பிரதம மந்திரியின் ரம்ழான் செய்தி
பிரதம மந்திரி டேவிட் கமரூன் கூறிய:

The Prime Minister David Cameron
“புனித ரம்ழான் மாதத்தை அனுஷ்டிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கு நான் விரும்புகிறேன்.
“தங்களது நம்பிக்கையின் அடிப்படையைக் குறிப்பதற்காக பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதிலுமாக உள்ள முஸ்லிம்களுக்கு இது ஒரு பெரிதும் முக்கியமான காலமாகும்.
“இறை சிந்தனை மற்றும் நோன்பு நோற்றலில், நண்பர்களாகவும் மற்றும் குடும்பங்களாகவும் ஒன்றாக இணைவதில், சமூகம், குடும்பம் மற்றும் தர்மம் என்பவற்றின் முஸ்லிம் விழுமியங்கள் – பிரித்தானிய விழுமியங்கள் என்பவற்றால் நாங்கள் நினைவுபடுத்தப்படுகிறோம்.
“முதலாம் உலகப் போரிலின் பதுங்கு குழிகளிலிருந்து இரண்டாம் உலகப் போரின் வான் தாக்குதல்கள் வரை – தங்களது சகபோர்வீரர்களுடன் தைரியமாகச் சேவையாற்றிய முஸ்லிம் படைவீரர்களை கடந்த நூற்றாண்டுகளில் நீங்கள் பார்க்கலாம்.
“பிரித்தானியாவிலுள்ள வேறெந்த மத நம்பிக்கைக் குழுக்களையும் விட தருமத்திற்காக இன்று பிரித்தானிய முஸ்லிம்கள் கூடுதலாக கொடுப்பதிலிருந்து – மோதல்கள் மற்றும் அனர்த்தங்களினால் இருண்ட வாழ்வுகளில் ஒரு உண்மையான வேறுபாட்டை ஏற்படுத்துவதன் மூலம் தங்களது புனித ஸகாத் கடமையை நிறைவேற்றுவதையும் நீங்கள் பார்க்கலாம்.
“எங்களது மிகப் பெரிய வர்த்தகங்களிலிருந்து எங்களது மதிப்பு வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் பாராளுமன்ற அவைகள் – மற்றும் நான் தலைமை தாங்கும் அமைச்சரவை வரை என பிரித்தானிய முஸ்லிம்கள் ஒவ்வொரு துறையினதும் மேல்நிலையில் உள்ளார்கள்.
“அவர்களது பின்னணி எண்ணவாக இருந்தாலும் மற்றும் அவர்கள் எங்கிருந்து வந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் இணக்கமாக இருக்கக்கூடிய ஒரு நாடான பிரித்தானியாவான- ஒரு தேசம் பற்றி நான் அதிகம் பேசி விட்டேன். பிரித்தானிய முஸ்லிம்கள் அந்த உணர்வுக்கு உருக் கொடுக்கின்றனர்.
“உங்களது நிறம், சமூகம் அல்லது கோட்பாட்டினால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை ஆனால் உங்களது திறமைகள் உங்களைக் கொண்டு செல்லும் வரையான தூரத்திற்கு நீங்கள செல்ல முடியுமான ஒரு இடமாக இந்த நாடு இருக்க முடியுமென அவர்கள் நிரூபிக்கிறார்கள்.
“ஒவ்வொரு இப்தார் மாலைப் பொழுதிகளிலும் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்களாக ஒன்று சேர்கையில், அவர்கள் அனைவரும் மற்றும் பிரித்தானியா முழுவதிலுமுள்ள ஏனையவர்களும், ரம்ழான் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச விழுமியங்கள், மற்றும் பிரித்தானிய முஸ்லிம்கள் எங்களது நாட்டுக்கு மேற்கொள்ளும் பங்களிப்பு என்பவற்றைப் பிரதிபலிப்புச் செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
“அனைவருக்கும் ரம்ழான் முபாரத் வாழ்த்துக்கள்”