிறு) மற்றும் சிறுநீரகங்கள் என்பவற்றை இந்த ஆய்வுச் சோதனை விபரமான முறையில் பார்க்கும்.

பெரும்பாலான ஆய்வுகளின்போது, உங்கள் குழந்தை எதிர்பார்க்கப்பட்டவாறு வளருவதாகத் தோன்றுகிறார் என ஆய்வு காட்டும். இருந்தாலும், சிலவேளைகளில், ஒரு மருத்துவ நிலைமை கண்டுகொள்ளப்படுகின்றது அல்லது சந்தேகிக்கப்படுகின்றது. ஏனையவற்றைக் காட்டிலும் சில விடயங்கள் அதிகளவில் தெளிவான முறையில் கண்டுகொள்ளப்படலாம். உதாரணமாக, சில குழந்தைகளுக்கு முதுகெலும்பு விருத்திக் குறைபாடு என அழைக்கப்படும் ஒரு குறைபாடு உள்ளது. அது முள்ளந்தண்டைப் பாதிக்கின்றது.

வழமையாக, ஒரு ஆய்வுச் சோதனையின்போது, முதுகெலும்பு விருத்திக் குறைபாடு தெளிவான முறையில் கண்டுகொள்ளப்படலாம். இந்தக் குறைபாடுள்ள 10 குழந்தைகளில் ஏறத்தாழ 9 குழந்தைகள் (90%) தொடர்பாக, இது ஆய்வுச் சோதனை மூலமாகக் கண்டுகொள்ளப்படும்.

இருதய நிலைமைகளைக் கண்டுகொள்ளுதல் அதிகளவில் கடினமாகும். இருதய நிலைமைகள் உள்ள குழந்தைகளில் ஏறக்குறைய பாதிப் பேரை (50%) இந்த ஆய்வுச் சோதனை கண்டுகொள்ளும்.

ஆய்வுச் சோதனையின்போது கண்டுகொள்ளப்படக்கூடிய நிலைமைகளில் சிலவற்றின் கருத்து என்னவெனில், குழந்தை பிறந்த பின்னர் அவருக்குச் சிகிச்சை அல்லது அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம் என்பதாகும் (உதாரணமாக, உதட்டுப் பிளவு). ஒரு சிறிய எண்ணிக்கையிலான சில குழந்தைகளில், சில மிகவும் பாரதூரமான நிலைமைகள் கண்டுகொள்ளப்படுகின்றன. உதாரணமாக, குழந்தையின் மூளை, சிறுநீரகங்கள், உள்வாரியான உறுப்புக்கள் அல்லது எலும்புகள் சரியான முறையில் விருத்தியடையாமல் இருந்திருக்கலாம். சிகிச்சை சாத்தியமற்றதான சில பாரதூரமான நிலைமைகளில், குழந்தை பிறந்ததும் அல்லது கர்ப்ப காலத்தில் இறந்து விடுவார்.

இந்த ஆய்வுச் சோதனையின்போது பார்த்துக்கொள்ளப்படும் முக்கியமான மருத்துவ நிமைமைகள் பற்றிய அதிகளவில் விபரமான தகவல் NHS.UK என்பதில் உள்ளது.

ஆய்வுச் சோதனை

பெரும்பாலான ஆய்வுச் சோதனைகள் சொனொகிராவெர்ஸ் (sonographers) என அழைக்கப்படும் சிறப்புப் பயிற்சிபெற்ற ஊழியர்களால் செய்யப்படுகின்றன.

உங்கள் குழந்தையைத் தெளிவான முறையில் பார்ப்பதற்காக, மங்கலான ஒளியுள்ள ஒரு அறையில் இந்த ஆய்வுச் சோதனை செய்யப்படுகின்றது. குழந்தையை நேரடியாக எதிர்நோக்கும் முறையில் அல்லது ஒரு கோணத்தில் சொனொகிராவெர் திரையை வைத்திருக்க வேண்டியதாக இருக்கலாம்.

