வழிகாட்டுதல்

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் (Abdominal aortic aneurysm - AAA) ஆய்வுச் சோதனை- 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கான ஒரு இலவச சோதனை (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 9 ஜனவரி 2026

Applies to England

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் (AAA) ஆய்வுச் சோதனையில் பங்குகொள்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா என நீங்கள் தீர்மானிக்க முடியும். தீர்மானிப்பதில் உங்களுக்கு உதவுவது இந்தத் துண்டுப்பிரசுரத்தின் நோக்கமாகும்.

எதற்காக என்எச்எஸ் இந்த AAA ஆய்வுச் சேதனையை வளங்குகின்றது

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் அல்லது AAA என்பது தமனி எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். தமனி என்பது இருதயத்திலிருந்து வயிற்றுக்கு (ரமி) இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதானமான இரத்தக் குழாயாகும். பெரிதான இரத்தக் குழாய் வீக்கங்கள் பாரதூரமானவையாக இருக்கலாம். இரத்தக் குழாய் வீக்கங்களை ஆரம்பத்தில் கண்டறிந்து, அவற்றை அவதானிப்பதற்காக அல்லது அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாங்கள் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம்.

உங்களுக்கு ஒரு இரத்தக் குழாய் வீக்கம் எதுவும் இருந்தால், அது குறித்த நோய்க் குறிகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும். இதன் கருத்து, உங்களுக்கு ஒன்று உள்ளதா என நீங்கள் வழமையாகச் சொல்ல முடியாது. கண்டறிவதற்கான மிகவும் இலகுவான வழி உங்கள் வயிறு தொடர்பான ஒரு ஒலிப்பட (அல்ட்றாசவுண்ட்) ஆய்வுச் சோதனையைப் பெற்றுக்கொள்வதாகும்.

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஆய்வுச் சோதனைக்காக நாங்கள் யாரை அழக்கிறோம்

அவர்கள் 65 வயதை அடைந்த வருடத்தில் எல்லா ஆண்களையும் ஆய்வுச் சோதனைக்காக என்எச்எஸ் அழைக்கின்றது. நீங்கள் ஒரு குடும்ப மருத்துவருடன் பதிவுசெய்யப்பட்டு இங்கிலாந்தில் வசிக்க வேண்டும். உங்கள் குடும்ப மருத்துவர் சரியான விபரங்களை வைத்திருக்கிறார் எனத் தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும். இவற்றில் அடங்குபவை:

  • பெயர்
  • பிறந்த தேதி
  • முகவரி
  • தொடர்புக்கான எண்
  • மின் அஞ்சல் முகவரி

நீங்கள் 65 வயதை அடைந்தபோது ஒரு குடும்ப மருத்துவருடன் நீங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்றால், அல்லது உங்களுக்கான இன்று வரையிலாான சரியான விபரங்கள் எங்களிடம் இருந்திருக்காவிட்டால், உங்களுக்கான அழைப்பு காலதாமதமாக வரக்கூடும்.

ஆய்வுச் சோதனையைப் பெற்றிராத 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், ஒரு சோதனையை ஏற்பாடு செய்வதற்காக, அவர்களது உள்ளூர் AAA ஆய்வுச் சோதனை சேவையைத் தொடர்புகொள்ள முடியும்.

திருநங்கையர் மற்றும் ஆண்-பெண் பால் அற்றோர்

அவர்களது குடும்ப மருத்துவருடன் பெண் என்ற முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் AAA ஆய்வுச் சோதனைக்கு அழைக்கப்படவில்லை. 65 வயதுக்கு மேற்பட்டோரான பிறப்பில் ஆண்கள் எனக் குறிப்பிடப்பட்ட திருநங்கையர் மற்றும் ஆண்-பெண் பால் அற்றோர் ஒரு AAA ஆய்வுச் சோதனையைக் கேட்டுக்கொள்ள முடியும். உங்கள் குடும்ப மருத்துவர் இதை உங்களுக்காக ஏற்பாடு செய்யக்கூடியவராக இருப்பார்.

