உலகச் செய்தி

இந்து சமுத்திர ஆழிப்பேரலையின் பத்தாவது ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் முகமாக பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் செய்தி

இந்து சமுத்திர ஆழிப்பேரலையின் பத்தாவது ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் முகமாக பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் செய்தி

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
151 British nationals lost their lives in 2004 Tsunami

151 British nationals lost their lives in 2004 Tsunami

“நத்தார் தினத்திற்கு அடுத்த நாளாகிய “பொக்சிங் தினத்தை” (Boxing Day) ஒரு மகிழ்ச்சியான உற்சவ கொண்டாட்டமாக இல்லாது, இந்து சமுத்திர ஆழிப்பேரலையில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அனைவரையும் இன்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த துன்பகரமான தருணத்தில், தங்கள் உயிர்களை இழந்த 151 பிரித்தானியர்கள் உட்பட, இந்த அனர்த்தத்தில் அகப்பட்டுக் கொண்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்வதில் எனது பிரார்த்தனைகள் உள்ளது.

“ஆழிப்பேரலையின் பின், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் மற்றும் புதிய வீடுகள் மற்றும் பாடசாலைகளை நிர்மாணித்தல் அல்லது ஒரு புதிய வியாபாரத்தை ஆரம்பித்தல் மூலமாக, மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவுவதற்குமாக ஏறத்தாழ £300 மில்லியன்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. “இந்த அனர்த்தம் மற்றும் பின்னடைவுகளின் இடையிலும், ஆயிரக் கணக்கான மக்கள் தங்களது வாழ்க்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு உண்மையான மீண்டெழுந்தன்மையைக் காட்டியதுடன் பல கோடிக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பெருமளவில் தாராளமான தன்மையைக் காட்டினர். இறந்த அனைவரையும் நாம் நினைவுகூர்வது போல, பண்டா ஆச்சே போன்ற இடங்களில் உள்ளூர்வாசிகள் முன்னரை விட இப்பொழுது கூடுதல் சுபீட்சம், பிரகாசம் மற்றும் அமைதியும் கொண்டதாக உள்ளது எனச் சொல்வது போல, தங்ளைச் சீர்படுத்திக் கொள்வதிலுள்ள சமூகங்களிலிருந்து ஆறுதல்படுத்தல்களையும் நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.”

வெளியிடப்பட்ட தேதி 26 December 2014