உலகச் செய்தி

பாலியல் வன்முறை முனைப்புகளைத் தடை செய்தல் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான விஜயம் மீதான கட்டுரை

பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலர் வில்லியம் ஹேகின் கட்டுரை.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
Foreign Secretary William Hague with UN High Commissioner for Refugees Angelina Jolie

Foreign Secretary William Hague with UN High Commissioner for Refugees Angelina Jolie

நல்லிணக்கத்தை மிகவும் கடினமாக்குகின்றதும் மற்றும் வன்முறைகளை மீளவும் ஆரம்பிப்பதில் பங்களிக்கின்றதுமான சரியான காரணங்கள் மீது கவனம் செலுத்தாமல் ஓர் மோதலை நிறுத்தி யுத்தத்தினால் பிரிந்த சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கே உலகம் அதிகளவான சந்தர்ப்பங்களில் முனைகின்றது.

யுத்த காலத்திலான வல்லுறவுகள் மற்றும் பாலியல் வன்முறை என்பன அத்தகைய காரணங்களில் ஒன்றாகும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு நான் சென்றிருந்தேன், அங்கு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஐந்து வயதுச் சிறுமியின் புகைப்படம் எனக்கு தரப்பட்டது. அகதி முகாம்களிலிருந்து, வைத்தியசாலைகளுக்கு நான் போன பொழுது மற்றும் நீதிக்காகப் போராடும் மக்களை சந்தித்த போதும், அழிக்கப்பட்ட வாழ்க்கைகள், தங்களது குடும்பங்களிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள், சிதைந்த குடும்பங்கள் மற்றும் விறகு தேடிச் செல்கையில் தாக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்றுகள் கொடுக்கப்பட்டமை தொடர்பான மேலும் மேலும் பல அதிர்ச்சியுற வைக்கும் கதைகளை நான் கேட்டேன். இவையெல்லாம் நிகழ்கையில், குற்றம் செய்தவர்களோ, வெட்கப்பட வேண்டிய குற்ற விலக்களிப்பு (shameful impunity) போர்வையின் கீழ் தங்களது ‘வழமையான வாழக்கையைத்’ தொடர்ந்து கொண்டிருந்தனர்.

பொஸ்னியாவிலிருந்து ருவான்டா மற்றும் லிபியாவிலிருந்து சியரெலியோன் வரையென, கடந்த இருபது வருடங்களிலான பெரும் மோதல்கள் பலவற்றிலும், பாலியல் வல்லுறவு என்பது அரசியல் எதிரிகளை அல்லது ஒரு முழு இனத்தையும் அல்லது மதக் குழுக்களையுமே புண்படுத்துவதற்கு வேண்டுமென்றேயான ஓர் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டது. அதனால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இலகுவில் ஆறமாட்டாது, அத்துடன் ஒரு போதும் மறையவும் மாட்டாது. பதிலுக்கு அவை அநேகம் குடும்பங்களை அழிப்பதுடன் சமூகங்களையும் சிதைக்கின்றது. இன்று, கவலை தரும் வகையில் சிரியாவில் மீண்டும் அதே கதை நடைபெறுகின்றது, அங்கே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகின்ற, வேண்டுமென்றேயான உள்நோக்கத்துடன் பொதுமக்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதுடன் வன்முறைகள் புரியப்படுவது தொடர்பிலான பல திகிலூட்டும் அறிக்கைகள் உள்ளன.

மனித கௌரவத்தை நம்பும் ஜனநாயக நாடுகளின் அரசியல் தலைவர்களாக இந்தச் சாவல்களுக்கு பதிலளிப்பது எங்கள் பொறுப்பாகும். பலரையும் பாதித்த இந்த வெறுக்கத்தக்க குற்றத்தை நிறுத்துவதற்கு நாம் முயற்சித்தல் வேண்டுமெனாதுடன் யுத்தத்தின் ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவை உயோகிப்பதை இல்லாதொழிப்பதற்கு செயலாற்றுதல் வேண்டும்.

இதுவொரு இலகுவான பணியல்ல என்பதுடன் அங்கே பல தடைகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களது அச்சம் மற்றும் தங்களைப் பற்றிய அவமானம் என்பன அங்குள்ள முதலாவது தடையாகும். வல்லுறவுக்குள்ளாகியமை தொடர்பிலான அவப்பெயரின் காரணமாக அதிகளவில் அவர்கள் முன்வருவதற்கு தயங்குவது, விளங்கிக் கொள்ளப்படக் கூடியதாகும். இந்த தயக்கம் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூருணர்வுடனான உடல் மற்றும் உள ரீதியான ஆதரவின்மையால் மோசமாக்கப்படுகின்றது.

இரண்டாவது, நீதிமன்ற வழக்குகளில் சாட்சியங்களைத் திரட்டுவதிலுள்ள சிரமங்களாகும், அது வெற்றிகரமான வழக்குத் தொடுத்தல்கள் குறைந்தளவிலேயே எப்பொழுதாவது தொடுக்கப்படுகின்றன என்பதைக் கருதுகின்றது. 1996 இலிருந்து கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும், 500,000 அளவிற்கு அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதுடன், இச்சம்பவங்களின் ஒரு மிகச் சிறிய விகிதமே நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளது. இது, குற்றவிலக்களிப்புக் கலாச்சாரத்தையே வலியுறுத்துகின்றது.

