வடக்கில் ஐக்கிய இராச்சியம் நிதியளிக்கும் சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் திட்டத்துக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் விஜயம்
இந்த வாரம் வடக்கிற்கான விஜயத்தின் போது, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின் அவர்கள், கொழும்பு, ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படுகின்ற, இப்பிரதேசத்தில் சமூகம் மற்றும் பொலிஸ் என்பவற்றுக்கிடையிலான உறவுகளில் வேறுபாட்டை ஏற்படுத்திய, சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் பற்றிப் பேசுவதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

The programme, which has run since 2012, works with 142 police stations across all 9 provinces
ஆசியா பவுண்டேஷன்ஸ் அமைப்புடனான கூட்டிணைவுடன் அமுல்படுத்தப்படும், சமூகமயப்படுத்தப் பட்ட பொலிஸ் நிகழ்ச்சித்திட்டம், உள்ளூர் பொலிஸ் அணியினர் மற்றும் அவர்கள் சேவையாற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது. 2012 இலிருந்து செயற்படும், இந்தத் திட்டம், நாடு முழுவதிலுமான மூன்றிலொரு பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கியதாக, நாட்டின் அனைத்து 9 மாகாணங்களிலும் 142 பொலிஸ் நிலையங்களுடன் செயற் படுகின்றது. அதன் பல்வேறு குறிக்கோள்களிடையே, பொலிஸ் மீது நம்பிக்கையை அதிகரிப்பதற்கு பங்களிக்கும் சமூகப் பொலிஸ் உறவுகளை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட சமூக பொலிஸ் மன்றங்கள், துவிச்சக்கர வண்டி ரோந்துகள், முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற ஒரு பல் வகையான சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் நடைமுறைகளை நிகழ்ச்சித் திட்டம் அமுல்படுத்துகிறது. அத்தோடு இந்த நிகழ்ச்சித்திட்டம், பிரதானமாகத் தமிழ் பேசும் பிரதேசங்களில் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் குறித்து கூடுதலான கூருணர்வை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்துப் பகுதிகளிலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆகியோர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த விஜயம் தொடர்பாக, உயர் ஸ்தானிகர் கூறியது:
“இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் உள்ளூர்ச் சமூகங்கள் ஆகிய இரு தரப்புகளுடனும் பேசுவதில் நான் மகிழ்ச்சிடைகிறேன். பொலிஸார் மீதான அதிகரித்த நம்பிக்கை; மற்றும் குற்றங்களைக் குறைப்பதில் அவர்கள் ஆற்றக்கூடிய வகிபாகம் பற்றிய புரிதல் போன்ற சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் நிகழ்ச்சித்திட்டம் கொண்டு வந்த மாற்றங்கள் பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசினர். உள்ளூர்ச் சமூகம் மற்றும் சிவில் நிர்வாகம் என்பவற்றுக்கிடையிலான அதிகரித்த நம்பிக்கை நீண்ட கால நல்லிணக்கத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்த மாற்றம் நோக்கி, பொலிஸாருடன் இணைந்து ஆசியா பவுண்டேஷனால் முன்னெடுக்கப்படும் பணிகளை நான் வரவேற்கிறேன்.”