என்எச்எஸ் மார்பக ஆய்வுச் சோதனைக்கான உங்கள் வழிகாட்டி (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025
Applies to England
உதவியானது என நீங்கள் கண்டுகொள்ளக்கூடிய என்எச்எஸ் மார்பக ஆய்வுச் சோதனை பற்றிய தகவலை இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்குகின்றது. மார்பக ஆய்வுச் சோதனையில் நீங்கள் பங்குகொள்கிறீர்களா என நீங்கள் தீர்மானிக்கலாம்.
எதற்காக என்எச்எஸ் மார்பக ஆய்வுச் சோதனையை வழங்குகின்றது
ஆய்வுச் சோதனை மார்பக புற்றுநோயிலிருந்தும் உயிர்களைக் காப்பாற்றலாம் என்பதால் நாங்கள் அதை வழங்குகின்றோம்.
மார்பக ஆய்வுச் சோதனை மார்பக புற்றுநோய் குறிகளை ஒரு ஆரம்ப கட்டத்தில் கண்டுகொள்ள முடியும். உங்களால் உணரமுடியாத அல்லது பார்க்கமுடியாத அளவுக்குச் சிறிதாகவுள்ள புற்றுநோய்கள் உள்ளனவா என நாங்கள் பார்க்கிறோம்.
மார்பக புற்றுநோயை முன்னராகவே கண்டறிதல் என்பதன் கருத்து உங்களுக்கான சிகிச்சை அதிகளவில் இலகுவானதாக இருக்கலாம், மற்றும் அது பலனளிப்பதற்கான சாத்தியம் அதிகளவானதாகும்.
மார்பக ஆய்வுச் சோதனைக்காக நாங்கள் யாரை அழைக்கிறோம்
அவர்களது முதலாவது மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதற்காக, 50க்கும் 53க்கும் இடையிலான வயதுடைய எல்லாப் பெண்களையும் நாங்கள் அழைக்கிறோம். அதன் பின்னர், நீங்கள் 71 வயதை அடையும்வரை 3 வருடங்களுக்கு ஒருமுறை நீங்கள் அழைக்கப்படுவீர்கள். இதற்கான காரணம், பெரும்பாலான மார்பக புற்றுநோய்கள் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஏற்படுகின்றன.
நாங்கள் உங்களை அழைப்பதற்காக, உங்களின் சரியான மற்றும் இன்று வரையிலான தொடர்பு விபரங்கள் உங்களின் குடும்ப வைத்தியரின் சிகிச்சை இடத்தில் உள்ளன எனத் தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும். இவற்றில் அடங்குபவை:
- பெயர்
- பிறந்த தேதி
- முகவரி
- கைத் தொலைபேசி எண்
- மின் அஞ்சல் முகவரி
நீங்கள் திருநங்கையாக அல்லது ஆண் பெண் பிரிவு அற்றவராக இருந்து, மார்பக ஆய்வுச் சோதனைக்கு அழைக்கப்படுவதை விரும்பினால், உங்கள் குடும்ப வைத்தியரின் சிகிச்சை இடத்துடன் பேசவும். நீங்கள் மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்ள முடியுமா என அவர்கள் அறிவுரை அளிக்கலாம். திருநங்கை மற்றும் ஆண் பெண் பிரிவு அற்றவருக்கான ஆய்வுச் சோதனை குறித்து அதிகளவான தகவலைக் கண்டுகொள்ளவும். .
நீங்கள் 71 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், 3 வருடங்களுக்கு ஒருமுறை மார்பக ஆய்வுச் சோதனையைப் பெறுவது குறித்து நீங்கள் இன்னும் தீர்மானிக்க முடியும், ஆனால் நீங்கள் இயல்பாகவே அழைக்கப்படமாட்டீர்கள். ஒரு நியமனத்தைச் செய்துகொள்வதற்கு, உங்கள் உ ள்ளூரிலுள்ள மார்பக ஆய்வுச் சோதனைப் பகுதியைக் கண்டுகொள்ளவும் ள்ளூரிலுள்ள மார்பக ஆய்வுச் சோதனைப் பகுதியைக் கண்டுகொள்ளவும் அல்லது தொடர்பு விபரங்களை உங்கள் குடும்ப வைத்தியரின் சிகிச்சை இடத்தில் கேட்டுக்கொள்ளவும்.
