Robbie Bulloch

வாழ்வுரை

திரு. ரொபி புல்லச் அவர்கள் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர் ஸ்தானிகராக 2011, ஜூலை 11 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.

2007 இலிருந்து 2011 வரை மட்ரிட்டிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் சேவையாற்றியதுடன், அங்கு அரசியல் பிரிவின் பிரதித் தலைவராகவும் நீதி மற்றும் உள் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

2005 – 2007 வரையான காலப்பகுதியில் அவர், பிரித்தானியாவின் துணைப் பிரதமர் ஜோன் பிரஸ்கொட் அவர்களுக்கு வெளி விவகார ஆலோசகராக பணியாற்றினார், அப்பணிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஐக்கிய இராச்சியத்தின் தலைமைத்துவம், சீனாவுடனான ஐக்கிய இராச்சியத்தின் உறவு, காலநிலை மாற்றம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பவற்றின் மீதான பணிகளை உள்ளடக்கியிருந்தது. இதற்கு முன்னதாக (2004-2005), லண்டனிலுள்ள வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் குழுவின் ஒரு அணித் தலைவராகவும் இருந்துள்ளார். வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் இணைவதற்கு முன்னதாக, அவர் ஐக்கிய இராச்சிய உட்துறை அலுவலகத்திற்காக (2000-4)இல் குற்றவியல் மற்றும் சீர்திருத்தக் கொள்கை, நாடுகடத்தல் மற்றும் குடியகல்வு என்பவற்றை உள்ளடக்கியதான பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். அவர் 2002-2003இல் பிரசல்ஸிலுள்ள ஐரோப்பிய ஆணையகத்திலும் ஒரு குறுகிய காலப் பணியை மேற்கொண்டிருந்தார். பிரித்தானிய அரசாங்கத்துக்காக பணியாற்றுவதற்கு முன்னதாக, திரு. புல்லச் ஒரு ஆசிரியராகவும் மற்றும் லண்டனில் நன்னடத்தை உத்தியோகத்தராகவும் பணியாற்றினார்.

திரு. ரொபி அவர்கள் பெல்பாஸ்ட்டிலுள்ள குயின்ஸ் பல்லைக் கழகத்திலிருந்து ஆங்கிலம் மற்றும் ஹிஸ்பானிக் கற்கைநெறிகளில் முதல் வகுப்பிலான ஒரு பட்டத்தைக் கொண்டுள்ளதுடன், லண்டன் கிங்ஸ் கல்லூரியிலிருந்து ஆங்கிலத்தில் முதுமானிப் பட்டத்தையும் கொண்டுள்ளார். கொழும்பில் அவர் தனது மனைவி கிறிஸ்டி மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் சகிதம் இணைந்துள்ளார்.

அரசாங்கத்தில் முந்தைய பங்களிப்புகள்

  • Deputy Head of Mission, Germany
  • British Deputy High Commissioner to Sri Lanka