உலகச் செய்தி

ஐக்கிய இராச்சியத்துக்கு மாணவர் நுழைவிசைவு அனுமதிக்காக விண்ணப்பிக்கிறீர்களா?

போவதற்கு முன்னர் எவற்றை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
In Sri Lanka, approximately 6,000 applicants a year apply for student visas to the UK.

In Sri Lanka, approximately 6,000 applicants a year apply for student visas to the UK.

ஐக்கிய இராச்சியத்தின் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும், பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து உயர் கல்விக்காக அங்கு செல்கின்றனர். உலகம் முழுவதிலுமுள்ள ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு அனுமதி மையங்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் என்பவை அதிக வேலைப் பளு கொண்ட இரண்டு மாதங்களாகும். இலங்கையில், ஒவ்வொரு வருடமும் சுமார் 6,000 விண்ணப்பதாரிகள் தங்களது இளமானி, முதுமானி, கலாநிதி அல்லது தொழில்சார் தகைமைக் கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்காக, ஐக்கிய இராச்சியத்துக்கு மாணவர் நுழைவிசைவு அனுமதிக்காக விண்ணப்பிக்கின்றனர். இலங்கை மாணவர்கள் பலரும் ஐக்கிய இராச்சியப் பல்கலைக் கழகங்களில் சிறந்த முறையில் பிரகாசிப்பதோடு அவர்களை வரவேற்பதில் ஐக்கிய இராச்சியம் மகிழ்ச்சி அடைகிறது. மாணவர்கள் புலமைசார் மற்றும் கலாச்சார செழுமைகளை அனுபவிப்பதற்கு எல்லைகளற்ற வாய்ப்புகளை ஐக்கிய இராச்சியம் மாணவர்களுக்கு வழங்குகின்றதுடன் இந்த சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மாணவர்கள் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வேறெந்தவொரு நாட்டையும் போன்றே, மாணவர் நுழைவிசைவுகளைச் சுற்றி கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன. மாணவர்கள் ஓர் குறித்த சில மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்வதற்கு முடியும்; அவர்கள் தங்களது கற்கைநெறி தொடர்பான வகுப்புகளுக்கு கட்டாயம் பிரசன்னமளித்தல் வேண்டும்; மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு மேலும் அனுமதியைப் பெற்றிருந்தாலன்றி, கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பின்னர் மாணவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு மீள் திரும்புதல் வேண்டும். ஒருவரது நுழைவிசைவு அனுமதிக் காலத்துக்கும் மேலதிகமாகத் தங்கியிருப்பது சட்ட விரோதம் என்பதோடு ஐக்கிய இராச்சியத்தில் அதுவொரு தண்டனைக்குரிய குற்றமாகும். ஐக்கிய இராச்சியத்தில் ஆட்கள் சட்ட விரோதமாக வசித்து வேலை செய்வதை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் மேலும் கடினமாக்குகின்றது. ஒவ்வொரு நாளும், ஐக்கிய இராச்சிய உட்துறை அலுவலக அணியினர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லாத ஆட்ளை கைது செய்தும், தடுத்து வைத்தும் மற்றும் வெளியேற்றியும் வருகின்றனர். தங்களது சொந்த நாடுகளுக்கு மீள்திரும்பிய பின்னர், பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், எத்தகைய நிலைமையாக இருந்தாலும் அடுத்த பத்து வருடங்களுக்கு ஐக்கிய இராச்சியத்துக்கான நுழைவிசைவுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து தடை செய்யப் படுகின்றனர்.

எனவே, ஓர் மாணவராக நீங்கள் ஐக்கிய இராச்சியத்துக்கு செல்வீர்களாயின் – உங்களது கல்விக்கு நல்லதிர்ஷ்டம் உரித்தாகட்டும் என்பதுடன் கற்றல் அனுபவங்களை முழுமையாக அனுபவியுங்கள்! அத்தோடு, எதிர்காலத்தில் வேலை, விடுமுறை மற்றும் வியாபாரம் என்பவற்றுக்காக மீண்டும் ஐக்கிய இராச்சியத்துக்கு நீங்கள் விஜயம் செய்ய இயலுமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெளியிடப்பட்ட தேதி 9 September 2013