மார்பக புற்றுநோய்
மார்பகத்திலுள்ள அணுக்கள் பிளவுபட மற்றும் அசாதாரணமான முறையில் வளர ஆரம்பிக்கும்போது, மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றது.
இதுவே யூகேயிலுள்ள பெண்களில் கண்டுகொள்ளப்படும் மிகப் பொதுவான வகையிலான புற்றுநோயாகும். 7 பெண்களில் 1வர் அவர்களது வாழ்க்கைக் காலத்தில் மார்பக புற்றுநோயைப் பெறக்கூடும்.
மார்பக புற்றுநோய் எந்தளவுக்குப் பாரதூரமானது என்பது அது எந்தளவுக்குப் பெரிதானது மற்றும் புற்றுநோய் பரவியுள்ளதா என்பதைப் பொறுத்ததாகும்.
ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் நல்ல முறையிலான சிகிச்சைகள் மார்பக புற்றுநோயிலிருந்தும் பெருமளவில் குணமடைவதற்கு்ம் அதிலிருந்தும் பிழைப்பதற்கும் வழவகுத்துள்ளன.
மார்பக ஆய்வுச் சோதைனை எவ்வாறு நடைபெறுகின்றது
உங்கள் உள்ளூர் ஆய்வுச் சோதனைச் சேவை வழமையாக ஒரு மருத்துவமனையில் இருக்கும் அல்லது வேறிடத்தில் ஒரு நடமாடும் ஆய்வுச் சோதனைப் பகுதியில் இருக்கும்.
உங்கள் மார்பகங்களின் உட்புற உருவங்களை எடுப்பதற்காக, ஒரு மமோகிராம் என அழைக்கப்படும் ஒரு மார்பக எக்ஸ்-றே என்பதை மார்பக ஆய்வுச் சோதனை பயன்படுத்துகின்றது. உங்கள் மார்பகங்களில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் தொடர்பான குறிகள் உள்ளனவா என நிபுணர்கள் மமோகிராம் சோதனைகளில் பார்ப்பார்கள்.
மார்பக புற்றுநோய் குறிகள் எதுவும் இல்லை என்பதால், பெரும்பாலான மக்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படுவதில்லை.
மார்பக புற்றுநோய் இருப்பதற்கான குறிகள் எதுவும் இருந்தால், உங்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படலாம். மேலதிக சோதனைகள் எதுவும் பற்றிக் கலந்துரையாடுவதற்காக, உங்கள் ஆய்வுச் சோதனைச் சேவை உங்களுக்கு ஒரு நியமனத்தை வழங்குவார்கள்.
வழமையான மார்பக ஆய்வுச் சோதனையின் படிகள்
உங்கள் நியமனத்துக்கு முன்னர்
உங்கள் நியமனத்தை ரத்துச்செய்தல் அல்லது மாற்றிக்கொள்ளுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் உள்ளூர் மார்பக ஆய்வுச் சோதனைச் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.
உங்கள் நியமனத்துக்கு முன்னர், தயவுசெய்து அவர்களுக்குத் தெரிவிக்கவும், உங்களுக்கு:
- கற்றல் குறைபாடு அல்லது நகர்வு பிரச்சினைகள் இருந்தால், மற்றும் உங்களுடன் வருவதற்கு ஒரு பராமரிப்பாளர் போன்ற மேலதிக ஆதரவு தேவைப்பட்டால்
- றொரு வடிவத்தில் அல்லது மொழியில் தகவல் தேவைப்பட்டால்.
இது உங்களுக்குத் தேவைப்படக்கூடிய சரிப்படுத்தல்களைச் செய்வதற்கு உங்கள் உள்ளூர் ஆய்வுச் சோதனைச் சேவைக்கு உதவும். இதில் அடங்கக்கூடியது ஒரு நீடித்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அல்லது வேறொரு இடத்துக்குச் செல்லுதல்.