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் (AAA)

உங்கள் உடம்புக்கு இரத்தத்தை வழங்கும் முக்கியமான இரத்த நாளம் தமனியாகும். இது உங்கள் இருதயத்திலிருந்து கீழ்நோக்கிச் சென்று உங்கள் மார்புக்கும் வயிற்றுக்கும் செல்கிறது.

சிலரில், அவர்களது வயது அதிகரிக்கும்போது, வயிற்றிலுள்ள தமனியின் சுவர் பலவீனமடையலாம். தமனி பின்னர் (ஒரு பலூன் போன்று) விரிவடைவதற்கு ஆரம்பித்து ஒரு இரத்தக் குழாய் வீக்கத்தைத் தோற்றுவிக்கின்றது.

65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் இந்த நிலைமை மிகவும் பொதுவானதாகும்.

தமனி வயிற்றில் வீக்கமடைந்து ஒரு AAA என்பதை ஏற்படுத்தலாம்

ஒரு AAA மூலமான ஆபத்துக்கள்

பெரிதான இரத்தக் குழாய் வீக்கம் ஏற்படுதல் அரிதாகும். ஆனால், அது மிகவும் பாரதூரமானதாக இருக்கலாம். தமனியின் சுவர் விரிவடையும்போது, அது வெடித்து அதன் மூலமாக உட்புறத்தில் இரத்தக் கசிவு ஏற்படலாம். இந்த இரத்தக் குழாய் வெடிப்பால், ஒவ்வொரு 100 பேரில் ஏறக்குறைய 85 பேர் இறக்கிறார்கள்.

ஒரு இரத்தக் குழாய் வீக்கம் சிறியதாக அல்லது நடுத்தர அளவில் உள்ளதாக நாங்கள் கண்டுகொண்டால், அது பெரிதாக வருகின்றதா எனப் பார்ப்பதற்காக நாங்கள் அதைத் தொடர்ந்து சரிபார்த்தல் முக்கியமானது. ஒரு சிறிய இரத்தக் குழாய் வீக்கம் உங்களுக்கு இருந்தால், ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஒரு ஆய்வுச் சோதனைக்காக உங்களை அழைப்போம். அந்த தமனி வீக்கம் ஒரு நடுத்தர அளவில் இருந்தால், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை உங்களை அழைப்போம்.

AAA ஆய்வுச் சோதனை எவ்வாறு நடைபெறுகின்றது

கருத்தரித்த பெண்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற முறையில், ஒரு இலகுவான அல்ட்றாசவுண்ட் ஆய்வுச் சோதனையை நாங்கள் பயன்படுத்துகின்றோம். இது மிகவும் விரைவானது. வழமையாக 10 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தை எடுக்கின்றது.

சிகிச்சை இடத்தில், நாங்கள் உங்களின் தனிப்பட்ட விபரங்களைச் சரிபார்த்து, சோதனை பற்றி உங்களுக்கு விளக்குவோம். கேள்விகள் எதையும் நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.

அதன் பின்னர், கீழே படுத்திருக்குமாறு உங்களைக் கேட்போம். நீங்கள் உங்கள் மேலுடுப்பை உயர்த்த வேண்டும் அல்லது உங்கள் சேர்ட்டின் பொத்தான்களை எடுத்துவிட வேண்டும், ஆனால் உங்கள் உடுப்புக்களை நீங்கள் அகற்றத் தேவையில்லை.

உங்கள் வயிற்றின்மேல் ஒரு குளிரான ஜெல் என்பதைப் போடுவோம். அதன் பின்னர், ஆய்வுச் சோதனைக் கருவியை உங்கள் தோலுக்கு மேலாக நகர்த்துவோம். இத்தச் சோதனை முற்றிலும் வலியற்றதாகும். அது உங்கள் இரத்தக் குழாயின் ஒரு படத்தைத் திரையில் காட்டும், நாங்கள் அதை அளவிடுவோம்.  

சோதனையின் முடிவை நாங்கள் உங்களுக்கு உடனடியாகவே சொல்ல முடியும். உங்கள் சோதனை முடிவுகளின் பிரதி ஒன்றை உங்கள் குடும்ப மருத்துவருக்கு அனுப்புவோம்.