  1. ஒரு கட்டிலில் படுக்குமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
  2. உங்கள் மேற்பகுதி உடுப்பை உங்கள் மார்புப் பகுதிக்கு உயர்த்துமாறும் உங்கள் பாவாடையை அல்லது காற்சட்டைகளை உங்கள் இடுப்புகளுக்கு இறக்குமாறும் நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
  3. அல்ட்றாசவுண்ட் ஜெல் என்பதிலிருந்தும் உங்கள் உடுப்பைப் பாதுகாப்பதற்காக உங்கள் உடுப்பினுள் மென்தாள் மடித்து வைக்கப்படுகின்றது. ஜெல் உங்கள் அடிவயிற்றில் (வயிற்றில்) போடப்படுகின்றது. இந்த ஜெல் குளிராக இருக்கக்கூடும்.
  4. உங்கள் குழந்தையின் உடம்பைக் கவனமான முறையில் சோதிப்பதற்காக, சொனொகிராவெர் புறொப் என அழைக்கப்படும் கையால் பிடித்து வைத்திருக்கப்படும் ஒரு கருவியை உங்கள் அடிவயிற்றில் (வயிற்றில்) நகர்த்துகிறார். ஆய்வுக் கருவிக்கும் உங்கள் தோலுக்கும் இடையில் நல்ல தொடர்பு உள்ளது என ஜெல் பார்த்துக்கொள்கிறது.

இந்த நியமனம் வழமையாக ஏறத்தாழ 30 நிமிடங்களை எடுக்கின்றது.

ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்ளுதல் காயப்படுத்தாது. இருந்தாலும், உங்கள் பிள்ளையைத் தெளிவாகப் பார்ப்பதற்காக, சொனொகிராவெர் ஓரளவு அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கலாம். இது அசௌகரியமாக இருக்கக்கூடும். அப்போது, அல்ட்றாசவுண்ட் திரையில் உங்கள் பிள்ளையின் ஒரு கறுப்பு மற்றும் வெள்ளைப் படம் கண்டுகொள்ளப்படும்.

ஆய்வுச் சோதனையின்போது, சொனொகிராவெர் அமைதியாக இருக்கக்கூடும். ஒரு நல்ல தரமான ஆய்வுச் சோதனையைச் செய்வதற்கு, அவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடியதாக இருத்தல் முக்கியமானது.

உங்கள் ஆய்வுச் சோதனையின்போது, இன்னொரு ஊழியரிடமிருந்து ஒரு இரண்டாம் கருத்தைச் சொனொகிராவெர் கேட்டுக்கொள்ளக்கூடும்.

சிலவேளைகளில் உங்கள் குழந்தையைத் தெளிவாகப் பார்வையிடுதல் கடினமாகும். இதற்கான காரணமாக இருக்கக்கூடியது உங்கள் குழந்தை ஒரு ஒழுங்கற்ற முறையில் படுத்திருக்கிறார், அல்லது நீங்கள் சராசரி எடைக்கு மேலாக இருக்கிறீர்கள். இதனுடை கருத்து, எது குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதல்ல.

இது நிகழ்ந்தால், உங்கள் கர்ப்பத்தின் 23 வாரங்களின்போது உங்களுக்கு ஒரு இரண்டாவது ஆய்வுச் சோதனை கொடுக்கப்படும். இந்த அடுத்த நியமனத்தின்போது சொனொகிராவெர் இந்த ஆய்வுச் சோதனையைப் பூர்த்திசெய்வதற்கு முயற்சிப்பார், ஆனால் இது எப்போதும் சாத்தியமானதல்ல.

மிகவும் அரிதாக, இந்த இரண்டாவது ஆய்வுச் சோதனை பூர்த்திசெய்யப்படாதிருக்கலாம். இது நிகழ்ந்தால், இன்னொரு ஆய்வுச் சோதனை உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. பிறப்புக்குப் பின்னர் உங்கள் குழந்நை ஒரு உடல்ரீதியான சோதனையைப் பெற்றுக்கொள்வார்.

உங்கள் குழந்தையின் பால் என்ன என்பதைக் கண்டுகொள்வது இந்த ஆய்வுச் சோதனையின் நோக்கமல்ல. ஆனால், அதைக் காண்பது இலகுவாக இருந்தால், பெரும்பாலான மருத்துவமனைகள் உங்களுக்குச் சொல்லும். உங்கள் குழந்தையின் பால் கண்டுகொள்ளப்படாவிட்டால், உங்களுக்கு இன்னொரு ஆய்வுச் சோதனை கொடுக்கப்படமாட்டாது.

ஆய்வுச் சோதனை நியமனத்துக்கு நீங்கள் வரும்போது, உங்கள் சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்பியிருக்க வேண்டும். உங்கள் நியமனத்தைச் செய்யும்போது இது பற்றி விளக்கமாகக் கூறப்படும். இது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் மருத்துவமனையைத் தொடர்புகொள்ளலாம்.

