உலகச் செய்தி

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியாவிற்கு விஜயம்

பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரான்கின் தனது மலைநாட்டுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக நவெம்பர் 5, 2014 அன்று நுவரெலியாவிற்கு விஜயம் செய்தார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
British High Commissioner with the children at MENCAFEP

British High Commissioner with the children at MENCAFEP

பிரித்தானிய இராஜ்ஜியத்தின் மிகச் சிறந்த குடிமகன் (MBE) கிறிஸ் ஸ்டப்ஸ் மற்றும் அவரது மனைவி ரஞ்சி ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கான ஒரு பாடசாலையான, ‘மென்கபெப்’ (MENCAFEP) இற்கு விஜயம் செய்தார். ‘மென்கபெப்’ வெவ்வேறு திறன் மட்டங்கள் கொண்ட அனைத்து வயது கொண்ட குழந்தைகளுக்கும் பகல் பராமரிப்பு வசதி மற்றும் கற்பித்தல் என்பவற்றை வழங்குகிறது. நவெம்பர் 2013, இல் இலங்கைக்கான விஜயத்தின் போது முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் ‘மென்கபெப்’ இற்கும் விஜயம் செய்தார்.

பின்னர் உயர் ஸ்தானிகர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு பிரதியமைச்சர் மற்றும் எஸ். சதாசிவம், இலங்கைத் தொழிலாளர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆகியோர்களையும் சந்தித்தார். இருவருடனும், தேயிலைக் கைத்தொழில் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் முகங் கொடுக்கப்படும் சவால்கள், அதேபோன்று நுவரெலியா மாவட்டத்திலான பரவலான அபிவிருத்திகள் என்பவை பற்றி அவர் கலந்துரையாடினார். அவர் ஒரு தேயிலைத் தொழிற்சாலைக்கும் விஜயம் செய்ததுடன் தோட்டத் தொழிலாளர்களின் கதைகள் மற்றும் தோட்டத்திலான வாழ்க்கை பற்றி கேட்பதற்கும் ஆர்வங் காட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி 6 November 2014
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 6 November 2014 + show all updates
  1. A link to the photos gallery has been added.

  2. First published.