சிலவேளைகளில் ஆய்வு தெளிவற்றதாக இருந்து, தமனி சரியான முறையில் சரிபார்க்கப்பட முடியாமல் இருக்கலாம். இது குறித்துக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இன்னொரு சோதனையை, வழமையாக வேறொரு நாளில், பெற்றுக்கொள்ளுமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

AAA ஆய்வுச் சோதனை முடிவுகள்

சாத்தியமான 4 முடிவுகள் உள்ளன:

  1. வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் இல்லை
  2. வயிற்றில் சிறிய இரத்தக் குழாய் வீக்கம்
  3. வயிற்றில் நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்
  4. வயிற்றில் பெரிய இரத்தக் குழாய் வீக்கம்

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை

உங்கள் வயிற்றின் இரத்தக் குழாய் 3 செண்டிமீட்டர்களுக்குக் குறைவான அகலமுள்ளதாக இருந்தால், இதனுடைய கருத்து உங்களுக்கு இரத்தக் குழாய் வீக்கம் இல்லை. பெரும்பாலான ஆண்கள் இந்த முடிவைப் பெறுகிறார்கள். இதன் பின்னர் உங்களுக்குச் சிகிச்சை அல்லது அவதானித்தல் தேவைப்படவில்லை. நாங்கள் உங்களை இரத்தக் குழாய் ஆய்வுச் சோதனைக்காகத் திரும்பவும் அழைக்கமாட்டோம்.

வயிற்றில் சிறிய இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் வயிற்றின் இரத்தக் குழாய் 3 செண்டிமீட்டர்களுக்கும் 4.4 செண்டிமீட்டர்களுக்கும் இடையிலான அகலமுள்ளதாக இருந்தால் உங்களுக்கு ஒரு சிறிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட 80 ஆண்களில் ஏறக்குறைய 1 ஆணுக்கு ஒரு சிறிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. அது பெரிதாகின்றதா எனச் சரிபார்த்துக்கொள்வதற்காக, 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சோதனைக்காக நாங்கள் உங்களைத் திரும்பவும் அழைப்போம்.

வயிற்றில் நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் வயிற்றின் இரத்தக் குழாய் 4.5 செண்டிமீட்டர்களுக்கும் 5.4 செண்டிமீட்டர்களுக்கும் இடையிலான அகலமுள்ளதாக இருந்தால், உங்களுக்கு ஒரு நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட 500 ஆண்களில் ஏறக்குறைய 1 ஆணுக்கு ஒரு நடுத்தர அளவிலான இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. அது பெரிதாகின்றதா எனச் சரிபார்த்துக்கொள்வதற்காக, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சோதனைக்காக நாங்கள் உங்களைத் திரும்பவும் அழைப்போம்.

பெரிய இரத்தக் குழாய் வீக்கம்

உங்கள் வயிற்றின் இரத்தக் குழாய் 5.5 செண்டிமீட்டர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அகலமுள்ளதாக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட 2,500 ஆண்களில் ஏறக்குறைய 1 ஆணுக்கு ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது. ஒரு சிறப்பான குழுவுடன் ஒரு நியமனத்தை உங்களுக்குக் கொடுப்போம். அவர்கள் மேலதிகமான ஆய்வுச் சோதனைகளைச் செய்வார்கள், சாத்தியமான மாற்று வழிகள், வழமையாக ஒரு அறுவைச் சிகிச்சை, குறித்து அவர்கள் உங்களுடன் உரையாடுவார்கள்.

ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கத்தை அவதானித்தல்

உங்களுக்கு ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கம் இருந்தால், அது பெரிதடைந்தால் மாத்திரமே உங்களுக்குச் சிகிச்சை தேவைப்படும்.

உங்கள் வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கத்தின் அளவை அவதானித்தல் முக்கியமானது. இதற்கான காரணம், அது ஒரு பெரிய வீக்கமாக விரிவடைகின்றதா என அறிவதற்காகவாகும்.  

வயிற்றில் பெரும்பாலான இரத்தக் குழாய் வீக்கங்கள் மிகவும் மெதுவாகவே பெரிதாகின்றன. ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கம் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு அது ஒருபோதும் பெரிதடையாமல், அவர்களுக்குச் சிகிச்சை தேவையாக இருக்காது.

