மனித உரிமைகள் பேரவை 32, 2 ஆம் இலக்க உருப்படியின் கீழான அறிக்கை, 29 ஜூன் 2016
பொருள் 2 கீழ் ஐக்கிய இராச்சியம் அறிக்கை.
The Human Rights Council takes place at the Palais des Nations in Geneva
மனித உரிமைகள் பேரவை 32, 2 ஆம் இலக்க உருப்படியின் கீழான அறிக்கை, 29 ஜூன் 2016
நன்றி, தலைவர் அவர்களே.
ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை ஐக்கிய இராச்சியம் வரவேற்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டுத் தீர்மானங்களுக்கான இலங்கையின் உப அனுசரனை மற்றும் அதன் உள்ளடக்கங்களுக்கான உரிமையளித்தலும் ஒரு வரலாற்றுத் தருணங்களாகும். தீர்மானம் 30/1 அமுல்படுத்துதல் மூலமாக முரண்பாட்டு எச்சங்கள் மீது கவனம் செலுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நாம் வரவேற்கிறோம். அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீள்நிலைநாட்டி கடந்த கால சம்பவங்களைக் கையாள்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை மற்றும் ஓர் அரசியல் தீர்வை உருவாக்குதல் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியமாவையாகும்.
ஐ.நா விசேட விசாரணையாளர்களின் விஜயங்கள்; காணாமற்போன ஆட்களுக்கான ஓர் அலுவலகத்திற்கான ஒரு சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளமை; பலவந்தமாகக் காணாமற் போனவர்கள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஏற்று கைச்சாத்திட்டமை; அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறைகளின் ஒரு முன்னெடுத்தல்; மற்றும் சிவில் சமூகங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மேம்பட்ட சூழல் என்பவை உட்பட குறிப்பாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடனான அதிகரித்த ஈடுபாடுகளென இலங்கை மேற்கொண்ட முன்னேற்றங்களை அங்கீகரிப்பதில் மனித உரிமைகள் ஆணையாளருடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம். இவை பயனுறுதியாக இருப்பதற்கு ஏனைய அமைப்புகளினதும் ஒத்தழைப்பு மற்றும் மதித்தல் என்பன தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தேவை எனும் அவரது கருத்தையும் நாம் ஆமோதிக்கிறோம். எவ்வாறாயினும், அது மேற்கொண்ட அனைத்துப் பற்றுதிகளையும் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டியவை பல இன்னமும் உள்ளன. இந்தப் படிமுறைகள் துணிவானதும் மற்றும் தீர்க்கமானதுமான அரசியல் தலைமைத்துவத்தை தேவைப்படுத்தும். வடக்கில் இராணுவத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் பொதுமக்களின் கூடுதலான காணிகள் விடுவிக்கப்படுதல் வேண்டும். இயலுமான விரைவில் பயங்கரவாத்த் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்குதல் வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அதன் பற்றுறுதியைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் அர்த்தமுள்ள கலந்தாலோசனை மற்றும் பயனுறுதியான சாட்சிகள் பாதுகாப்பு என்பவற்றை அடிப்டையாகக் கொண்ட நம்பகமான இடைமாறுகால நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இன் முழுமையான அமுல்படுத்தலுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் பற்றுறுதியாக உள்ளதுடன் இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
பர்மாவில் ரொகிங்கியா முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினங்களைச் சேர்ந்த ஏனைய தனிப்பட்டவர்களின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கைக்காக நாங்கள் அவரிற்கு நன்றி பகிர்கிறோம். இந்தப் பேரவையில் பல சந்தர்ப்பங்களில் ராகினே நிலைமைகள் பற்றி அதன் கரிசனையை ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது. ஒரு நீண்ட காலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான மிகவும் பாரதூரமான பல கண்டறிதல்ளை அறிக்கை கொண்டுள்ளது. ராகினே தொடர்பாக புதிய அரசாங்கத்தின் முன்கூட்டிய முன்னெடுப்புகள் மற்றும் சமாதானச் செயன்முறைகளுக்கு மீளப் புத்துயிர் கொடுக்கும் அதன் முயற்சிகளை நாம் வரவேற்கிறோம். அறிக்கையின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் அவரது அலுவலகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதற்கு அவ்வரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
நன்றி, தலைவர் அவர்களே.