உலகச் செய்தி

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு ஐக்கிய இராச்சிய வர்த்தகக் குழுவை கொண்டு வருகிறது

“பிரித்தானிய வர்த்தகத்தை முன்னிடல்” என்ற தலைப்பில், இலங்கையில் ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தகக் கூட்டத்தின் ஆரம்பம், வியாழக் கிழமை, 27 நவெம்பர், 2014 அன்று கொழும்பு சின்னம்மன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
British High Commissioner H E John Rankin speaks at the event.

British High Commissioner H E John Rankin speaks at the event.

ஆரம்ப வைபவத்தின் பிரதம அதிதி இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்சவாகும். கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஐக்கிய இராச்சிய வர்த்தக மற்றும் முதலீட்டுப் பிரிவினால் ஒழுங்கேற்பாடு செய்யப்பட்ட வர்த்தகக் குழுவில் இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மேலும் வாய்ப்புகளை ஆராய்ந்து மற்றும் கலந்துரையாடுவதில் ஆர்வங் கொண்ட 21 பிரித்தானிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.

வைபவத்தின் முக்கிய உரை முதலீட்டு மேம்படுத்தலுக்கான பிரதி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தாபவினால் வழங்கப்பட்டது. அவர், இலங்கை அதன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் தொடர்புகள் காரணமாக இந்தியா மற்றும் மத்திய கிழக்கிற்கான ஒரு நுழைவாயிலாக இலங்கை இருக்கின்ற மூலோபாய நிலை பற்றி பேசினார். அவர் பிரசன்னமாகியிருந்த அனைத்து பிரித்தானிய நிறுவனங்களையும் அன்போடு வரவேற்றதுடன் “இலங்கைக்கு விஜயம் செய்து, அதன் அழகை அனுபவித்தோடு அவர்களது அடுத்த மூலதனத்தை இங்கே மேற்கொள்வதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கும்” ஊக்கப்படுத்தினார்.

ஐக்கிய இராச்சிய நிறுவனங்களுக்கான தனது உரையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரான்கின், கூறியது:

‘பிரித்தானிய உயர் ஸ்தானிகராக எனது முக்கியமான குறிக்கோள்களிலொன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதாகும். ஆசியாவில் உருவாகும் சந்தைகள் பிரித்தானிய வர்த்தகங்களுக்கு வலுவான வாய்ப்புகளை அளிக்கின்றன, அவற்றின் அனுபவமும் மற்றும் நிபுணத்துவமும் இந்தச் சந்தைகளின் தேவைகளுடன் பொருந்த முடியும். ஐக்கிய இராச்சியத்திற்கும் மற்றும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவு ஏற்கனவே நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஐக்கிய இராச்சிய இணைவுகளுடன் பல்வேறு துறைகளைச் சார்ந்ததான மற்றும் அவற்றை இங்கே பிரதிநிதித்துவப்படுத்துவதாக 100க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. 2013 ஐக்கிய இராச்சியத் தனியார் நிறுவனங்களுக்கு வரலாற்றுப் பதிவு கொண்ட ஆண்டாக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை வென்றதுடன் அந்த வெற்றியின் மேல் இந்த வர்த்தக தூதுக்குழுவை ஏற்பாடு செய்கிறோம். எங்களது விஜயம் செய்யும் தூதுக்குழு கட்டுமானம் மற்றும் குறிப்பாக சுற்றுலாத் துறை தொடர்புபட்டவை, கல்வி, தகவல் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பம், காப்புறுதி, ஆதனத்துறை, விமான மற்றும் கப்பற்போக்குவரத்து என்பவற்றிலிருந்து பரந்த ஆர்வங்களை வெளிப்படுத்தியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’.

வர்த்தகத் தூதுக்குழு பிரித்தானியவுடனான வர்த்தக சபையினால் ஆதரவளிக்கப்பட்ட வேளையில், ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ், சின்னம்மன் கிரான்ட் ஹோட்டல் மற்றும் குயின்டெஷன்சிலி லைப் ஸடைல் ஆகியவை உத்தியோகபூர்வப் பங்காளிகளாக இருந்தனர். தூதுக்குழு வெள்ளிக் கிழமை, 28, நவெம்பர் வரை தொடரும் என்பதோடு இந்தத் தீவினை விமானம், கப்பற் போக்குவரத்து, வர்த்தக, அறிவு, சுற்றுலா மற்றம் சக்தி என்பவற்றில் ஒரு பிராந்திய மையமாக ஆக்குவதற்கு அபிவிருத்திக்காக முன்னுரிமையான துறைகளாக இனங் காணப்பட்ட துறைகளில் தூதுக்குழுவை கவனம் செலுத்த வைக்கும்.

வெளியிடப்பட்ட தேதி 27 November 2014