ஈதுல் பித்தரைக் குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடமிருந்தான செய்தி
ஈதுல் பித்தரைக் குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடமிருந்தான செய்தி

John Rankin
“இலங்கையில் ஈதுல் பித்தரைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது, இஸ்லாம் மதத்தின் உண்மையான உணர்வின் ஒரு பகுதிகளாகிய நோன்பு, பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் தர்மம் என்பவற்றின் ஒரு மாத நிறைவின் கொண்டாட்டத்திற்குரிய ஒரு தருணமாகும்.
வேறுபட்ட நம்பிக்கைகள் அல்லது அபிப்பிராயங்களை மதித்து, இந்தக் கொண்டாட்டத் தருணத்தில் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வருவார்கள் என நான் நம்புகிறேன். இந்தப் பெருநாள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக அமையட்டும்.
உங்கள் அனைவருக்கும் ஈத் முபாராக் கூறி வாழ்த்துகிறேன்.”