பின்வருவன இருத்தல் பற்றியும் உங்கள் ஆய்வுச் சோதனைச் சேவைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்:
- உங்களுக்கு மார்பக உள்வைப்புகள் இருந்தால்
- உங்களுக்கு ஒரு பேஸ்மேகர் அல்லது உள்வைக்கப்பட்டுள்ள வேறு ஏதாவது மருத்துவ சாதனம் இருந்தால்.
- நீங்கள் கருவுற்றிருந்தால் அல்லது தாய்ப்பால் ஊட்டுபவராக இருந்தால்
- உங்கள் இரண்டு மார்பகங்களும் அறுவைச் சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டிருந்தால் (ஒரு மஸ்டெக்டொமி)
- நீங்கள் ஒரு மார்பக மருத்துவ ஆலோசகரின் பராமரிப்பின் கீழ் இருந்தால்
- கடந்த 6 மாதங்களில் ஒரு மார்பக மமோகிராம் சோதனையைப் பெற்றிருந்தால்
உங்கள் நியமனத்தின்போது
மமோகிராபர் என அழைக்கப்படும் ஒரு நிபுணர் உங்கள் மமொகிராம்களை எடுப்பார். இந்த மமோகிராம் நிபுணர் ஒரு பெண்ணாக இருப்பார். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நிகழும் என அவர்கள் விளக்குவார்கள். உங்களிடம் இருக்கக்கூடிய கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
மார்பக ஆய்வுச் சோதனையின்போது, உங்களின் ஒவ்வொரு மார்பகத்துக்குமாக 2 மமோகிராம்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
- இடுப்பு வரை உடுப்புக்களை அகற்றுவதற்காக ஒரு தனியான இடம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
- எக்ஸ்-றே இயந்திரத்தில் சரியான நிலையில் உங்கள் மார்பகத்தை வைத்திருப்பதற்கு, மமோகிராம் நிபுணர் உதவுவார். அவர்கள் உங்கள் மார்பகத்தைத் தொட வேண்டும்.
- உங்கள் மார்பகத்தை சரியான இடத்தில் வைத்திருப்பதற்காக இந்த இயந்திரம் உங்கள் மார்பகத்தை அழுத்துகின்றது. நீங்கள் நிலையாக இருக்க வேண்டும். சில பெண்களுக்கு இது அசௌகரியமானதாக அல்லது வலியுள்ளதாக இருக்கக்கூடும். எந்த அசௌகரியமும் நீண்ட நேரத்துக்கு நீடிக்காது. அது உங்களுக்குக் கடினமானதாக இருந்தால், அதை நிறுத்துமாறு நீங்கள் கேட்கலாம்.
- அவர்கள் மேற் பகுதியிலிருந்து முதல் உருவத்தை எடுப்பார்கள். அதன் பின்னர் அதே மார்பகத்தின் பக்கமாக மறுபடியும் உருவத்தை எடுப்பார்கள்.
- உங்கள் மற்ற மார்பகம் தொடர்பாக இதே மாதிரியான செயல்முறையை திரும்பவும் செய்வார்கள்.
ஒவ்வொரு மமோகிராமும் சில வினாடிகளை மாத்திரமே எடுக்கின்றது. இந்த நியமனம் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடிக்கக்கூடாது, ஆனால், பெரும்பாலும் அதிலும் குறைவான நேரத்தையே அது எடுக்கின்றது.
உங்களின் முதலாவது நியமனத்தின்போது, மமோகிராம் நிபுணர் வழமையாக உங்கள் மார்பகங்களின் தெளிவான உருவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அரிதான முறையில், நல்ல தரமான உருவங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு இரண்டாவது ஆய்வுச் சோதனை நியமனம் உங்களுக்குத் தேவைப்படக்கூடும்.

மமோகிராபர் என அழைக்கப்படும் ஒரு பெண் நிபுணர் உங்கள் மமோகிராம்களை எடுப்பார்.
