சட்டவிரோதமாகக் குடிவந்தவர்களை தன்னிச்சையாக மீள்திரும்புவதற் ஐக்கிய இராச்சியம் ஊக்கப்படுத்துகிறது
சட்டவிரோதமாகக் குடிவந்தவர்களை ஐக்கிய இராச்சியத்தை விட்டுத் தாமாகச் செல்வதற்கு ஊக்கப்படுத்தும் ஓர் முன்னோடித் திட்டம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

This pilot builds on the government's current work on voluntary returns, which saw 3,699 voluntary departures last year.
அவர்கள் மீள்திரும்பாவிடின் அமுல்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெளிவாக்கும் அதேவேளை தன்னிச்சையாகத் தங்கள் நாடுகளுக்கு மீள்திரும்புவதின் நன்மைகளை சுட்டிக்காட்டுவதற்கு பெரிய விளம்பரங்ளை காட்சிப்படுத்தும் வான்கள், அதேபோன்று துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் உள்ளூர்ப் பத்திரிகைகளிலான செய்திகள் என்பன உயோகிக்கப்படும்.
இந்த வாரம், இலண்டனின் வெவ்வேறு பகுதிகளில் குடியிருப்பாளர்களுக்கு, அவர்களது பகுதியில் அண்மையில் எத்தனை சட்டவிரோதக் குடிவந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பதைக் காட்சிப்படுத்தியபடி, இரண்டு வான்கள் சுற்றி வரும். அவை இந்தக் குடிவந்தவர்கள் தங்களது மீள்திரும்புதலுக்கு ஏற்பாடு செய்வதற்காக அழைப்பதற்கு இயலும் வகையில் ஒரு விரைவு தொலைபேசி இலக்கத்தையும் விளம்பரப்படுத்தும்.
குடிவரவு அமைச்சர் மார்க் ஹார்ப்பர் தெரிவித்தது:
‘ஐக்கிய இராச்சியத்தில் ஆட்கள் சட்டவிரோதமாக வாழ்ந்து கொண்டு வேலை செய்வதை நாங்கள் மேலும் கடினமாக்குகிறோம். ஒவ்வொரு நாளும் எங்களது அமுல்படுத்தும் அதிகாரிகள் ஐக்கிய இராச்சியத்தில் இருப்பதற்கு உரிமையைக் கொண்டிராத ஆட்களைக் கைது செய்து, தடுத்து வைத்து வெளியேற்றி வருகின்றனர்.
‘ஆனால் கைவிலங்குடன் இட்டுச்செல்லப்படுவதற்கு பதில் மாற்றுவழி ஒன்று அங்குள்ளது. ஒத்துழைத்தும் மற்றும் தங்களது நாடுகளுக்கு தன்னிச்சையாக மீள்திரும்புவோர்களுக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கப்பட முடியும்.’ தன்னிச்சையாக மீள்திரும்புதல் என்பது சட்ட விரோதக் குடிவருவோர்களின் வெளியேற்றுதலுக்கு மிகவும் செலவுப் பயனுறுதியாதென்பதுடன் வரிசெலுத்துவோர்களின் பணத்தையும் சேமிக்கின்றது. இந்த முன்னோடித் திட்டம் தன்னிச்சையான மீள்திரும்புதல்கள் மீதான அரசாங்கத்தின் தற்போதைய பணிகள் மீது உருவாக்கப்பட்டுள்ளதுடன், அது கடந்த வருடம் 3,699 தன்னிச்சையான வெளியேறுதல்களை அவதானித்தது.
தன்னிச்சையாக மீள்திரும்புவோர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகம் அல்லது சராசரி எண்ணிக்கையையும் விடக் குறைவு என்ற காரணத்தால் ஹவுன்ஸலோ, பார்கிங் மற்றும் டகென்ஹாம், ஏர்லிங், பார்னெட், பிரென்ட் மற்றும் ரெட்பிறிட்ஜ் ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன.