உலகச் செய்தி

ஹூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

விஜயம் செய்துள்ள வெளிவிவகார மற்றும் இலங்கைக்கான பொதுநலவாய அலுவலகத்தின் அரச அமைச்சரான, கௌரவ ஹூகோ ஸ்வயர், பாராளுமன்ற உறுப்பினர், இன்று ஜனவரி 29, 2015, யாழ்ப்பாணத்திற்கு பயணித்தார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
Minister Hugo Swire donated books to the Jaffna Library

Minister Hugo Swire donated books to the Jaffna Library

இது அமைச்சரின் யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயமாகும். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் வட மாகாணசபை முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களைச் சந்தித்ததுடன் பிரிட்டிஷ் கவுன்சில், முகமாலையில் ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும் ஹலோ டிரஸ்ட்டின் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை, ஆனையிறவு மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரிக் கிராமம் என்பவற்றுக்கும் விஜயம் செய்தார்.

தனது விஜயம் பற்றிக் குறிப்பிடுகையில், ஹூகோ ஸ்வயர் கூறியது:

“இன்று நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் நீண்ட கால மோதல்களில் வட இலங்கை அதிகம் பாதிக்கப்பட்டதுடன் அங்குள்ள மக்கள் இன்னமும் பல சவால்களை முகங் கொடுக்கின்றனர். இதுவே, 2013 இல் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கையில் பிரதம மந்திரி டேவிட் கமரூன் நின்ற போது யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முன்னுரிமைப்படுத்தியதற்கான காரணத்தின் ஒரு பகுதியாகும்.

இன்று வட மாகாணத்தின் கதையின் பல வேறுபட்ட அம்சங்களை நான் பார்த்தும் மற்றும் கேட்டும் கொண்டேன். முதலமைச்சருடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், இராணுவத்தின் வகிபாகம், ஐக்கிய இராச்சியம் உதவி புரியக்கூடிய வழிகளைக் கொண்ட ஒரு அரசியல் தீர்வுக்கான சாத்தியங்கள் பற்றி என்பவை பற்றி நான் கலந்துரையாடினேன். ஆனையிறவைப் பார்த்தது, மீண்டும் ஒரு முறை இலங்கை யுத்தத்திற்கு உள்ளாகாதிருப்பது எந்தளவிற்கு முக்கியமானது என்பதற்கு ஒரு வலுவான நினைவூட்டியாக இருந்தது.

யாழ்ப்பாண நூலகத்திற்கு புத்தகங்ளை அன்பளிப்பு செய்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கே இருந்த வேளையில், ஊடக சுதந்திரம் மற்றும் அண்மைய காலங்களில் ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்த அழுத்தங்கள் என்பவற்றைக் கலந்துரையாடுவதற்கு ஊடகவியலாளர்களை நான் சந்தித்தேன். புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை அங்கே உள்ளது.

2013 இல் டேவிட் கமரூன் அவர்கள் விஜயம் செய்த சபாபதிப்பிள்ளை நலன்புரிக் கிராமத்திற்கும் நான் விஜயம் செய்தேன். எனது குழுவோடு, இலங்கையின் புதிய கல்வியாண்டுக்கான சரியான சமயத்தில், கிராமத்திலுள்ள அனைத்துச் சிறுவர்களுக்குமாக சப்பாத்துக்களை அன்பளிப்பு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மோதல்கள் முடிடைந்து சுமார் ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் கூட, அந்த நலன்புரிக் கிராமம் இன்னமும் உள்ளது. சாத்தியமானவிடத்து, அவர்களது சொந்த இடங்களுக்கு மக்கள் மீள்திரும்புவதை அனுமதித்து, ஒரு நீண்ட காலத் தீர்வினை நாடுவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்தை நான் ஊக்குவிக்கிறேன்.

எனது வட இலங்கைக்கான விஜயம், பிரித்தானிய ஸ்தாபனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில நல்ல பணிளைக் காண்பதற்குமான வாய்ப்பினையும் எனக்கு அளித்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு நான் விஜயம் செய்து அங்கு ஆங்கில மொழித் திறன்களைப் போதிப்பதில் ஒரு மதிப்பிட முடியாத சேவையை மேற்கொள்ளும் அவர்களது அணியினையும் சந்தித்தேன். முகாமாலையில், பிரித்தானிய தர்ம ஸ்தாபனமான, ஹலோ டிரஸ்ட்டினால் சில காணிகளில் கண்ணவெடிகள் அழிக்கப்படுவது எனக்கு காண்பிக்கப்பட்டது. காணிகளில் மீண்டும் வாழ்வதற்கு இயலச்செய்யும் வகையில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை அகற்றுதல் மற்றும் கண்ணிவெடி அபாய அறிவூட்டுதல் என்பன மோதல்களுக்கு பிந்திய நடவடிக்கைகளில் ஓர் அத்தியாவசிய பகுதி என்பதுடன் அதற்கு ஐக்கிய இராச்சியம் உதவுகிறது. 2009 இலிருந்து, ஐந்து மில்லியன் பவுண்சுகளுக்கும் அதிகமான தொகையை (இலங்கை நாணயத்தில் சுமார் 9.9 பில்லியன் ரூபாய்கள்) இலங்கையில் இந்தப் பணிகளுக்காக நாங்கள் பங்களித்துள்ளோம்.”

வெளியிடப்பட்ட தேதி 29 January 2015
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 30 January 2015 + show all updates
  1. Sinhala and Tamil translations added.

  2. First published.