இந்த நாளில் நடைமுறை உதவிக் குறிப்புகளும் அறிவுரைக் குறிப்புகளும்
இடுப்பு வரை உடுப்புக்களை அகற்றல் உங்களுக்குத் தேவைப்படும். அதனால், இதனை இலகுவாக்குவதற்கு நீளக் காற்சட்டைகள், அல்லது ஒரு பாவாடை மற்றும் ஒரு மேலுடுப்பு போன்றவற்றை அணிவதற்கு நீங்கள் விரும்பக்கூடும்.
தயவுசெய்து நியமன நாளில் டியொடறண்ட் அல்லது ரல்கம் பவுடர் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது உங்கள் சோதனை முடிவைப் பாதிக்கக்கூடும். உங்களுக்கு முடியுமானால், நீங்கள் வருவதற்கு முன்பாக, கழுத்தணிகளை மற்றும் மார்பாககாம்பு குத்தல்களைத் தயவுசெய்து அகற்றவும்.
உங்களுக்குப் பதட்டமாக இருந்தால் அல்லது உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால், மார்பக ஆய்வுச் சோதனை குழுவினருடன் நீங்கள் உரையாடலாம். உங்களுக்கு ஆதரவாக, ஒரு நண்பர், உறவினர் அல்லது பராமரிப்பாளர் போன்ற ஒருவரையும் நீங்கள் கொண்டுவரலாம். உங்கள் நியமன நேரத்தில், அவர்கள் வழமையாக கா்த்திருத்தல் அறையில் இருக்க வேண்டும்.
மார்பக ஆய்வுச் சோதனை முடிவுகள்
உங்கள் ஆய்வுச் சோதனைக்குப் பின்னர் 2 வாரங்களுக்குள் உங்கள் சோதனை முடிவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சோதனை முடிவுகளை உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துக்கும் அனுப்புவோம். உங்கள் சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு, சிலவேளைகளில் அது கூடுதலான காலத்தை எடுக்கின்றது.
2 சாத்தியமான முடிவுகள் உள்ளன:
- இந்த நேரத்தில் மேற்கொண்டு சோதனைகள் எதுவும் தேவைப்படவில்லை, அவ்லது
- மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படுகின்றன.
இந்த நேரத்தில் மேற்கொண்டு சோதனைகள் எதுவும் தேவைப்படவில்லை
பெரும்பாலான மக்கள் (100இல் 96 மக்கள்) இந்த முடிவைப் பெறுகிறார்கள்
அதன் கருத்து உங்கள் மமோகிராம்களில் மார்பக புற்றுநோய் தொடர்பான குறி எதையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை.
உங்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் எதுவும் தேவைப்படவில்லை. நீங்கள் இன்னும் 71 வயதுக்குக் கீழ்ப்பட்டவராக இருந்தால், 3 வருடங்களில் திரும்பவும் மார்பக ஆய்வுசு் சோதனையை உங்களுக்கு வழங்குவோம்.
இந்தச் சோதனை முடிவு உங்களுக்கு மார்பக புற்றுநோய் இல்லை அல்லது வருங்காலத்தில் அது உங்களுக்கு ஏற்படாது என உத்தரவாதம் அளிக்கவில்லை. உங்கள் மார்பகங்களில் அசாதாரண மாற்றங்கள் எதையும் நீங்கள் கவனித்தால், தயவுசெய்து முடிந்தளவு விரைவில் உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்தைத் தொடர்புகொள்ளவும்.
மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படுகின்றன
மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு 100 மக்களில், 4 பேருக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படும்.
இதனுடைய கருத்து உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்பதாக இருக்கவேண்டியதில்லை. மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படும் பெரும்பாலான மக்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதில்லை.
ஒரு மார்பக மதிப்பீடு நியமனத்துக்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் கவலைப்பட்டால் அல்லது உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால், நியமனத்துக்கு முன்னராக, ஒரு மார்பக ஆய்வுச் சோதனை தாதியுடன் தொலைபேசியில் பேசலாம். மேற்கொண்டு சோதனைகளுக்காக நீங்கள் பெற்றுக்கொள்ளும் அழைப்பு அவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது என உங்களுக்குச் சொல்லும்.
