பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் வேடுவச் சமூகத்திடம் விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரான்கின் அவர்கள், நவெம்பர் 4, 2014, அன்று ஊவா மாகாணத்தில், தம்பனை எனுமிடத்திலுள்ள வேடுவச் சமூகத்திடம் விஜயம் செய்தார்.

British High Commissioner with the Vedda Chief Uru Warige Wannila Aththo
அவர் சமூகத் தலைவர் உறு வரிகே வன்னில அத்தோவைச் சந்தித்ததுடன், வேடுவ மக்களின் நீண்ட வரலாறு மற்றும் நவீன வாழ்க்கைக்கான கவர்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளுடன் அவர்களது பாரம்பரிய வாழ்க்கை முறைகளைப் பேணுவதில் ஒரு சமனிலையைக் காண்பதில் சமூகத்தால் முகங் கொடுக்கப்படும் சவால்கள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
சமூகத் தலைவரைச் சந்தித்ததிலும் மற்றும் அவரது ஆசி மற்றும் அன்பான உபசரிப்பைப் பெற்றுக் கொள்வதில் தான் பெருமையைடைவதாக, உயர் ஸ்தானிகர் கூறினார். அவர்களின் நிலைபேறான விவசாய நடைமுறைகள் மற்றும் அவர்களது மூலிகை மருந்து நிவாரணங்கள் உட்பட, சுதேசிச் சமூகங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்வதற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வேடுவத் தலைவர், உறு வரிகே வன்னில அத்தோவின் அழைப்பின் பேரில், அவரது விஜயத்தைக் குறிக்கும் முகமாக ஒரு மரத்தையும் அவர் அங்கு நாட்டினார்.
உயர் ஸ்தானிகர் பதுளைக்கும் ஒரு குறுகிய விஜயத்தை மேற்கொண்டதுடன், அங்கு அரசாங்க அதிபர் திரு. ரோஹன கீர்த்தி திசாநாயக்க மற்றும் பதுளை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மற்றும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான திரு. ஹரின் பெர்ணான்டோவையும் சந்தித்தார்.