இளம் தலைமைத்துவ விருதின் இலங்கையிலிருந்தான வெற்றியாளர்கள் மேன்மை தாங்கிய அரசியிடமிருந்து விருதினைப் பெறுவார்கள் என அறிவிப்பு
பொநலவாய நாடுகள் முழுவதிலுமிருந்து 60 இளம் ஆட்கள் மத்தியில் தங்களது சமூகத்தில் சிறந்த தலைவர்களாக இலங்கையிலிருந்து அங்கீகரிக்கப்பட்டவர்களாக கவிந்தியா தென்னக்கோன் மற்றும் சௌபாக்கியா எதிரிசிங்க ஆகியோர் இன்று அறிவிக்கப்பட்டனர். இந்த 60 இளம் ஆட்களும் அரசியிடமிருந்து ஒரு மதிப்பு மிக்க இளம் தலைவர்கள் விருதினைப் பெறுகின்ற முதலாவது ஆட்களாவர்.

YOUNG LEADERSHIP AWARD FROM HER MAJESTY THE QUEEN
இந்த விருது, ஜூன் மாதத்தில் மேன்மை தாங்கிய அரசியினால் லண்டனில் பரிசளிக்கப்படும் என்பதுடன், அது, மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தலைமைத்துவத்தை எடுத்து மற்றும் தங்களது சமூகங்களில் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் இளம் ஆட்களின் சாதனைகளைக் கொண்டாடும், அரசியின் இளம் தலைவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியுமாகும்.
இந்த வருட விருதுகளின் வெற்றியாளர்கள், பொதுநலவாய நாடுகள் முழுவதிலுமிருந்து வந்த 18 மற்றும் 29 வயதிற்கு உட்பட்டவர்களாவர் என்பதுடன், கல்வி, காலநிலை மாற்றம், பால்நிலை சமத்துவம், மன ஆரோக்கிய மற்றும் அங்கவீன சமத்துவம் உட்பட்ட; மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மாறுபடும் பல்வேறு விடயங்களில் விழிப்புணர்வை எழுப்பவும் மற்றும் மாற்றத்தை ஊக்குவிக்கவும் செயலாற்றுகின்றனர்.
எலிசபெத் அரசியின் வைர விழா நம்பிக்கை நிலைய பிரதான பணிப்பாளர், பிரித்தானிய அரச கௌரவம் பெற்ற கலாநிதி. அஸ்டிரிட் பொனபீல்ட் கூறியது: “வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் திறமையான இளம் ஆட்களின் தலைமைத்துவம் சமூகங்கள் மற்றும் சமுதாயங்கள் என்பவற்றை சிறந்த நிலைக்கு மாற்ற முடியும். இன்று அறிவிக்கப்பட்ட 60 இளம் ஆட்கள் சாதித்தது குறிப்பிடத்தக்கதாகும் என்பதோடு எதிர்காலத்துக்கான அவர்களது திட்டம் உண்மையில் ஊக்குவிப்பதாக உள்ளது. இளம் தலைவர்களுக்கான அரசியின் இந்த நிகழ்ச்சித்திட்டம் இந்த பன்மைத்துவமான மற்றும் திறமை வாய்ந்த இளம் ஆட்கள் குழுவின் ஆற்றல்ளைத் திறந்து விடுவதற்கு ஆய்த்தமாக உள்ளதுடன் அவர்கள் மேலும் முன்செல்வதற்கும் மற்றும் கூடுதலாக சாதிப்பதற்கு உதவியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சிடைகிறோம்.”
விருது வென்றவர்கள் மற்றும் மிகவும் குறிப்பிடப்பட்ட ஆறுதல் பரிசில்ளை வென்றவர்களின் முழுமையான பெயர்ப் பட்டியல், மற்றும் அவர்கள் பற்றிய கதைகள் பற்றி கூடுதலாக வாசித்தறிவதற்கு தயவு செய்து www.queensyoungleaders.com எனும் இணையதள முகவரிக்குச் செல்லவும்.