உங்கள் நியமனத்தின்போது, எந்தச் சோதனைகள் உங்களுக்குத் தேவைப்படும் என ஒரு நிபுணர் விளக்குவார்.
இவற்றில் அடங்கக்கூடியவை:
- உங்கள் மார்பகங்கள் தொடர்பான ஒரு உடல்ரீதியான சோதனை
- மேற்கொண்டு மமோகிராம் சோதனைகள்
- உங்கள் மார்பகங்கள் தொடர்பான அல்ட்றாசவுண்ட் சோதனை
- உங்கள் மார்பகங்களிலிருந்து ஒரு பயோப்சி என அழைக்கப்படும் ஒரு சிறிய மாதிரியை எடுத்துக்கொள்ளுதல்
என்ன சோதனைகள் செய்யப்பட்டன என்பதைப் பொறுத்து, உங்கள் சோதனை முடிவுகளை எப்போது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என நிபுணர் குழு உங்களுக்குச் சொல்வார்கள்.
மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 100 மக்கள் தொடர்பான முடிவுகள்
மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 100 மக்களில், 96 மக்களுக்கு மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படாது, 4 பேருக்கு மாத்திரமே மேற்கொண்டு சோதனைகள் தேவைப்படும். இந்த 4 மக்களில், 1வர் மார்பக புற்றுநோய் உள்ளவராகக் கண்டுகொள்ளப்படுவார்.
இந்த புள்ளிவிபரங்கள் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டி மாத்திரமே. உங்களுக்கு ஏற்படக்கூடிய தனிப்பட்ட ஆபத்து உங்கள் வயதையும் ஆரோக்கியத்தையும் பொறுத்ததாகும்.
மார்பக ஆய்வுச் சோதனையின் சாத்தியமான ஆபத்துக்கள்
மார்பக ஆய்வுச் சோதனையால் ஏற்படக்கூடிய முக்கியமான ஆபத்து என்னவெனில் ஒருபோதும் தீங்கை ஏற்படுத்தியிருக்காத ஒரு புற்றுநோயை அது கண்டுகொள்ளலாம். இதற்கான காரணம், ஒரு புற்றுநோய் வாழ்க்கையை-அச்சுறுத்தும் ஒன்றாக மாறலாமா இல்லையா என எங்களால் எப்போதும் கணிக்க முடியாது.
மார்பக புற்றுநோயை நாங்கள் கண்டால், உங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். இதன் கருத்து, வாழ்க்கைக்கு -அச்சுறுத்தலாக-இல்லாத புற்றுநோய்க்காக நீங்கள் சிகிச்சையைப் பெறக்கூடும். உங்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டால், அது குறித்து நீங்கள் தீர்மானிப்பதற்கு உங்களுக்கு உதவுவதற்காக, உங்களுக்குள்ள மாற்று வழிகள் குறித்து நிபுணர் குழு விளக்குவார்கள்
எந்த ஆய்வுச் சோதனையும் 100% நம்பகரமானதல்ல.
மிகவும் அரிதாக, ஒரு புற்றுநோய் கண்டுகொள்ளப்படாமல் இருக்கலாம். இருக்கின்ற ஒரு புற்றுநோயை ஆய்வுச் சோதனை எப்போதும் கண்டுகொள்வதில்லை. சிலவேளைகளில், புற்றுநோய்கள் மமோகிராமில் பார்க்கப்பட முடியாது.