இரத்தக் குழாய் நோயாளிகளைப் பராமரிப்பதில் சிறப்பறிவுள்ள ஒரு செவிலியரை நீங்கள் பார்ப்பதற்காக ஒரு நியமனத்தை நாங்கள் ஏற்பாடு செய்வோம். வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கம் பெரிதடைவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பது குறித்து இந்தச் செவிலியர் உங்களுக்கு அறிவுரை அளிப்பார். உங்கள் குடும்ப மருத்துவரும் உங்களுக்கு மாத்திரைகளைக் கொடுக்கலாம் அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் எவற்றையும் அவர் மறுபரிசீலனை செய்யலாம். உங்கள் இரத்த அழுத்தத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு நீங்கள் கேட்கப்படலாம்.

ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கத்துக்குச் சிகிச்சையளித்தல்

வயிற்றில் ஒரு பெரிய இரத்தக் குழாய் வீக்கம் இருப்பதை நாங்கள் கண்டால், ஒரு சிறப்பான குழுவுக்கு நாங்கள் உங்களைச் சிபார்சு செய்வோம். அவர்கள் அதிகளவிலான சோதனைகளைச் செய்வார்கள், ஒரு நிபுணர் சாத்தியமான சிகிச்சை மாற்று வழிகள் குறித்து உங்களுடன் கலந்துரையாடுவார். இது வழமையாக ஒரு அறுவைச் சிகிச்சையாக இருக்கும். நீங்கள் அதை விரும்புகிறீர்கள் எனத் தீர்மானித்தால், உங்கள் நியமனத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அது செய்யப்படும்.

ஆய்வுச் சோதனையின்போது கண்டுகொள்ளப்பட்ட தமனி சுவரின் பெரிய வீக்கத்துக்கான சிகிச்சை வழமையாகப் பாதுகாப்பானது, மற்றும் பலனளிக்கக்கூடியது. இந்தச் சிகிச்சை மூலமான ஆபத்துக்கள் உள்ளன. இவை குறித்து நிபுணர் விபரமாக உங்களுக்கு விளக்குவார்.

வயிற்றில் பெரிய இரத்தக் குழாய் வீக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஒரு அறுவைச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில்லை.

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கத்துக்கான ஆய்வுச் சோதனையின் சாத்தியமான ஆபத்துக்கள்

எந்த ஆய்வுச் சோதனையும் முற்றிலும் பலனுள்ளதாக இருப்பதில்லை, ஆனால், வயிற்றில் இரத்தக் குழாய் வீங்கள்கள் இருப்பதைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஆய்வு மிகவும் நம்பகரமானது. இரத்தக் குழாய் சுவரில் வீக்கம் இருப்பதை ஆய்வுச் சோதனை கண்டுகொள்ளாவிட்டால், ஒரு ஆணுக்கு வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஏற்படுவது அரிதானது. வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் தொடர்பான ஆய்வுச் சோதனை இரத்தக் குழாய் சுவரில் வெடிப்பு ஏற்படும் ஆபத்தை முற்றிலும் அகற்றாது. ஆனால், உங்களுக்கான ஆபத்தைக் குறைப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழியாகும்.

ஆய்வுச் சோதனை மூலமாக ஆபத்து எதுவும் இருப்பதில்லை. ஆனால், ஒரு இரத்தக் குழாய் வீக்கத்துக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஒரு அறுவைச் சிகிச்சை உங்களுக்குத் தேவைப்பட்டால், ஆபத்துக்கள் உள்ளன. ஆய்வுச் சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு 10,000 ஆண்களில் ஏறக்குறைய 30 ஆண்கள் ஒரு அறுவைச் சிகிச்சையைப் பெறுகிறார்கள். சராசரியில், அறுவைச் சிகிச்சையைப் பெறும் 67 ஆண்களில் 1 ஆண் இறப்பார். சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால், வயிற்றின் இரத்தக் குழாய் வீக்கம் ஒருபோதும் வெடிக்காமல் இருந்திருக்கலாம் என்பதற்கான ஒரு குறைவான வாய்ப்பு உள்ளது.

