பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வெசாக் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்
இலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துக்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தனது வெசாக் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.

Lanterns blowing in the wind outside Kandy.
“இலங்கையில் வெசாக் தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்குமான கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை தொடர்பான புத்தரின் போதனைகள் எப்பொழுதும் போலவே இன்றும் இலங்கை மற்றும் உலகெங்கிலுமான நாடுகளுக்கு தொடர்ந்தும் முக்கியமானவையாக உள்ளன. புத்தர் ஞானம் பெற்ற இந்த விசேட கொண்டாட்டத்தில், இந்த முக்கியமான விழாவைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதிக்கப்பட்ட ஒரு வெசாக் தினத்திற்கு நான் வாழ்த்துகிறேன்.”