ஆய்வுச் சோதனைகளுக்கு இடைப்பட்ட காலத்திலும் புற்றுநோய் உண்டாகலாம். நீங்கள் இன்னும் ஒழுங்கான முறையில் உங்கள் மார்பகங்களைப் பார்த்து உணர வேண்டும். அப்படியானால், ஏதாவது அசாதாரண மாற்றங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மார்பக புற்றுநோய் குறிகள் உங்களுக்கு உள்ளது என நீங்கள் நினைத்தால், முடிந்தளவு விரைவாக உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்தைத் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
மமோகிராம் சோதனைகளைப் பெற்றுக்கொள்வது எக்ஸ்-றேஸ் மூலமாக சிறிதளவிலான கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இது சிறிதளவில் உங்கள் வாழ்க்கைக் காலத்தின்போது உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது. ஆபத்து எதையும் குறைத்துக்கொள்வதற்காக என்எச்எஸ் இயந்திரங்கள் குறைந்தளவிலான கதிர்வீச்சு அளவுகளைப் பயன்படுத்துகின்றன. கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்துக்களைக் காட்டிலும் மார்பக ஆய்வுச் சோதனையால் ஏற்படும் ஒட்டுமொத்தமான நன்மைகள் மிகவும் அதிகமானவை என ஆராய்ச்சி காட்டுகின்றது.
மார்பக புற்றுநோய் குறிகள்
வழமையாக உங்கள் மார்பகங்கள் எவ்வாறு தோன்றுகின்றன, மற்றும் எவ்வாறு உணருகின்றன எனத் தெரிந்துகொள்ளுதல் முக்கியமானது. இது உங்கள் மார்பகங்களில் ஏற்படும் ஏதாவது மாற்றங்களை அவதானித்தலை அதிகளவில் இலகுவாக்குகின்றது.
பெண்களில் மார்பக புற்றுநோயின் குறிகளில் அடங்கக்கூடியவை:
- உங்கள் மார்பகத்தில், மார்பில் அல்லது அக்குளில் ஒரு கட்டி அல்லது வீக்கம்
- பள்ளம் அல்லது சிவப்பு போன்று, உங்கள் மார்பகத்தின் தோலில் ஒரு மாற்றம் (கறுப்பு அல்லது பழுப்பு தோலில் ஏற்படும் தடிப்புகளை அல்லது நிற மாற்றங்களைக் கண்டுகொள்ளுதல் கடினமாகும்)
- ஒரு ஆரஞ்சு தோல் தோற்றம். அங்கே தோல் அதிகளவில் தடிப்பாக, துளைகள் அதிகளவில் வெளிப்படையாக இருக்கும்.
- 1 அல்லது இரண்டு மார்பகங்களிலும் அளவில் அல்லது வடிவத்தில் ஒரு மாற்றம்
- மார்பக காம்பிலிருந்து வடிதல். இதில் இரத்தம் இருக்கக்கூடும்
- உங்கள் மார்பக காம்பின் வடிவத்தில் அல்லது தோற்றத்தில் ஒரு மாற்றம், அது உள்நோக்கி இழுப்பது (உள்நோக்கி வளைந்த மார்பக காம்பு) போன்றது, அல்லது அதில் ஒரு தடிப்பு இருத்தல் (அது எக்சிமா போன்று காணப்படும்).
உங்கள் மார்பகங்களில் இருக்கும் வலி மாத்திரமே வழமையாக ஒரு மார்பக புற்று நோய் குறியாக இருப்பதில்லை. எல்லா நேரத்திலும் அல்லது பெரும்பாலான நேரத்தில் மார்பகத்தில் அல்லது அக்குளில் உங்களுக்கு வலி அல்லது அசௌகரியம் இருந்தால், அதைச் சரிபார்த்துக்கொள்ளுதல் சிறந்ததாகும்.
இந்த நோய்க் குறிகளில் எதுவும் உங்களுக்கு இருந்தால், முடிந்தளவில் விரைவாக உங்கள் குடும்ப மருத்துவருடன் பேசவும். குடும்ப மருத்துவரின் வரவேற்பிட குழுவினரிடம் ஒரு அவசர நியமனத்தைக் கேட்டுக்கொள்ளவும். அண்மையில் நீங்கள் மார்பக ஆய்வுச் சோதனையைப் பெற்றிருந்தாலும்கூட, நீங்கள் இதைச் செய்வது முக்கியமானது.
யாருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளது?
