உலகச் செய்தி

வெளியுறவுச் செயலரின் ரம்ழான் அறிக்கை

வெளியுறவுச் செயலர் பிலிப் ஹம்மண்ட் ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகம் முழுவதிலுமாக உள்ள முஸ்லிம்களுக்கு இந்தப் புனித ரம்ழான் மாதத்தின் ஆரம்பத்தில் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.

Foreign Secretary Philip Hammond

Foreign Secretary Philip Hammond

வெளியுறவுச் செயலர் பிலிப் ஹம்மண்ட் கூறியது:

“ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகம் முழுவதிலுமாக உள்ள முஸ்லிம்களுக்கு நான் ‘ரம்ழான் முபாராக்’ வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

“எங்களது வெளிநாட்டுப் பங்குறவுகள் மூலமாகவும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் துடிப்பானதும் மற்றும் பன்மைத்துவம் கொண்ட முஸ்லிம் சமூகங்கள் மூலமாகவும், முஸ்லிம் உலகுடனான எங்களது வலுவான உறவு பற்றி ஐக்கிய இராச்சியம் பெருமைப்படுகிறது. எங்களது அயல்நாட்டுச் சேவை வலைமைப்பு எங்கிலுமுள்ள எங்களது தூதரகங்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் வாழ்ந்தும் மற்றும் பணியாற்றுகின்றதுமான இடங்களிலுள்ள சமூகங்களுடன் ஒன்றிணைந்து எங்களது பகிரப்பட்ட விழுமியங்ளைக் கொண்டாடவும் மற்றும் பிரதிபலிக்கவும் செய்வார்கள்.

“அத்தோடு ரம்ழான் அமைதியான பிரதிபலிப்பு மற்றும் இரக்கம் மற்றும் தர்மச் செயற்பாடுகள் என்பவற்றுக்கான ஒரு காலமுமாகும். மோதல்கள் மற்றும் வறுமையால் முஸ்லிம் உலுகிலுள்ள பலரும் இந்த ரம்ழானைத் தங்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலிருந்து தனியாகக் கழிப்பார். எங்களது தாராளமான மனிதநேய மற்றும் அபிவிருத்தி உதவி மூலமாக உலகம் முழுவதிலுமாக அவர்களது தேவைக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து உதவியளிக்கும். அத்துடன் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சுபிட்சமும் கொண்ட ஒரு உலகிற்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றுவோம்.”

வெளியிடப்பட்ட தேதி 18 June 2015