வயிற்றில் ஒரு இரத்தக் குழாய் வீக்கம் ஏற்படுவதற்கான அதிகளவான சாத்தியம் யாருக்கு உள்ளது

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 4 மடங்கு அதிகளவில் வயிற்றில் இரத்தக் குழாய் பெறும் சாத்தியம் உள்ளவர்கள். அதன் காரணமாகவே பெண்களுக்கு இந்த ஆய்வுச் சோதனை வழங்கப்படுவதில்லை. வயது அதிகரிக்கும்போது இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

பின்வருவன காரணமாகவும் வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஒன்று உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது, நீங்கள்:

  • புகைப்பவர் அல்லது புகைப்பவராக இருந்துள்ளீர்கள்
  • உங்களுக்கு உயர்வான இரத்த அழுத்தம் உள்ளது
  • உங்கள் சகோதரன், சகோதரி அல்லது பெற்றோருக்கு வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் உள்ளது அல்லது இருந்துள்ளது.

அதிகளவிலான தகவலும் ஆதரவும்

வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் தொடர்பான ஆய்வுச் சோதனை பற்றிய அதிகளவிலான தகவலுக்கு, உங்கள் உள்ளூர் ஆய்வுச் சோதனைச் சேவையைத் தொடர்புகொள்ளவும். உங்களுக்கு மேலதிக ஆதரவு தேவைப்பட்டால், உங்களின் நியமனத்துக்கு முன்னராக அவர்களுக்குத் தயவுசெய்து தெரிவிக்கவும். இதில் அடங்குபவை: ஒரு பராமரிப்பாளர் உங்களுடன் வருதல், ஒரு நீண்ட நியமனத்தைப் பெற்றுக்கொள்ளுதல், அல்லது ஒரு வேறிடத்துக்குச் செல்லுதல்.

உங்களுக்கான அழைப்பில் அவர்களது தொடர்பு விபரங்கள் உள்ளன. உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துடனும் நீங்கள் பேசலாம்.

உங்கள் உள்ளூரிலுள்ள வயிற்றின் இரத்தக் குழாய் வீக்க ஆய்வுச் சோதனை சேவையின் தொடர்பு விபரங்களைக் கண்டுகொள்ளவும்.

இந்தத் தகவல், ஈசி றீட் மற்றும் ஏனைய மொழிகள் உட்பட்ட வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. இன்னொரு வடிவத்தை வேண்டிக்கொள்வதற்கு, நீங்கள் 0300 311 22 33 இல் அழைக்கலாம் அல்லது england.contactus@nhs.net இல் மின் அஞ்சல் அனுப்பலாம்.

பின்வருவனவற்றையும் நீங்கள் செய்யலாம்: 

  • NHS.UK என்பதில் வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கம் ஆய்வுச் சோதனை பற்றிய அதிகளவிலான தகவலைக் கண்டுகொள்ளலாம். 
  • திருநங்கையர் மற்றும் ஆண்-பெண் அற்றோர் என்போருக்கான என்எச்எஸ் ஆய்வுச் சோதனைச் சேவைகள் பற்றிய தகவலை வாசிக்கலாம்.

இரத்தக் குழாய் வியாதிகள் உள்ள மக்களுக்கு Circulation Foundation மற்றும் British Heart Foundation ஆதரவளிக்கின்றன. இது வயிற்றில் இரத்தக் குழாய் வீக்கங்கள் உள்ள மக்களை உள்ளடக்குகின்றது.

ஆய்வுச் சோதனைக்காக உங்களைச் சரியான நேரத்தில் அழைப்பதற்காக, உங்களின் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்தும் தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துகின்றோம். ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் இந்தத் தகவல் எங்களுக்கு உதவுகின்றது. உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் மற்றும் பாதுகாக்கிறோம் என்பது பற்றி அதிகளவில் வாசிக்கவும்.

எவ்வாறு ஆய்வுச் சோதனையிலிருந்தும் விடுபடுவது எனக் கண்டுகொள்ளவும்.