மோதல்களுக்கு பதிலளிக்கும் போது பாலியல் வல்லுறவுகள் சர்வதேச சமூகத்தால் ஓர் இரண்டாம் தரப் பிரச்சினையாக கையாளப்படுகின்றமை, மூன்றாவது தடையாகும். இதன் விளைவுகளாக இருப்வை பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை, நிதியளித்தல்கள் போதுமானதாக இருப்பதில்லை அல்லது வெறுமனே தடுத்து வைக்கப்படுகின்றது மற்றும் குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதுமாகும். இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் ஆதரவு நல்கும் ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகள், உள்ளூர் ஸ்தாபனங்கள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்களுக்கு போதுமான உதவிகள் இல்லாதிருப்பதாகும். இதனொரு விளைவாக அவை கடுமையான வகையில் குறைந்தளவிலேயே நிதியளிக்கப்படுவதுடன் பயனுறுதியான வகையில் பதிலிறுப்பதில் உண்மையான சிரமங்களை எதிர்நோக்குகின்றன.

இந்த தடைகள் அனைத்தும் வெற்றி கொள்ளப்படக்கூடியவை என்பதோடு அவை வெற்றிக் கொள்ளப்படுதலும் வேண்டும்.

ஆயுத மோதலில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதிலும், இந்தக் கொடூரமான குற்றங்களுக்காக இருக்கின்ற பொறுப்புக் கூறலின்மையை கையாள்வதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக விரிவான உதவியை உறுதிசெய்வதற்கும், எங்களது இணைந்த தீர்மானத்தை உருவாக்கும் ஓர் வரலாற்று அரசியல் அறிக்கைக்கு இணங்கிக் கொள்வதற்கு G8 நாடுகளின் சக வெளிநாட்டு அமைச்சர்களிடம் இந்த வாரம், நான் கேட்டுக் கொள்வேன். பாலியல் வல்லுறவு மற்றும் தீவிரமான பாலியல் வன்முறை என்பன ஜெனீவா ஒப்பந்தங்களின் தீவிரமான மீறல்கள் என்பதை அங்கீகரிக்கின்றதும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான நிதி மற்றும் நீண்ட கால உதவி; மற்றும் பாலியல் வன்முறைகளை புலன்விசாரணை செய்வதற்கும் மற்றும் ஆவணப்படுத்துவதற்குமாக இணங்கிக் கொள்ளப்பட்ட தரநியமங்களை விவரிக்கும் ஓர் புதிய சர்வதேச விருப்புரிமைசார் பட்டயத்துக்கான ஆதரவு என்பவற்றை உள்ளடக்குகின்ற நடைமுறை ரீதியிலான பற்றுறுதிகளின் ஓர் பரந்த தொகுதியை பெறுவதற்கு நான் முயல்கிறேன்.

இந்த முறைமைகள் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டவை, அவை பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதை வலுப்படுத்தும் என்பதோடு தங்கள் வாழ்க்கையை கௌரவத்தோடு மீள்கட்டியமைப்பதற்கு அவர்களுக்கு தேவையான நீண்ட கால உதவியை பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும்.

ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. G8 இலிருந்தான ஆதரவுகளை, யுத்தகால பாலியல் வல்லுறவுகள் மற்றும் மோதல்களிலான பாலியல் வன்முறைகள் என்பவற்றுக்கு எதிராக ஓர் உறுதியான சர்வதேச கூட்டணியை ஐக்கிய நாடுகளிலும் மற்றும் மேலும் பரந்தளவிலும் கட்டியெழுப்புவதற்கான ஓர் அத்திவாரமாக நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

G8 ஆனது பாரிய சர்வதேச அணுகுதல் மற்றும் இணைந்த செல்வாக்குடன் கூடிய, உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் சிலவற்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் உறுப்பினர்கள் ஓர் பொதுவான முயற்சியில் ஒன்றிணைந்து வரும் பொழுது, அவர்கள் உலகில் உண்மையான மற்றும் நிலையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இயலுமானவர்களாக உள்ளனர்.

இந்த வாரம், அந்த நிலையான மாற்றம் நவீன யுத்த முறைமையின் மிகவும் கொடூர அம்சங்களிலொன்றை முடிவுக்கு கொண்டு வருவதையும் மற்றும் மோதல்களின் பின்னர் சமூகங்கள் ஒன்றிணைவது ஏன் மிகவும் கடினமானது என்பதற்கான முக்கியமான காரணங்களிலொன்றின் மீது கவனம் செலுத்துவதையும் இலக்காகக் கொண்ட ஒரு செயன்முறையை ஆரம்பிப்பதற்கானதாகும். சுதந்திரமான நாடுகளின் அரசியல் தலைவர்களாகவும் மற்றும் மனிதப் பிறவிகளாகவும், யுத்தத்தின் ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவை பயன்படுத்துவோர்களுக்கான குற்றவிலக்களிப்பை தகர்ப்பதும், மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒருபோதும் கைவிடப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதும் எங்களது கடமையாகும்.

வெளியிடப்பட்ட தேதி 18 April 2013