மார்பக புற்றுநோய் எவருக்கும் ஏற்படலாம், ஆனால் நீங்கள் அதைப் பெறுவதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளது, நீங்கள்:
- 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்
- உங்களுக்கு அடர்த்தியான மார்பக திஸ்சு இருந்தால்
- மார்பக அல்லது கருப்பை புற்றுநோயைப் பெற்றிருந்த வேறு எவரும் உங்கள் குடும்பத்தில் இருந்தால் – ஒரு குறைபாடுள்ள BRCA மரபணு போன்ற ஒரு குறைபாடுள்ள மரபணுவை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கக்கூடும்.
- தீங்கற்ற மார்பக வியாதி, பால் சுரப்பி நாளங்களில் மட்டுமுள்ள வியாதி அல்லது பால் சுரப்பி நாளங்களில் அசாதாரண அணுக்கள் ஏற்படுதல் போன்ற சில மார்பக வியாதிகள் உங்களுக்கு இருந்தால்.
மார்பக அல்லது கருப்பை புற்றுநோய் உங்கள் குடும்பத்தில் இருந்தால், மற்றும் அறிவுரையை நீங்கள் விரும்பினால், உங்கள் குடும்ப மருத்துவருடன் அல்லது மருத்துவ தாதியுடன் நீங்கள் பேசலாம்.
வாரம் ஒன்றுக்கு 14 யூனிட்டுக்களுக்கு மேலாக மதுபானம் அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் ஒரு ஆரோக்கியமான எடையை வைத்திருப்பதன் மூலமாகவும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை நீங்கள் குறைத்துக்கொள்ள முடியும்.
மருத்துவ சோதனைகள்
ஒரு மருத்துவ சோதனையில் பங்குகொள்ள விரும்புகிறீர்களா என நீங்கள் கேட்டுக்கொள்ளப்படக்கூடும். இவை மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்களாகும். உங்களுக்கு வழங்கப்படும் எந்தச் சோதனையும் ஆய்வுச் சோதனைகளின் அல்லது சிகிச்சைகளின் மிகச் சிறந்த வகைகள் பற்றிய தகவலைச் சேகரிக்கும். இதன் மூலமாக, வருங்காலத்தில் சேவைகளை எங்களால் மேம்படுத்த முடியும். பங்குகொள்வதா இல்லையா என நீங்கள் தீர்மானிக்க முடியும்.
அதிகளவிலான தகவலும் ஆதரவும்
மார்பக ஆய்வுச் சோதனை தொடர்பான தகவலுக்கு, உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்தை அல்லது உள்ளூர் மார்பக ஆய்வுச் சோதனை சேவையை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
வேறு மொழிகள் உட்பட, மாற்று வடிவங்களில் இந்தத் தகவல் கிடைக்கின்றது. ஈசி றீட் என்பதிலும் இது கிடைக்கின்றது.
ஒரு வேறு வடிவத்தை வேண்டிக்கொள்வதற்கு, நீங்கள் 0300 311 2233 இல் அழைக்கலாம் அல்லது england.contactus@nhs.net இல் மின் அஞ்சல் அனுப்பலாம்.
பின்வருவனவற்றையும் நீங்கள் செய்யலாம்:
- மார்பக ஆய்வுச் சோதனை தொடர்பான அதிகளவு தகவலைக் கண்டுகொள்ளலாம்
- உங்கள் மார்பகங்களை எவ்வாறு சரிபார்ப்பது என்பது தொடர்பான அறிவுரையை கண்டுகொள்ளலாம்
- என்எச்எஸ் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய திருநங்கை மற்றும் ஆண் பெண் பிரிவு அற்றோருக்கான தகவலை வாசிக்கலாம்.
Breast Cancer Now என்பது மார்பக ஆரோக்கியம் மற்றும் மார்பக ஆய்வுச் சோதனை தொடர்பான இலவசமான மற்றும் ரகசியமான தகவல் மற்றும் ஆதரவையும் வழங்குகின்றது. 0808 800 6000 இல் அவர்களின் உதவிச் சேவையை அழைக்கலாம். உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால், மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.
எவ்வாறு என கண்டுகொள்ளவும். ஆய்வுச் சோதனையிலிருந்தும் விலகுவது .