இங்கிலாந்தில் மோசடித் திருமணத்தில் இலங்கையர் கைது
சில நாட்களின் முன் ஹரோ பதிவு அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு மோசடித் திருமணத்துடன் தொடர்புடையதாக 23 வயதான இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் உட்துறை அலுவலக அமுல்படுத்தும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

He faces removal from the UK if found to have no permission to stay.
அவர் தனது நுழைவிசைவு அனுமதிக் காலம் கடந்து தங்கியதுடன் 21 வயதுடைய ஓர் இத்தாலியப் பெண்ணை திருமணம் செய்வதற்கும் இருந்தார்.
அவர்களது உறவுமுறை உண்மையானதாக இல்லாதிருக்கலாம் என்ற தகவலொன்றின் அடிப்டையில் செயற்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் இடையீடு செய்ததுடன் திருமணம் நடைபெறுவதையும் தடுத்தனர். இந்த நடவடிக்கை பதிவாளர் அத்தியட்சகரின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
‘மணப்பெண்’ அதிகாரிகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட வேளையில், இலங்கையைச் சேர்ந்த ஆண், அவரது வழக்கு முன்னெடுக்கப்படுவதினால் குடிவரவுப் பிணையில் இடப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதியைக் கொண்டிருக்க காணப்படாவிடின், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவதை அவர் எதிர் கொள்வார்.
ஓர் ஐரோப்பிய தேசத்தவர் அல்லாதவர் நீண்ட கால வதியும் நிலையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நன்மைகளைக் கோருவதற்காகவுமான முயற்சியின் ஒரு வழிமுறையாக ஐரோப்பிய பொருளாதார வலயத்தைச் சேர்ந்த யாரேனையும் திருமணம் செய்யும் போது உண்மையில் ஓர் மோசடித் திருமணம் அல்லது சிவில் சம்பந்தம் நிகழ்கின்றது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட முறைகள் திருமணம் மற்றும் சிவில் அபராத அறிவித்தல் காலத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என்பவற்றுக்கு 28 நாட்களுக்கும், மற்றும் சில சந்தர்ப்பங்களில் 70 நாட்களுக்கு நீடிப்பதையும் உள்ளடக்குகின்றது. இது, மோசடித் திருமணங்களை மேற்கொள்வதற்கு முயல்வோர்கள் குறித்து புலன்விசாரிப்பதற்கு, வழக்குத் தொடர்வதற்கு மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்குமான கூடுதலான கால அவகாசத்தை குடிவரவு அதிகாரிகள் மற்றும் பதிவாளர்களுக்கு அளிக்கும்.