நியமனத்துக்கு உங்களுடன் ஒருவர் வருவதை நீங்கள் விரும்பக்கூடும். ஆய்வுச் சோதனைகளுக்குப் பிள்ளைகள் வருவதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. உங்கள் நியமனத்துக்கு முன்னராக, இது பற்றி மருத்துவமனையைக் கேட்கவும்.

சோதனையின் பாதுகாப்பு

அல்ட்றாசவுண்ட் ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக அறிந்துகொள்ளப்பட்ட ஆபத்துக்கள் எதுவும் உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு இல்லை. ஆய்வுச் சோதனையைப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா எனக் கவனமான முறையில் சிந்திப்பது முக்கியமாகும். மேற்கொண்டு, முக்கியமான தீர்மானங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்கான தகவலை ஆய்வுச் சோதனை வழங்கக்கூடும். உதாரணமாக, கருச்சிதைவு ஏற்படும் ஒரு ஆபத்துள்ள மேலதிக சோதனைகள் உங்களுக்குக் கொடுக்கப்படக்கூடும்.

ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்

இந்த ஆய்வுச் சோதனையை நீங்கள் பெறவேண்டும் என்றில்லை. இந்தப் 11 உடல்ரீதியான மருத்துவ நிலைமைகளில் ஒன்று அவர்களது குழந்தைக்கு உள்ளதா எனக் கண்டுகொள்வதற்குச் சிலர் விரும்புகிறார்கள், சிலர் விரும்பவில்லை.

இந்த ஆய்வுச் சோதனையைப் பெறுவதற்கு நீங்கள் தீர்மானித்தால், சோதனை முடிவுகளின் அடிப்படையில் நீங்கள் முக்கியமான தனிப்பட்ட தீர்மானங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கலாம். உங்கள் தீரமானம் எதுவாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு குழுவால் உங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.

சோதனையைப் பெற்றுக்கொள்ளவில்லை

இந்த ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதில்லை என நீங்கள் தீர்மானித்தால், உங்கள் கர்ப்ப கால வழமையான பராமரிப்பின் மற்றப் பகுதிகள் அனைத்தையும் நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ள முடியும்.

சாத்தியமான சோதனை முடிவுகள்

பெரும்பாலான சோதனைகளின்போது, உங்கள் குழந்தை எதிர்பார்க்கப்பட்டவாறு விருத்தியடைவதாகத் தோன்றுகிறார் எனவும் ஆய்வுச் சோதனைக்கான 11 உடல்ரீதியான மருத்துவ நிலைமைகளில் எதுவும் அவருக்கு இல்லை எனவும் ஆய்வுச் சோதனை காட்டும்.

ஆய்வுச் சோதனையின்போது எதிர்பார்க்கப்படாத எதுவும் கண்டுகொள்ளப்பட்டால், அது குறித்து உங்களுக்கு எப்போதும் சொல்லப்படும்.

ஆய்வுச் சோதனைகள் எல்லா மருத்துவ நிலைமைகளையும் கண்டுகொள்ள முடியாது. ஆய்வுச் சோதனையில் கண்டுகொள்ளப்பட முடியாத ஒரு மருத்துவ நிலைமையுடன் ஒரு குழந்தை பிறப்பதற்கான ஒரு வாய்ப்பு எப்போதும் உள்ளது.

மேலதிக சோதனைகள்

மருத்துவ நிலைமைகளில் ஒன்று உங்கள் குழந்தைக்கு இருந்தால், நிச்சயமாகக் கண்டுகொள்ளப்படுவதற்காக இன்னொரு சோதனை உங்களுக்குக் கொடுக்கப்படக்கூடும்.

மேலதிக சோதனைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், அவற்றைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரம்புகிறீர்களா என நீங்கள் தீர்மானிப்பதற்காக, அவை பற்றி அதிகளவிலான தகவல் உங்களுக்கு வழங்கப்படும். இது குறித்து உங்கள் மருத்துவச்சியுடன் அல்லது மருத்துவ ஆலோசகருடன் நீங்கள் கலந்துரையாட முடியும். தேவையானால், ஒருவேளை இன்னொரு மருத்துவமனையிலுள்ள, ஒரு சிறப்புப் பயிற்சி பெற்றவருக்கு நீங்கள் சிபார்சு செய்யப்படுவீர்கள்.

சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்

ஆய்வுச் சோதனை முடிவுகளை சொனொகிராவெர் அந்த நேரத்தில் உங்களுக்குச் சொல்லக்கூடியவராக இருப்பார்.

20-வார அல்ட்றாசவுண்ட் ஆய்வுச் சோதனை  குறித்து அதிகளவிலான தகவலைக் காணவும்.